கடகம் ராசி அன்பர்களே..! தடைபட்ட சுபகாரியங்கள் யாவும் சிறப்பாக நிறைவேறும். தொழில் வியாபாரரீதியாக எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். இன்று அக்கம்பக்கத்தினர் உங்களிடம் அன்பு பாராட்டுவார்கள். அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். நண்பர்களின் தேவையை நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியை ஏற்படுத்துவீர்கள். யாரை நம்பியும் நீங்கள் இருக்க மாட்டீர்கள். உங்களின் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்துக் கொள்வீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். பெற்றோர்களின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள். […]
