நாளைய பஞ்சாங்கம் 24-01-2022, தை 11, திங்கட்கிழமை, சஷ்டி திதி காலை 08.44 வரை பின்பு தேய்பிறை சப்தமி. அஸ்தம் நட்சத்திரம் பகல் 11.15 வரை பின்பு சித்திரை. சித்தயோகம் பகல் 11.15 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. நாளைய ராசிப்பலன் – 24.01.2022 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த வேலையையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும். […]
