Categories
Uncategorized உலக செய்திகள்

உக்ரைன் போர்…. ரொட்டி தொழிற்சாலை மீது நடத்தப்பட்ட தாக்குதல்… ஒருவர் உயிரிழப்பு…!!!

உக்ரைன் நாட்டில் ரொட்டி தொழிற்சாலையின் மீது ரஷ்யப் படைகள் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டதில் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் இருக்கும் கார்க்கிவ் பகுதியில் அமைந்துள்ள ரொட்டி தொழிற்சாலையின் மீது ரஷ்யப்படைகள், வெடிகுண்டு தாக்குதல் மேற்கொண்டதில், பாதிப்படைந்த கட்டிடத்திலிருந்து வான் உயரத்திற்கு கரும்புகை எழுந்திருக்கிறது. இந்த குண்டுவீச்சு தாக்குதலில் ஒரு நபர் பலியானதோடு 14 நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. கரும்புகை பரவியிருக்கும் நிலையில், மீட்பு குழுவினர் கடும் சிரமத்தோடு மீட்பு பணிகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவுக்கு உலக நாடுகள் கொடுத்த ஷாக்!…. ஐ.நா.வின் அதிரடி முடிவு….!!!!

ரஷ்யா, உக்ரைன் மீது 40 நாள்களுக்கு மேலாக போர் புரிந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உலக நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இருப்பினும் ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஜி 7 நாடுகள் ரஷ்யாவை ஐ.நா.விலிருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தன. இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பில் இருந்து ரஷ்யாவை நீக்க அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீதான […]

Categories
உலக செய்திகள்

ஐநா மனித உரிமைகள் அமைப்பில் இருந்து ரஷ்யா நீக்கம்….!! ஏற்க மறுக்கும் ரஷ்யா…!!

ஐநா மனித உரிமைகள் அமைப்பில் இருந்து ரஷ்யாவை நீக்க அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்ற நிலையில் 93 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 28 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதோடு 54 நாடுகள் வாக்களிக்கவில்லை. இந்தியாவும் ரஷ்யாவை எதிர்க்கும் தீர்மானத்தின் மீதான வரைவில் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் தீர்மானத்திற்கு ஆதரவாக இருந்ததால் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை நீக்கும் தீர்மானத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. சுமி பகுதியை விட்டு மொத்தமாக வெளியேறிய ரஷ்யப்படை….!!!

உக்ரைன் நாட்டின் சுமி பகுதியிலிருந்து ரஷ்ய படைகள் மொத்தமாக வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா தொடர்ந்து 41-ஆம் நாளாக உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து கொண்டிருக்கிறது. மேலும், ரஷ்ய படைகள் தலைநகர் கீவ் போன்ற முக்கிய நகர்களை கைப்பற்றுவதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டன. எனினும், உக்ரைன் படைகள் பலமாக தாக்குதல் நடத்தியதால் அவர்களால் கைப்பற்ற முடியவில்லை. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் சுமி பகுதியை விட்டு ரஷ்யப்படைகள் மொத்தமாக வெளியேறியதாக அப்பகுதியின் கவர்னர் தெரிவித்திருக்கிறார். அங்கு ரஷ்ய படைகள் […]

Categories
உலகசெய்திகள்

ரஷ்யா தற்காலிக இடைநீக்கம்… ஐநா சபை அதிரடி அறிவிப்பு…!!!!

மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக ஐநா சபை அறிவித்துள்ளது. ஐநா மனித உரிமைகள் கவுன்சில் ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நாற்பத்தி ஏழு உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமை கவுன்சில் உறுப்பினராக சேர ஐநா பொதுச் சபையில் 193 நாடுகளில் 3 ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதில் ரஷ்யாவின் உறுப்பினராக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் உலகின் மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த மனித உரிமை அமைப்பில் இருந்து ரஷ்யாவை நீக்க அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்க… கடன் கேட்டாரா ரஷ்ய தொழிலதிபர்…? வெளிவந்த உண்மை…!!!

ரஷ்ய தொழிலதிபர் தன் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க பிரிட்டன், அமெரிக்காவில் இருக்கும் நண்பர்களிடம் உதவி கேட்டதாக வெளியான தகவல்களை அவரின் செய்தி தொடர்பாளர் மறுத்திருக்கிறார். உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர் தொடுப்பதற்கு எதிராக அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை அறிவித்ததோடு, அங்குள்ள தொழிலதிபர்களின் சொத்துக்களை பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் முடக்கியது. இந்நிலையில் செல்சியா கால்பந்து கிளப் உரிமையாளரான ரோமன் அப்ரமோவிச், அமெரிக்காவில் இருக்கும் தன் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டதால் தன் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க […]

Categories
உலக செய்திகள்

உடனடியாக வெளியேறிவிடுங்கள்…. உக்ரைன் மக்களை எச்சரிக்கும் துணை பிரதமர்…!!!

உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக வெளியேறுங்கள் என்று துணை பிரதமர் வலியுறுத்தியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது 42-ஆம் நாளாக ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. ரஷ்ய படைகள், உக்ரைன் நாட்டின் எரிபொருள் கிடங்குகளில் ஏவுகணை தாக்குதல் நடத்தி அழித்திருக்கிறார்கள். இந்நிலையில் உக்ரைன் நாட்டின் துணை பிரதமரான Iryna Vereshchuk, வெளியேறுவதற்கு வாய்ப்புகள் இருக்கும் சமயத்திலேயே நாட்டின் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வெளியேறி விடுங்கள் என்று கூறியிருக்கிறார். இதில், டொனெட்ஸ்க், கார்கிவ், லுஹான்ஸ்க் போன்ற […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் நடக்கும் கொடூரங்கள்…. நிர்வாணமாக சடலங்கள்…வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்…!!!

உக்ரைன் நாட்டில், ரஷ்ய படைகள் மேற்கொண்ட கொடூரமான நிகழ்வுகளை வெளிப்படுத்தும் வகையில் சில புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. ரஷ்யப் படைகள் உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து சுமார் 43 நாட்களாக தொடர்ந்து போர் கொடுத்து வருகிறார்கள். இதில் மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டு வருகிறார்கள். போர்  தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரான லிசியா வலிலெங்கோ புகைப்படங்கள் சிலவற்றை தற்போது வெளியிட்டிருக்கிறார். #Ukraine will restore and rebuild. Every home, every road. We […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் தாக்குதல்…!! போப் பிரான்சிஸ் கடும் கண்டனம்….!!

உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பில் லட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக புச்சா நகரில் ஆயிரக்கணக்கானோர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீரர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு போப் பிரான்சிஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டில் இருந்து அவருக்கு அனுப்பப்பட்ட கறைபடிந்த உக்ரைன் தேசிய கொடியை போப் பிரான்சிஸ் ஆயிரக்கணக்கானோருக்கு முன்னிலையில் உயர்த்தி காட்டினார். உக்ரைன் போரில் இருந்து உயிர் தப்பிய சிறுவர்களை மேடைக்கு அழைத்து போப் பிரான்சிஸ் உரையாற்றினார்.

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் ரஷ்யப்படைகள் செய்த அட்டூழியம்… அதிபரின் சூழ்ச்சி….வெளிவந்த பின்னணி…!!!

ரஷ்யா, உக்ரைன் நாட்டில் மேற்கொள்ளும் போர்க்குற்றங்களின் ஆதாரங்களை அழிக்க சூழ்ச்சி  செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் உள்ள Bucha நகரத்தில் ரஷ்ய படையினர் மக்களை கண்மூடித்தனமாக தாக்கி கொலை செய்திருக்கிறார்கள். மேலும், வயது வரம்பின்றி பெண்களை, அவர்களது குடும்பத்தார் முன்னிலையிலேயே பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். உயிரிழந்தவர்களின் சடலத்தில் வெடிகுண்டுகளை கட்டி, குழிகளில் தூக்கி வீசியிருக்கிறார்கள். மேலும், பல கொடூர செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். ரஷ்யா இதற்கு பதில் அளித்தே தீரவேண்டும் என பல நாடுகள் வலியுறுத்தி வருகிறது. எனவே, […]

Categories
உலகசெய்திகள்

ஐந்தறிவு ஜீவனின் பாசம்…. ரஷ்ய ராணுவத்தால் உயிரிழந்த எஜமான்…. காவலுக்கு காத்திருந்த நாய்….!!

உக்ரைனில் ரஷ்ய படை வீரர்களால் கொல்லப்பட்ட தனது எஜமானருக்கு அருகே நாய் ஒன்று படுத்திருக்கும் புகைப்படம் காண்போர் மனதை உருகுலைய வைத்துள்ளது. உக்ரேனுக்கும், ரஷ்ய ராணுவத்துக்குமிடையே ஒரு மாத காலத்திற்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதில் அதீத பலம் வாய்ந்த ரஷ்யா உக்ரேனின் பல பகுதிகளில் குண்டு மழை பொழிந்து வருகிறது. இவ்வாறு இருக்க சமீபத்தில் ரஷ்யப் படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்விக்கு அருகேயிருக்கும் புச்சா, இர்பின் ஆகிய பகுதிகளிலிருந்து வெளியேறியுள்ளது. அவ்வாறு ரஷ்ய […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர் பதற்றம்!…. ராணுவ வீரர்கள் பற்றாக்குறை…. ரஷ்யா போட்ட பிளான்…..!!!!!

உக்ரைன் போரில் படைவீரர்கள் பல பேரை இழந்ததால், அவர்களது இடத்தை நிரப்ப அப்பாக்களை களமிறக்க ரஷ்யா முடிவு செய்து இருக்கிறது. அந்த வகையில் 60 வயது வரையுள்ள ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களை ராணுவத்தில் இணையுமாறு ரஷ்யா கேட்டுக் கொண்டுள்ளது. உக்ரைன் 18,300 ரஷ்யப்படை வீரர்கள் உக்ரைன் போரில் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ள சூழ்நிலையில், 15,000 ரஷ்யப் படையினர் இறந்து இருக்கலாம் என்று நேட்டோ அமைப்பு கருதுகிறது. எனவே இழந்த வீரர்களுக்கு பதிலாக போர் செய்வதற்காக ரஷ்யா முன்னாள் ராணுவ […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் பெண் தலைவர் குடும்பத்துடன் கொலை…!!! தொடரும் ரஷ்யாவின் அட்டூழியம்…!!

உக்ரைன் நாட்டில் தொடர்ந்து ஒரு மாதத்தை தாண்டியும் போர் நடைபெற்று வரும் நிலையில உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றி விட்டனர். அந்த வரிசையில் உக்ரைனின் மாட்டிசின் பகுதியை கைப்பற்றிய ரஷ்ய வீரர்கள் அப்பகுதியில் உள்ள பெண் தலைவர்களின் குடும்பத்தினரை கொலை செய்து புதைத்து விட்டதாக ஒரு பெரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மாட்டிசிம் பகுதியிலுள்ள ஒரு பெண் தலைவரின் கணவர் மற்றும் குழந்தைகளை சித்திரவதை செய்து பின்னர் அவர்களை கொன்று டிராக்டரால் ஒரு […]

Categories
உலக செய்திகள்

இரண்டாம் உலகப்போர் துப்பாக்கிகளை பயன்படுத்தும் ரஷ்யப் படைகள்….!! வெளியான தகவலால் பரபரப்பு…!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படை எடுப்பு ஒரு மாத காலத்தை தாண்டிய நிலையில் தற்போது அது இரண்டாவது கட்டத்தை நெருங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யப் படைகள் கீவ் நகரை கடந்து தற்போது உக்ரைன் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு ரஷ்ய வீரர்களில் பெரும்பாலானோர் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்திய துப்பாக்கிகளை தற்போது உபயோகப்படுத்துவதாகவும் ஒரு தகவலும் வெளியாகி உள்ளது. மூன்று நாட்களில் போரை முடித்து விடலாம் என அனுப்பப்பட்ட ரஷ்ய வீரர்கள் ஒரு […]

Categories
உலக செய்திகள்

ஆதாரங்களை மறைக்க முயல்கிறார்கள்…. ரஷ்யாவை குற்றம் சாட்டும் உக்ரைன் அதிபர்…!!!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புச்சா மற்றும் ஒரு சில நகரங்களில் நடந்த கலவரங்களின் ஆதாரங்களை ரஷ்யா மறைக்க முயல்வதாக கூறியிருக்கிறார். உக்ரைன் அதிபரான ஜெலன்ஸ்கி, ரஷ்யா குறித்து தெரிவித்திருப்பதாவது, புச்சா நகரில் 300க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால் மொத்த நகரத்தையும் கணக்கெடுத்தால் பலி எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும். ரஷ்யா, புச்சா மற்றும் சில நகரங்களில் நடந்த கலவரங்களில் இருக்கும் ஆதாரங்களை மறைக்க முயல்கிறது. அவர்கள் உண்மைகளை மறைக்க முயல்கிறார்கள். எனினும் அவர்களால், வெற்றி பெற […]

Categories
உலக செய்திகள்

இந்த நாடுகளுக்கு எதிராக…. ரஷ்ய அதிபர் பிறப்பித்த புதிய ஆணை…..!!!!!

நட்பற்ற நாடுகளுக்கு எதிராக ரஷ்யஅதிபர் புடின் புது ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது ரஷ்ய நட்பற்றதாக கருதும் நாடுகளில் இருந்து வரக்கூடிய குடிமக்களுக்கு விசா கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தும் ஆணையில் புடின் கையெழுத்திட்டு இருக்கிறார். அந்த ஆணை வரும் திங்கட்க்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், நார்வே, சுவிட்சர்லாந்து, டென்மார்க் மற்றும் ஐஸ்லாந்து போன்ற நாடுகளுக்கான ரஷ்யாவின் எளிமைப்படுத்தப்பட்ட விசா வழங்கும் திட்டத்தை இந்த ஆணை ரத்து செய்து உள்ளது. அதுமட்டுமல்லாமல் […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவுக்கு முடிவுகட்டும் பிளான்”…. ஸ்கெட்ச் போடும் அமெரிக்கா…. கசிந்த சீக்ரெட்….!!!!

ரஷ்யா ஒரு மாதத்திற்கும் மேலாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா, ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு முடிவு கட்டும் வகையில் புதிய தடைகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “ஒட்டுமொத்த உக்ரைனையும் ரஷ்யாவால் தனது கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. எனவே தெற்கு, கிழக்கு பகுதிகளில் ரஷ்யா தனது இலக்கை நிர்ணயித்துள்ளது” என்று கூறியுள்ளார். இந்த நிலையில் அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மனியிலிருந்து நாடு கடத்தப்படும் நபர்… காரணம் என்ன?… வெளியான தகவல்…!!!

ரஷ்ய நாட்டிற்காக உளவு பார்த்ததாக கூறப்பட்ட பிரிட்டனை சேர்ந்த நபர் ஜெர்மனியிலிருந்து நாடு கடத்தப்படவிருக்கிறார். பெர்லினில் இருக்கும் பிரிட்டன் தூதரகத்தில் பாதுகாவலராக இருந்த டேவிட் ஸ்மித், பிரிட்டன் அதிகாரிகளின் பெயர்கள் உட்பட சில தகவல்களை ரஷ்ய உளவாளிகளிடம் கொடுத்து பணம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டார். எனவே, அவரை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கைது செய்தனர். காவல்துறையினர் அவரின் வீட்டை சோதனை செய்தபோது, அங்கு ரஷ்ய நாட்டின் கொடி, சோவியத் ராணுவ தொப்பிகள், ரஷ்ய மொழியில் நிறைய […]

Categories
உலக செய்திகள்

சடலங்களையும் விட்டுவைக்காத ரஷிய வீரர்கள்…!!! அம்பலமான கொடூரம்….!!

உக்ரைனின் சில பகுதிகளில் இருந்து வெளியேறிய ரஷ்ய வீரர்கள் அங்கு கொல்லப்பட்டு கிடக்கும் சடலங்களின் உடலில் வெடிகுண்டுகளை புதைத்து வைத்துவிட்டு சென்று சம்பவம் உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சடலங்களை மற்றவர்கள் அசைப்பதன் மூலம் இதில் உள்ள வெடிகுண்டுகள் வெடிக்கும் அபாயம் ஏற்படும். இவ்வாறு செய்வதன் மூலம் மேலும் அழிவை ஏற்படுத்த ரஷ்ய வீரர்கள் திட்டமிட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. கண்டெடுக்கப்பட்டுள்ள சடலங்கள் அனைத்தும் கைகள் கட்டப்பட்ட நிலையில் மிக அருகாமையில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கொலை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய படையெடுப்பால்….!!! உக்ரைன் சந்தித்துள்ள பொருள் சேதம்….!! விரிவான புள்ளி விபரம் இதோ…..!!!

உங்களின் மீதான ரஷ்யாவின் தாக்குதல் ஒரு மாதத்தை கடந்து தொடர்ந்து வரும் நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கார்கீவ் ஆகிய பகுதிகளை ரஷ்ய ராணுவம் தரைமட்டமாக்கி உள்ளது. இந்நிலையில் பல நாடுகளின் உதவியுடன் உக்ரைனும் ரஷ்யாவிற்கு சரிசமமாக போரிட்டு வருகிறது. இந்த தாக்குதலில் 18 ஆயிரத்து 300 ரஷ்ய வீரர்கள் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் 147 விமானங்கள்,134 ஹெலிகாப்டர்கள்,647 டாங்கிகள், 1844 ராணுவ வீரர்களை ஏற்றிச் செல்லும் கனரக […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய நாட்டிடம் எரிபொருள் வாங்குவதை நிறுத்த மாட்டோம்…. -ஜெர்மன் அரசு…!!!

ஜெர்மன் அரசு, ரஷ்ய நாட்டிடமிருந்து எரிபொருள் வாங்குவதை இப்போது நிறுத்த முடியாது என்று கூறியிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 41-ஆம் நாளாக தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு உக்ரைன் படைகளும் தகுந்த பதிலடி கொடுக்கிறது. எனினும் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும்  ஆயுத உதவிகளும் செய்து வருகின்றன. மேலும் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகளை அறிவித்தன. எனவே, ரஷ்ய அரசு தங்களிடம் […]

Categories
உலக செய்திகள்

போர் விமானங்களை ஒப்படைத்து சரணடையும் ரஷ்ய வீரர்களுக்கு வெகுமதி….!!! உக்ரைன் அதிரடி அறிவிப்பு….!!

உக்ரைன் நாட்டின் டாங்கிகள் மற்றும் போர் விமானங்களை ஒப்படைக்கும் ரஷ்ய வீரர்களுக்கு 75 லட்சம் முதல் ஏழரை கோடி வரை வெகுமதி வழங்கப்படும் என உக்ரைன் அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக உக்ரைன் நாட்டின் சபாநாயகர் கோர்நியன்கோ நாடாளுமன்றத்தில் உக்ரைன் அரசிடம் சரணடையும் ரஷ்ய வீரர்கள் தங்களுடைய பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ள நினைத்தால் அதற்கு அரசாங்கம் முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என கூறியுள்ளார். அதன்படி போர் கப்பல் அல்லது போர் விமானத்தை ஒப்படைக்கும் ரஷ்ய வீரருக்கு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் அட்டூழியங்களை கண்டித்து….!! கடும் கோபத்துடன் அறிக்கையை வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியம்…!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் அட்டூழியங்களை கடுமையாக கண்டிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, உக்ரைன் முழுவதும் மக்கள் மோசமான நிலையில் படுகொலை செய்யப்பட்டிருப்பது பற்றிய அந்நாட்டின் அதிபருடன் உரையாற்றினேன். ரஷ்ய ஆயுதப் படைகளால் செய்யப்பட்ட குற்றங்களை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக கண்டிக்கிறது. புச்சா மற்றும் பிற நகரங்களில் நடந்த அட்டூழியங்கள் ஐரோப்பிய மண்ணின் கருப்பு பட்டியலில் பொறிக்கப்படும். உக்ரைனுக்கு […]

Categories
உலக செய்திகள்

தொடரும் ரஷ்யாவின் அட்டூழியம்…!! வெளியான செயற்கைக்கோள் புகைப்படம்….!!

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கி 5 வாரங்களாக போர் நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யா தனது படைகளை டான்பாஸ் நகரை நோக்கி நகர்த்தி உள்ளது. இந்நிலையில் உக்ரைனின் முக்கிய நகரமான புச்சாவில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் அங்கும் இங்குமாக சிதறி கிடக்கும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து புகார் நகரத்தின் துணைமேயர் தாராஸ் ஷப்ரவ்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில், புச்சா நகரின் சாலையில் 300க்கும் மேற்பட்ட மனித உடல்கள் அங்குமிங்கும் சிதறி கிடப்பதாகவும், […]

Categories
உலக செய்திகள்

ஏவுகணை தாக்குதல் நடத்திய உக்ரைன் படைகள்…. ரஷ்ய போர்க்கப்பல் அழிப்பு…!!!

உக்ரைன் படைகளின் ஏவுகணை, ரஷ்யாவின் போர்க்கப்பல் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய படைகள், உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 40-ஆம் நாளாக போர் தொடுத்து வருகிறது.  இதில் உக்ரைனின் Odesa என்ற துறைமுக நகரின் மீது தீவிரமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்நகர் மீது தாக்குதல் மேற்கொண்ட Admiral Essen என்ற ரஷ்யாவின்  போர்க்கப்பல் மீது உக்ரேன் படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த கப்பலில் இருந்த ரஷ்ய படைகளின் நிலை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் போர்க்கப்பல் ஏவுகணை கொண்டு அழிப்பு…!! சரியான பதிலடி கொடுத்த உக்ரைன் ராணுவம்…!!

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து 40 நாட்கள் கடந்துள்ள நிலையில் ரஷ்யாவின் போர்க்கப்பலை உக்ரைன் ஏவுகணை தாக்குதல் செய்து அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே உக்ரைனின் துறைமுக நகரமான ஒடிசா நகரில் ரஷ்ய ராணுவம் பயங்கர தாக்குதல் நடத்தி சின்னா பின்னமாக்கியுள்ளது. இந்த தாக்குதல் கருங்கடலில் நிலை நிறுத்தப் பட்டிருக்கும் ரஷ்யாவின் Admiral Essen போர்க் கப்பல் மூலமாக சாத்தியமானது. இந்நிலையில் கடலில் உள்ள Admiral Essen போர்க் கப்பலை உக்ரைன் ராணுவம் ஏவுகணை மூலம் தாக்கி […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யா இனப் படுகொலை செய்கிறது…!!” உக்ரைன் அதிபர் பகிரங்க குற்றச்சாட்டு…!!

உக்ரைனின் கீவ் நகர புதைகுழிகளில் இருந்து 400 க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ரஷ்ய ராணுவ வீரர்கள் உக்ரைன் மக்களை கொடூரமான முறையில் கொலை செய்து குழிகளில் புதைத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உக்ரைன் அதிபர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, உக்ரைன் நகரில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இனத்தை சேர்ந்த மக்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அளிக்கப்பட்டு வருகின்றனர். ரஷ்யாவின் கொள்கைக்கு நாங்கள் உடன்படாத ஒரே காரணத்திற்காக அவர்கள் தங்களுடைய பெரும்பான்மையை நிரூபிப்பதாக கூறி […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் பயங்கரம்…. வீட்டை நோக்கி வந்த குண்டு…. அதன் பின் நேர்ந்த கொடூரம்…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யப்படைகள் வீசிய வெடிகுண்டில் இரண்டு சிறுவர்களும் அவர்களின் தாயும் காயமடைந்துள்ளனர். உக்ரைன் நாட்டின் Dnipropetrovsk Oblast என்ற பகுதியைச் சேர்ந்த Olena என்ற பெண், ரஷ்யப்படைகள் வீசியெறிந்த குண்டு தன் வீட்டை நோக்கி வருவதை ஜன்னல் வழியே பார்த்துள்ளார். வீடு வெடித்து சிதற போவதை அறிந்த அவர், உடனடியாக தன் இரட்டை பிள்ளைகளை அழைத்து தனக்கு அடியில் வைத்து மறைத்து கொண்டு கவிழ்ந்திருக்கிறார். அதற்குள் குண்டு வெடித்து, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறிவிட்டது. அதற்குப் […]

Categories
உலக செய்திகள்

இதை நாங்கள் நிறுத்துகிறோம்…. ரஷ்யா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு…!!!!!

ரஷ்யா சர்வதேச விண்வெளி நிலையத்தில் தனது ஒத்துழைப்பை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்யா சர்வதேச விண்வெளி நிலையத்தில் தனது ஒத்துழைப்பை நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது. இதுதொடர்பான தகவலை ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ் கோஸ்மோஸின் தலைவர் டிமிட்ரி ரோகோசின் வெளியிட்டிருக்கிறார். இதன் மூலமாக நாசா, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்ஸி  மற்றும் கன்னட விண்வெளி ஏஜென்ஸி நிறுவனம் உடனான பங்களிப்பும் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி டிமிட்ரி பதிவில் சர்வதேச விண்வெளி நிலையத்தின் கூட்டாளிகளின் மற்றும் கூட்டுத் திட்டங்களுக்கு இடையிலான […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் செயல் மனிதநேயத்தை மீறியது…!! ஜப்பான் அதிபர் கடும் தாக்கு….!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகள் செய்து வரும் அத்துமீறிய செயலைக் கண்டித்து பல நாட்டு தலைவர்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “சர்வதேச சமூகத்துடன் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராக கூடுதல் தடைகளை பிறப்பித்திருக்கும் அதே வேளையில் ஜப்பான் தனிப்பட்ட முறையில் என்ன செய்ய வேண்டும் என்பதை உறுதியாக செயல்படுத்தும். சர்வதேச சட்டத்தை மீறும் ரஷ்யாவின் இந்த […]

Categories
உலக செய்திகள்

சுகோய்-சு-35 விமானம்…. சுட்டு வீழ்த்திய உக்ரைன் ராணுவம்…. புகைப்பட காட்சிகள் வெளியீடு……!!!!!!

ரஷ்ய நாட்டின் ஆக்ரோஷமான போர் விமானம் சுகோய்சு-35 உக்ரைன் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. ரஷ்யா-உக்ரைன் போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய ராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் உக்ரைன் ராணுவம் வலுப்பெற்று உள்ளது. சமீபத்திய காட்சிகள் ரஷ்யாவின் beast-attacking aircraft என அழைக்கப்படும் சுகோய்சு 35 போர் விமான Izium நகருக்கு அருகில் உக்ரைன் இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட காட்சிகள் அணுகப்பட்டது. அவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த விமானத்தின் படங்களில் இருந்து சுகோய் சுட்டு வீழ்த்தப்பட்டதையும் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!…. ரஷ்யாவுக்கு இந்த நிலைமையா?…. திணறும் மக்கள்….!!!!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒரு மாத காலமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்து வருகின்றன. இதனால் ரஷ்யாவின் ரூபிள் மதிப்பு உலக சந்தையில் பெரும் சரிவை சந்தித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. ரஷ்ய நாட்டின் சராசரி மாத வருமானமான 540 பவுண்ட்கள் என்பது இங்கிலாந்து நாட்டின் கால்பகுதி மதிப்பு ஆகும். ஜனவரி மாதத்தில் தொலைக்காட்சி பெட்டிகள் 150 […]

Categories
உலக செய்திகள்

“புதின்” மான் கொம்புகளின் இரத்தத்தில் குளித்தாரா…? சர்ச்சையை கிளப்பிய தகவல்….!!

தடை செய்யப்பட்ட ரஷ்ய பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் அதிபர் புதின் மான் கொம்புகளிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்தினை குளித்ததாக கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரஷ்ய பத்திரிக்கை நிறுவனமான ப்ரோகெட் கடந்த ஜூலை மாதம் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நிறுவனம் தற்போது ரஷ்ய அதிபர் புதின் குறித்து அதிர்ச்சி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அதிபர் புதின் தைராய்டு மற்றும் புற்றுநோய் நிபுணர்களுடன் தனது மருத்துவ பயணத்தை மேற்கொண்ட போது மான் கொம்புகளின் ரத்தத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்தில் குளித்ததாக […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனின் ஒடேசா நகரில் தொடரும் ரஷ்ய தாக்குதல்….!!! அழிந்து நாசமான எண்ணெய் கிடங்குகள்….!!

உக்ரைனில் உள்ள ஒடேசா நகரின் துறைமுகத்தில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மூன்று எரிபொருள் கிடங்குகளின் மீது ரஷ்ய ராணுவம் இன்று பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளது இதில் மூன்று எரிபொருள் கிடங்குகளும் எரிந்து நாசமாகி உள்ளன. இதனை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிசெய்துள்ளது. அழிக்கப்பட்ட இந்த எரிபொருள் கிடங்கில் இருந்து தான் மைக்கோலேவ் நகரில் உள்ள உக்ரைன் படைகளுக்கு எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை தடுக்க அணு ஆயுதங்களை நிலை நிறுத்துவோம்….!! பிரபல நாடு பரபரப்பு பேட்டி…!!!

ரஷ்ய ஆக்கிரமிப்புகளை தடுக்க அணுஆயுதங்களை நிலைநிறுத்த உள்ளதாக போலந்து தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 39 வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் அந்நாட்டின் துறைமுக நகரமான Odesa மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருகிறது. எனவே ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடை விதித்துள்ளன. என்னதான் இருநாடுகளும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும் மறுபுறம் ரஷ்ய அணு ஆயுத தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக சிலர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புகளை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா ஆக்கிரமித்த பகுதியை மீட்ட உக்ரைன்…. அணுமின் நிலையத்தில் கொடி ஏந்தி நின்ற வீரர்…!!!

செர்னோபிலில் உக்ரைன் நாட்டின் ஒரு ராணுவ வீரர், கொடி ஏந்தி கொண்டு நின்ற புகைப்படம் வெளியாகியிருக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் போரை தொடங்கிய போது, ஆக்கிரமித்த ப்ரிபியாட் பகுதியை உக்ரைன் மீண்டும் கைப்பற்றி விட்டது. இதனை அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். கடந்த வாரத்தின் கடைசியில் ரஷ்ய வீரர்கள் செர்னோபில் அணுமின் நிலையத்திலிருந்து வெளியேறி விட்டதாக உக்ரைன் தெரிவித்தது. கடும் இழப்பாலும், கதிர்வீச்சு பாதிப்பாலும், படைகள் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது. ரஷ்யப்படை பின்வாங்கியது, உக்ரைனின் முக்கியமான வெற்றி என்று […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய விமானம் சிறைபிடிப்பு…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…. வெளியான அறிவிப்பு…..!!!!!

ரஷ்யா உடன் தொடர்புடைய ஜெட் விமானத்தினை பறக்கவிடாமல் பிரித்தானிய அதிகாரிகள் தடுத்து சிறை பிடித்து இருப்பதாக நாட்டின் போக்குவரத்துறை செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்து உள்ளார். லண்டன் விமான நிலையத்தில் இருந்து குறித்த ஜெட் விமானத்தை அங்கு இருந்து புறப்படவிடாமல் பிரித்தானிய போக்குவரத்து அதிகாரிகள் தடுத்து உள்ளனர். அதுமட்டுமல்லாமல் ரஷ்யா உடன் தொடர்பில் உள்ள விமானங்களுக்கு பிரித்தானியா விதித்திருக்கும் தடையினை ஜெட் மீறியதாஎன்பது குறித்து அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். அந்த விமானமானது ரஷ்ய தொழில் அதிபர் ஒருவருக்கு […]

Categories
உலக செய்திகள்

ஆழம் தெரியாம காலை விட்ட ரஷ்யா…. ஆயுதங்கள் இன்றி தவிப்பு…. லீக்கான தகவல்…..!!!!!

உக்ரை நாட்டிற்கும் நுழைந்த ரஷ்யா, உக்ரைனிடம் இதுவரையிலும் 142 விமானங்கள், 131 ஹெலிகொப்டர்கள் மற்றும் 625 tankகளை இழந்துள்ளது. தற்போது ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ள அடுத்த பிரச்சினை என்னவெனில் அதனிடம் ஆயுதங்கள் காலியாகி வருகிறது. இதில் ரஷ்யாவின் சில ஹெலிகொப்டர்கள், ஜெட் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் உக்ரைனால் தயாரிக்கப்பட்டவை (அல்லது) உக்ரைனில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்களால் உருவாக்கப்பட்டவை ஆகும். இத்தகவலை பிரித்தானிய பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த ஒருவர் நேற்றிரவு வெளியிட்டுள்ளார். ரஷ்யா பயன்படுத்தும் ஆயுதங்களின் பெரும் அளவிலான பாகங்கள் உக்ரைனால் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபர் புதினுக்கு வேட்டு….!! நெருக்கமானவர்களே செய்யும் சதி…!!

ரஷ்ய அதிபர் புதினை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதற்காக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் திட்டம் தீட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வாதிகார எண்ணம் கொண்ட ரஷ்ய அதிபர் புதினை அகற்றுவதற்காக தான் உக்ரைன் மீதான மீதான போரை தூண்டி விட்டதாகவும், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் அவரை அகற்ற திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்ட கீவ் நகரம் முழுவதும் தற்போது உக்ரைன் போர் வீரர்களால் மீட்க்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் இந்த ரகசிய கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

நெத்தியடி கொடுத்த உக்ரைன்…!! ஆயுத பற்றாகுறை….!! திணறி வரும் ரஷ்ய ராணுவம்…!!

ரஷ்யாவுக்கு தேவையான பெரும்பாலான ராணுவ ஆயுதங்களை உக்ரைன் தான் தயார் செய்து கொடுத்து வந்த நிலையில், உக்ரைன் ரஷ்ய போர் காரணமாக தற்போது உக்ரைனில் இருந்து ஆயுதங்கள் அனுப்பப்படாததால் ரஷ்ய வீரர்கள் திணறி வருவதாக தெரியவந்துள்ளது. உக்ரைன் வீரர்கள் துணிச்சலோடு செயல்பட்டு ரஷ்ய வீரர்களை தலைநகரிலிருந்து வெளியேற்றி விட்டனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் மீதான ரஷ்ய போர் தொடங்கிய நாள் முதல் இதுவரை 143 விமானங்கள், 131 ஹெலிகொப்டர்கள், 625 டாங்கிகள், 316 […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் தொடரும் அவலம்….!! 300 உடல்கள் ஒரே இடத்தில் புதைப்பு….!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒரு மாதங்களை கடந்த நிலையில் இந்தப் போரின் விளைவால் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளனர். அந்த வகையில் உக்ரைனின் புச்சா நகரில் 280 பேரின் உடல்களை ஒரே இடத்தில் புதைத்து உள்ளதாக அந்த பகுதியின் மேயர் அனடோலி பெடோருக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, “புச்சா நகரின் தெருக்களில் ஒரே இடத்தில் குவியலாக 20 ஆண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் தலையின் பின்புறத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு பலியானவர்கள். […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் ஆக்ரோஷமான போர்…. தரைமட்டமாகிய மரியுபோல் நகரம்…. லீக்கான தகவல்…..!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யா போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இவ்வாறு ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக ஆயிரக்கணக்கில் உக்ரைன் நாட்டில் கலாச்சார சின்னங்கள் சேதமடைந்து இருக்கிறது. அந்த வகையில் தேவாலயங்கள், வரலாற்று கட்டிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் உட்பட ஆயிரக்கணக்கான கலாச்சார சின்னங்கள் போர் காரணமாக சேதமடைந்து உள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனின் மரியுபோல் நகரமே தரைமட்டமாகி இருக்கிறது. மேலும் கட்டிடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், வீடுகள் என ரஷ்ய படைகள் பாரபட்சம் இன்றி தாக்குதலை நடத்திய […]

Categories
தேசிய செய்திகள்

சலுகை விலையில் கிடைக்கும்போது வாங்கினால் என்ன?…. நிர்மலா சீதாராமன் சொன்ன முக்கிய தகவல்….!!!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது, “நமக்கு அனைத்தையும் விட நமது எரிபொருள் பாதுகாப்பே முக்கியம். எரிபொருள் சலுகை விலையில் கிடைக்கும் போது அதனை நாம் ஏன் வாங்க கூடாது ? தற்போது எரிபொருள்களை ரஷ்யாவிடமிருந்து வாங்க தொடங்கியுள்ளோம். இந்தியாவுக்கு ஒரு சில பேரல்கள் வந்து சேர்ந்துள்ளது. விநியோகம் இன்னும் 3 – 4 நாட்களில் ஆரம்பமாகும். இந்தியாவின் ஒட்டுமொத்த நலனையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று […]

Categories
உலக செய்திகள்

நாசி வழியே செலுத்தக்கூடிய… முதல் கொரோனா தடுப்பூசி… அனுமதியளித்த ரஷ்யா…!!!

ரஷ்யா, நாசி வழியே செலுத்தக்கூடிய ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. கொரோனா பரவலுக்கு அவனுக்கு எதிராக ஸ்புட்னிக் வி தடுப்பூசியை மாஸ்கோவில் இருக்கும் கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் மையத்தின் ஆய்வாளர்கள் தயாரித்துள்ளனர். ரஷ்யா உள்ளிட்ட 60க்கும் அதிகமான நாடுகளில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை  மக்களுக்கு அளித்துள்ளனர். மத்திய அரசு ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்தது. கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் ரஷிய சுகாதார அமைச்சகமானது,  கமலேயா மையத்திற்கு, நாசி […]

Categories
உலக செய்திகள்

ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கிராம மக்கள்…!! உக்ரைனில் நெகிழ்ச்சி சம்பவம்..!!

ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்ட உக்ரைன் கிராமங்களை மீட்ட உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு அந்த கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்ட உக்ரைன் Irpin நகரமும், Kyivக்கு அருகில் உள்ள Hostomel விமான தளமும் உக்ரைன் வீரர்களால் மீட்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் செர்னோபில் அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதியையும் உக்ரைன் வீரர்கள் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர். அதேபோல் ரஷ்ய வீரர்களால் கைப்பற்றப்பட்ட கிராமம் ஒன்றை உக்ரைன் வீரர்கள் மீட்டதைத்தொடர்ந்து அந்த […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் நற்பெயருக்கு ஆபத்து ஏற்படும்….!! ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் கருத்து…!!

ரஷ்யாவிற்கு உதவினால் சீனாவின் நற்பெயருக்கு ஆபத்து வரும் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவை கண்டித்து மேற்கத்திய நாடுகள் அதன் மீது பொருளாதார தடையை விதித்துள்ளன. இந்த சர்வதேச தடைகளை நீக்க ரஷ்யாவிற்கு உதவும் பட்சத்தில் சீனாவின் நற்பெயருக்கு ஆபத்து வரும் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் […]

Categories
உலக செய்திகள்

முடிவுக்கு வருமா உக்ரைன் ரஷ்ய போர் …?? காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை…!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து 37வது நாளாக போர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது சமரச பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் அலுவலகமும் உறுதிபடுத்தியுள்ளது. ஏற்கனவே ரஷ்யா மற்றும் உக்ரைனை சேர்ந்த பிரதிநிதிகளுக்கு இடையே துருக்கியில் நடைபெற்ற சமரச சந்திப்பிற்கு பிறகு மூன்று நாட்கள் கழித்து தற்போது இந்த காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய எண்ணெய் கிணறுகளில் உக்ரைன் ராணுவம் தாக்குதல்…!! கொழுந்து விட்டு எரியும் தீயால் பரபரப்பு…!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து 37வது நாளாக போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் வான் பரப்புக்குள் உக்ரைன் ராணுவம் புகுந்து எண்ணெய்க் கிணறுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவில் உள்ள பெல்கோரோட் என்னும் பகுதியில் அமைந்திருக்கும் என்னை கிணற்றின் மீது உக்ரைன் ராணுவம் நடத்திய தாக்குதலில் எண்ணெய் கிணறு கொழுந்துவிட்டு எரிகிறது. இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 120க்கும் மேற்பட்ட தீயணைப்பு பணியாளர்கள் என்னை கிடங்குகளில் பற்றி எரியும் தீயை […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் தொடரும் அவலம்….!! ராணுவ வீரர்களை பிணை கைதிகளாக பிடித்துச் சென்ற ரஷ்ய படையினர்….!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடர்ந்து 37வது நாளாக நடைபெற்று வருகின்ற நிலையில் போரை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஆனால் எந்த முயற்சியும் எடுபடவில்லை. இந்நிலையில் உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள பிரிப்யாட் நகர் அருகே செர்னொபெல் அணு உலையை வீரர்கள் கைப்பற்றினர். ஏற்கனவே இந்த அணு உலையில் 1986ம் ஆண்டு ஏற்பட்ட மாபெரும் விபத்து காரணமாக செயல்படாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் தற்போது செயல்பட்டு […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர்: அகதிகளாக வெளியேறும் பொதுமக்கள்…. இப்போ வர எவ்ளோ பேர்னு தெரியுமா…? தகவல் வெளியிட்ட ஐ.நா….!!

உக்ரேன் மீது ரஷ்யா நடத்தும் இராணுவ நடவடிக்கையால் அந்நாட்டிலிருந்து தற்போது வரை 40 லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐநா தகவல் வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் அதிக பலம் வாய்ந்த ராணுவ படைகள் உக்ரேன் மீது போர் தொடுத்து வருகிறது. இந்தப் போர் 6 ஆவது வாரமாக நீடித்து வருகிறது. இந்த போரினால் உணவு, உறைவிடம் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளின்றி தவித்து வந்த அந்நாட்டு மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகிறார்கள். அதன்படி தற்போது வரை உக்ரேனிலிருந்து […]

Categories

Tech |