ராக்கெட் ஏவுதளம் பணிக்காக கூடல் நகர் கிராம மக்களுக்கான மறுகுடியமர்வு இடத்தை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அடுத்து பூமத்திய ரேகைக்கு மிக அருகில் குலசேகரன் பட்டினம் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட இருக்கின்றது. இதனால் முதல் கட்டமாக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதுடன் எல்லைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது. இதில் ஏராளமான அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்கள் கையகப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதற்கு அந்தந்த இடங்களில் அமைந்துள்ள மரங்களைப் பொறுத்து இழப்பீடு வழங்கப்பட்டு […]
