உக்ரைன் நாட்டின் ஜபோரிஜியா என்ற நகரத்தில் ரஷ்ய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யப்படையினர், உக்ரைன் நாட்டின் ஜபோரிஜியா நகரத்தில் நேற்று தாக்குதல் மேற்கொண்டனர். இதில் 23 பேர் உயிரிழந்ததாகவும், 28 நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் முதலில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்திருப்பதாகவும் 85க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தற்போது கூறியிருக்கிறார்கள். இந்த தகவலை அந்நகரத்தின் பிராந்திய ஆளுநராக இருக்கும் ஸ்டாருக் […]
