ஜப்பான் நாட்டின் தொழிலதிபர் 500 கோடி ரூபாய் செலவில் விண்வெளியில் சுற்றுலா செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார். கஜகஸ்தானில் இருக்கும் ரஷ்ய நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மூலமாக, ஜப்பான் நாட்டை சேர்ந்த யுசகு மேசவா என்ற பிரபல தொழிலதிபர், விண்வெளி சுற்றுலாவிற்கு முன் பதிவு செய்திருக்கிறார். அவரின் உதவியாளரான, யோசோ ஹிரோனோவும், அவருடன் விண்வெளி சுற்றுலாவிற்கு செல்லவிருக்கிறார். எனவே, இவர்கள் இருவருக்கும், கஜகஸ்தானில், ரஷ்ய விண்வெளி வீரரான அலெக்ஸாண்டர் மிஷர்கின் பயிற்சி கொடுத்து வருகிறார். யுசகு மேசவா, […]
