கும்பம் ராசி அன்பர்களே..! இன்று சொந்த நலனில் அக்கறை ஏற்படும். எதார்த்த பேச்சு சிலரிடம் அதிருப்தியை உருவாக்கக் கூடும். ஒவ்வாத உணவுகளை தயவுச்செய்து உண்ண வேண்டாம். அரசு உதவி கிடைப்பதில் தாமதம் இருக்கும். கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். உங்களின் வேலையைக்கண்டு மற்றவர்கள் பொறாமை படுவார்கள். கடன் பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். செல்வநிலை உயரும். வருமானம் தாங்கள் எதிர்பார்த்ததைவிட கூடுதலாகவே கிடைக்கும். உடலில் சிறு உபாதை என்றாலும் உடனே மருத்துவரை அணுகவேண்டும், இதன்மூலம் பெரிய செலவினங்களை குறைக்கலாம். […]
