ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னியால் ஆரம்பிக்கப்பட்ட ஊழலுக்கு எதிராக போராடும் அமைப்பினை நீதிமன்றம் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னி ( 44 ) “ஊழலுக்கு எதிராக போராடும் அமைப்பு” என்ற அமைப்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ஆட்சிக்கு எதிராக உருவாக்கி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து கடந்த வருடம் நோவிசோக் என்ற வேதிபொருள் தாக்குதலால் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்ற நவால்னி தொடர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளார். […]
