கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் எம்பியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்ததற்காக மூன்றாவது நாள் சுற்றுப்பயணமாக இன்று காலை கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து வயநாடு மானந்தவாடி காந்தி பூங்காவில் மகாத்மா காந்தியின் வாழ்க்கை சிலையைத் திறந்து வைத்தார். அப்போது பேட்டியளித்த அவர் “காந்தியிடம் மிகப் பெரிய சக்தி எதுவென்றால் […]
