குடும்ப நிகழ்ச்சிக்கு சென்ற தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ராக்சாம்பாளையத்தில் ராசு என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு செல்வன் என்ற மகன் இருந்தார். இவர் வெள்ளோடு பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து கமலா என்ற மனைவி இருக்கின்றார். இதில் செல்வன்-கமலா இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் செல்வனிடம் கோபித்துக்கொண்டு கமலா தனது 5 வயது மகனுடன் நத்தக்காட்டுவலசில் […]
