வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் நடிகைகள் ராகினி, சஞ்சனாவிடம் வருமானவரித் துறையினர் விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கன்னட திரையுலகில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் நடிகைகள் ராகினி, சஞ்சனா கல்ராணி உட்பட 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நடிகைகள் இரண்டு பேரும் போதைப் பொருட்கள் பயன் படுத்தியதுடன் […]
