இந்தியாவிலேயே தொழில்துறையில் தமிழகம் மிகச் சிறந்த மாநிலமாக திகழ்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6- ம் தேதி நடக்க இருக்கிறது. இதனால் தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருவதால், தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதன்படி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் தனது 3வது கட்ட பிரச்சாரத்தை தென்மாவட்டங்களில் தொடங்கியுள்ளார். […]
