Categories
உலக செய்திகள்

ஹிட்லரை போன்று சித்ரவதை செய்கிறார்… புடின் மீது உக்ரைன் அதிபர் கடும் குற்றச்சாட்டு…!!!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யப் படைகள் தங்கள் நாட்டின் தெற்கு பகுதிகளை சூறையாடியிருப்பதாக கூறியதோடு மக்களை கடத்தி கொடுமைப்படுத்துவதாக கூறியிருக்கிறார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முகநூல் தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் தங்கள் நாட்டின் தெற்குப் பகுதிகளை ரஷ்ய படைகள் நிலைகுலையச் செய்திருப்பதாக கூறியிருக்கிறார். அங்கு அதிபர் விளாடிமிர் புடின் சித்திரவதை முகாம்களை உருவாக்கியிருக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தங்கள் நாட்டின் அரசாங்க பிரதிநிதிகளை ரஷ்யப்படைகள் கடத்துவதாகவும் கூறியிருக்கிறார். உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

இறுதி வரை போராடுவோம்…. ரஷ்யாவின் மிரட்டலுக்கு அஞ்சாத உக்ரைன் வீரர்கள்…!!!

ரஷ்யா, சரணடைந்து விடுங்கள் அல்லது உயிரிழப்பீர்கள் என்று எச்சரித்தும், சிறிதும் அச்சமின்றி சரணடைய போவதில்லை என்று மீதமுள்ள உக்ரைன் வீரர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ரஷ்யப்படைகள், நேற்று காலை 6 மணிக்குள் சரணடைந்து விடுங்கள் அல்லது உயிர் பலி ஏற்படும் என்று மரியுபோல் நகரில் இருக்கும் உக்ரைன் படைகளை எச்சரித்திருந்தது. மேலும் மதியம் ஒரு மணி அளவில் ஆயுதங்களை போட்டுவிட்டு மொத்தமாக வெளியேறி விடுங்கள் என்றும் எச்சரித்தது. ஆனால், அதனை சிறிதும் கண்டுகொள்ளாத உக்ரைன் வீரர்கள், இறுதிவரை போராடுவோம் என்று […]

Categories
உலக செய்திகள்

கடும் கோபமடைந்த புடின் கேட்ட கேள்வி…. மாரடைப்பில் சரிந்த பாதுகாப்புத்துறை அமைச்சர்…!!!

ரஷ்யாவின் பாதுகாப்பு துறை அமைச்சரான செர்ஜெய் ஷிகோவிடம் அதிபர் புடின் உக்ரைன் நாட்டின் முக்கிய நபர்களை ஏன் ஆக்கிரமிக்க முடியவில்லை? என்று கோபத்துடன் கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர்தொடுக்க தொடங்கியது. அந்நாட்டின் பல முக்கிய நகர்களில் தாக்குதல் மேற்கொண்டு நிலைகுலையச் செய்திருக்கிறது. எனினும், உக்ரைனின் பெரிய நகர்களை ரஷ்யாவால் கைப்பற்ற முடியவில்லை. எனவே, ரஷ்யா இந்தப் போரில் ஏறக்குறைய முதல்கட்ட தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் விவகாரம்… போலந்து எல்லையில் காத்துக்கிடக்கும் லாரிகள்… வெளியான வீடியோ…!!!

ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளைச் சேர்ந்த சரக்கு லாரிகள் போலந்து நாட்டின் எல்லைப் பகுதியில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர் தொடுத்திருப்பதால், ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளை சேர்ந்த சரக்கு லாரிகளுக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தன. எனவே, போலந்து நாட்டு எல்லைப்பகுதியான Kukuryk-Kozlovichi-ல் நீண்ட தொலைவிற்கு அதிக லாரிகள் காத்து கொண்டிருக்கின்றன. விரைவாக கெட்டுப்போகக் கூடிய சாப்பாடுகளும் மருந்து பொருட்களும் இருப்பதால் ஓட்டுநர்கள் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் அவர்கள் […]

Categories
உலக செய்திகள்

“பழிக்கு பழி”…. ரஷ்யா-உக்ரைன் இடையே தீவிரமடையும் போர்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

ரஷ்யா, உக்ரைன் மீது கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் உக்ரைன், ரஷ்யாவின் மாஸ்க்வா கப்பலை ஏவுகணை தாக்குதல் நடத்தி மூழ்கடித்ததாக அறிவித்துள்ளது. இதற்கு அடுத்த மறுநாளே உக்ரைனின் தலைநகரான கீவ்வில் ரஷ்யா பயங்கர தாக்குதலை முன்னெடுத்துள்ளது. மேலும் அந்நாட்டில் உள்ள ஏவுகணைகள் உள்ளிட்ட […]

Categories
உலக செய்திகள்

நேட்டோ படைத்தளத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்?…. லார்ட் ரிக்கெட்ஸ் எச்சரிக்கை…..!!!!

உக்ரைனுக்கு வழங்கப்படும் ஆயுதங்களை தடுக்கும் அடிப்படையில் நேட்டோ தளங்களின் மீது ரஷ்யபடைகள் தாக்குதல் நடத்தலாம் என்று முன்னாள் பிரித்தானிய பாதுகாப்புத்துறை தலைவர் எச்சரித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்ரோஷமான போர் தொடர்ந்து வருகிறது. இந்தநிலையில் அந்நாட்டுக்கு ஆதரவாக மேற்கு நாடுகளிலிருந்து அளிக்கப்படும் ஆயுத உதவிக்களை தடுக்க நேட்டோபடைத் தளத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக முன்னாள் பிரித்தானிய பாதுகாப்புத்துறை தலைவர் லார்ட் ரிக்கெட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பிபிசி தொலைக்காட்சிக்கு அவர் […]

Categories
உலகசெய்திகள்

அப்படிப்போடு… உக்ரேன் விவகாரம்: அடிமேல் அடிவாங்கும் ரஷ்யா…. பல்கேரியாவின் அதிரடி தடை….!!

பல்கேரிய அரசு உக்ரைன் போர் விவகாரத்தால் ரஷ்ய கொடி தாங்கிய கப்பல்கள் அனைத்தும் கருங்கடல் துறைமுகங்களுக்கு நுழைவதற்கு தடை விதித்துள்ளது. உக்ரேன் மீது அதீத பலம் பொருந்திய ரஷ்யா ஒரு மாத காலத்திற்கும் மேலாக போர் தொடுத்து வருகிறது. இதற்கு ரஷ்யா மீது பல நாடுகள் பொருளாதார தடையை விதித்துள்ளது. அதன்படி பல்கேரிய அரசு அதிரடியான தடை ஒன்றை விதித்துள்ளது. அதாவது ரஷ்ய கொடி தாங்கிய கப்பல்கள் அனைத்தும் கருங்கடல் துறைமுகங்களுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளது. இதனை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு உலகளவில் தடை வேண்டும்… உக்ரைன் அதிபர் கோரிக்கை…!!!

உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு உலக அளவில் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். ரஷ்ய நாட்டின் மீது உக்ரைன் தொடர்ந்து 50 நாட்களுக்கு மேலாக கடுமையாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. எனவே, உக்ரைன் அதிபர் ரஷ்யா கைப்பற்றிய நகரங்களை சேர்ந்த தங்கள் மக்களை ரஷ்யப் படைகள் கடுமையாக துன்புறுத்துவதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை உலக நாடுகள் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். மேலும், இந்த போரில் குடியிருப்புகளை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிற்கு எதிராக…. உக்ரைனில் களமிறக்கப்பட்ட பிரிட்டன் சிறப்புப்படைகள்…!!!

ரஷ்ய நாட்டின் ஊடகங்கள் உலகப்போர் தொடங்கியதாக அறிவித்திருக்கும் நிலையில் பிரிட்டனை சேர்ந்த சிறப்புப்படைகள் உக்ரைன் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 50 நாட்களுக்கும் மேலாக போர் தொடுத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு முதல் தடவையாக பிரிட்டனின் சிறப்புப் படைகள் பயிற்சிகள் அளிப்பதற்கு முன்வந்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் ஆயுதப் பயிற்சிகளை பிரிட்டன் சிறப்புப் படைகள் வழங்க இருக்கிறது. மேலும் பிரிட்டன் நாட்டினுடைய சிறப்பு […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் பிரதமர் உட்பட 13 பேருக்கு பயணத்தடை… ரஷ்யா அதிரடி அறிவிப்பு…!!!

பிரிட்டன் நாட்டின் பிரதமரான போரிஸ் ஜோன்சன், நிதியமைச்சர் ரிஷி சுனக் போன்ற 13  நபர்களுக்கு ரஷ்யா பயணத் தடை அறிவித்திருக்கிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சமீபத்தில் சந்தித்தார். அதனைத்தொடர்ந்து ரஷ்யா, போரிஸ் ஜான்சன் தங்கள் நாட்டிற்குள் வர பயணத்தடை விதித்தது. இந்நிலையில், ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சத்தின் அறிக்கையில், உக்ரைன் பிரச்சினையில் தற்போது வரை இல்லாத வகையில் ரஷ்யாவிற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பிரிட்டனைச் சேர்ந்த 13 அரசியல் தலைவர்களுக்கு தங்கள் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் கொல்லப்பட்டார் விளாடிமிர்….!! ரஷ்ய அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 52 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் பல்வேறு பொருள் நஷ்டமும் உயிரிழப்புகளும் உக்ரைனில் அரங்கேறியுள்ளன. அதேநேரத்தில் உக்ரைன் வீரர்களும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி வழங்கி வருகின்றனர் . அந்த வகையில் ரஷ்யாவை சேர்ந்த எட்டாவது ஜெனரலும், 34வது கர்னலுமான விளாடிமிர் ஃப்ரோலோவ் உக்ரைனில் கொல்லப்பட்டார் என ரஷ்ய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து விளாடிமிர் ஃப்ரோலோவ் உடல் St Petersburg கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட உள்ளது விளாடிமிர் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா-பெலாரஸ் வாகனங்களுக்கு தடை…. எல்லையில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் லாரிகள்…!!!

ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளை சேர்ந்த சரக்கு லாரிகள் போலந்து நாட்டின் எல்லை பகுதியில் பல கிலோ மீட்டர் தொலைவிற்கு நீளமான வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதால், பெலாரஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளோடு எல்லைப் பகுதியை பகிர்ந்து கொண்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அந்நாடுகளின் சரக்கு வாகனங்களுக்கு தடை அறிவித்திருக்கின்றன. எனவே, போலந்து நாட்டின் எல்லை பகுதியான Kukuryk- Kozlovichi-ல் அதிக தொலைவிற்கு லாரிகள் நீளமான வரிசையில் காத்திருக்கின்றன. […]

Categories
உலக செய்திகள்

“போர் விவகாரத்தில்” வாய் திறக்காத இந்தியா…. சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள போரிஸ் ஜான்சன்….!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வருகின்ற 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ளார். இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வருகின்ற 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இவருடைய இந்த சுற்றுப்பயணம் உக்ரேன் போர் விவகாரத்தை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இங்கிலாந்து உக்ரைன்-ரஷ்யா போர் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா நடத்திய குண்டுவீச்சு தாக்குதல்…. கைக்குழந்தை உட்பட 7 பேர் இறப்பு…. வெளியான தகவல்….!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்ரோஷமான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் உக்ரைன் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனினும் ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்யபடைகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் கைக்குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது ரஷ்யப்படைகள் வீசிய குண்டு அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பாய்ந்ததில் அந்த கட்டிடம் பலத்த சேதமடைந்தது. இதனால் இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். […]

Categories
உலக செய்திகள்

“நீங்க பண்றது எரியும் நெருப்புல எண்ணெய் ஊற்றுவது போல இருக்கு”…. ரஷ்யா எச்சரிக்கை…..!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்ரோஷமான போர் 53வது நாளாக நீடித்து வருகிறது. இதில் உக்ரைனின் தலைநகரான கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய பல நகரங்கள் நிலைகுலைந்துள்ளது. இந்த போரில் பொதுமக்கள், இருநாட்டு படையினர் என்று ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். இதனிடையில் ரஷ்ய படையினர் கைப்பற்றிய நகரங்களை உக்ரைன் படையினர் மீண்டும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக உக்ரைன்-ரஷ்ய படையினர் இடையில் மோதல் நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவிசெய்து […]

Categories
உலக செய்திகள்

ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு ரஷ்யாவின் பதிலடி…. 18 தூதரக உறுப்பினர்கள் நீக்க நடவடிக்கை…!!!!

ஐரோப்பிய யூனியன் நாடுகளின் 18 தூதரக உறுப்பினர்களை ரஷ்ய அரசு அங்கீகரிக்க இயலாத பிரதிநிதிகள் என்று அறிவித்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டில் போர் தொடுக்க தொடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த மாதம் பெல்ஜியம், நெதர்லாந்து, செக் குடியரசு மற்றும் அயர்லாந்து ஆகிய ஐரோப்பிய யூனியன் நாடுகள் ரஷ்ய தூதர்கள் 43 பேர் உளவு பார்த்ததாக கூறி அவர்களை நாட்டிலிருந்து வெளியேற்றி விட்டது. இதனை ரஷ்யா கடுமையாக எதிர்த்திருந்தது. இந்நிலையில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகமானது, ஐரோப்பிய யூனியன் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்… இதுவரை பயன்படுத்தப்படாத அதி பயங்கர ஆயுதம்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரத்தில், ரஷ்யா தற்போது வரை உபயோகிக்கப்படாத  அதிக தொலைவு குண்டுவீச்சு ஏவுகணைகளை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர்தொடுக்க தொடங்கி 50 நாட்களை தாண்டிவிட்டது.  இந்நிலையில், ரஷ்யா, உக்ரைன் நாட்டின் கிழக்குப்பகுதிகளை நோக்கி அதிகமான படைகளை திசை திருப்பியுள்ளது. இதற்கிடையில், ரஷ்ய நாட்டின் அதிபயங்கரமான ஏவுகணை தாங்கிய மாஸ்க்வா போர்க்கப்பலை உக்ரைன் அழித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த போர் கப்பலிலிருந்த வெடிமருந்து வெடித்ததால் தான் கப்பல் சேதமடைந்திருக்கிறது என்று ரஷ்யா கூறியுள்ளது. […]

Categories
உலகசெய்திகள்

கருங்கடலில் மூழ்கிய போர்க்கப்பல்… வெளியான தகவல்…!!!!!

ரஷ்யாவின் பாதுகாப்பு படையில் முக்கிய அங்கம் வகித்து வந்த மோஸ்கோ போர் கப்பல் கருங்கடலில் போருக்கான ஆயுதங்கள் வீரர்களுடன் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் சூறாவளி காற்றினால் சேதமடைந்து மூழ்கியதாக ரஷ்ய பாதுகாப்பு வெளியுறவு துறை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது. ரஷ்ய பாதுகாப்பு துறையின் பலத்தை பறை சாற்றும் வகையில் அமைந்திருக்கும் கப்பல் உக்ரைன் மீதான படையெடுப்பில் கடற்படை தாக்குதலை தலைமை தாங்கி நடத்தி வந்துள்ளது. அதேவேளையில் தங்களது ஏவுகணை போர்க்கப்பலை தாக்கியதாக கிவ்விலிருந்து  தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஆனால் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய கப்பல் மூழ்கியபோதே… ஆரம்பமாகிவிட்டது 3-ஆம் உலகப்போர்… வைரலாகும் வீடியோ..!!!

ரஷ்ய நாட்டின் ஒரு தொலைக்காட்சி, தங்கள் நாட்டின் போர்க்கப்பல் மூழ்கியபோதே மூன்றாம் உலகப்போர் ஆரம்பித்துவிட்டது என்று தெரிவித்திருக்கிறது. ரஷ்ய நாட்டின் மாஸ்க்வா என்ற முக்கிய போர்க்கப்பலில் இருந்த வெடிமருந்துகள் வெடித்ததில் தீப்பற்றி எரிந்தது. அதனையடுத்து, கப்பல் துறைமுகத்திற்கு செல்லக்கூடிய வழியில் சூறாவளியில் மாட்டி கடலுக்குள் மூழ்கிவிட்டது. எனினும் அதில் பயணித்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்று ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கிறது. எனினும் உக்ரைன் அரசு, தன் நெப்டியூன் ஏவுகணையின் மூலமாக கருங்கடல் கடற்படையினுடைய முக்கிய […]

Categories
உலக செய்திகள்

14 ரஷ்ய நிறுவனங்களின் மீது பொருளாதார தடை…. ஆஸ்திரேலிய அரசு அறிவிப்பு…!!!

ரஷ்ய நாட்டிற்குரிய 14 நிறுவனங்களின் மீது பொருளாதார தடை அறிவிப்பதாக ஆஸ்திரேலியா தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அன்று போர்தொடுக்க தொடங்கியது. எனவே ரஷ்ய நாட்டின் மீது பல நாடுகள் பொருளாதார தடைகளை அறிவித்திருக்கின்றன. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான பேய்ன், தங்கள் நாட்டில் இருக்கும் ரஷ்ய நாட்டிற்குரிய பாதுகாப்பு துறைக்கான போக்குவரத்து நிறுவனம், கப்பல் கட்டும் நிறுவனம் போன்ற 14 நிறுவனங்களின் மீது பொருளாதார தடை […]

Categories
உலக செய்திகள்

குண்டுவீச்சு தாக்குதல் நடத்துறாங்க…. ரஷ்யா வைத்த பரபரப்பு குற்றசாட்டு…..!!!!!

ரஷ்யாவின் எல்லையோர நகரங்களில் உக்ரைன் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துவதாக ரஷ்யா குற்றச்சாட்டு வைத்துள்ளது. மேலும் உக்ரைனின் இத்தாக்குதலில் குழந்தை உட்பட 7 பேர் காயமடைந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விசாரணை குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது “கனரக ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு ரஷ்யவான் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த உக்ரைன்நாட்டின் 2 ராணுவம் ஹெலிகாப்டர்களானது, Bryansk பகுதியிலுள்ள குடியிருப்பு கட்டிடங்களின் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது. இவ்வாறு ரஷ்யஎல்லைக்குள் உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அதிகாரப்பூர்வமாக ரஷ்யா […]

Categories
உலகசெய்திகள்

பெரும் சோகம்… “நாங்கள் என்ன செய்தோம்”…. உக்ரைன் வீரர்கள் கண்ணீர் மல்க கேள்வி….?

ரஷிய படைகள் எதற்காக பொதுமக்களை கொல்கின்றனர் என கவலையுடன் உக்ரைனியர்கள்  கேள்வி எழுப்பியுள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர் தொடர்ந்து 50-வது நாளாக நீடித்து வருகிறது. இதற்கிடையே இருதரப்பிலும் பொருட்சேதம் மற்றும்  உயிர் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ரஷ்யப் படைகள் தாக்குதலில் உக்ரைனிய மரியு  போல் நகரம் பல சேதங்களை சந்தித்திருக்கிறது. குடியிருப்பு பகுதிகளும், வாகனங்களும்  வெடிகுண்டுகளுக்கு இறையாகி இருக்கின்றன. அதிலும் குறிப்பாக 10 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து இருக்கிறது. இதில் […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவிடமிருந்து இனி இதை வாங்க வேண்டாம்”…. ஐரோப்பிய நாடுகள் திட்டம்… புதின் எச்சரிக்கை….!!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இருப்பதால் அந்த நாடு மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் கோபமடைந்து இருக்கின்றன. இந்த விவகாரத்தில் ரஷ்யாவிற்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில் அந்த நாடு மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றனர். அதேபோல் ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்குவதை படிப்படியாக நிறுத்திக்கொள்ள மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டு இருக்கின்றது. இந்தநிலையில் எங்களிடமிருந்து எரிபொருள் வாங்குவது நிறுத்தினால்  பொருளாதாரத்தில் கடும் எதிர்மறை தாக்கம் ஏற்படும் என ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவுக்கு மறைமுக ஆதரவு”…. யார் தெரியுமா?…. வெளியான தகவல்……!!!!!

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் இமானுவல் மேக்ரானை எதிர்த்துப் போட்டியிடும் மரைன் லீ பென் ஒரு ரஷ்ய ஆதரவாளர் என்பதனைக் காட்டுவது போன்று அவர் தனது தேர்தல் வாக்குறுதிகளில் வெளியிட்டுள்ள விடயங்கள் அமைந்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் முடிவுக்கு வந்து அமைதி ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்ட உடனே, நேட்டோ அமைப்புக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் ஒரு நல்லஉறவை ஏற்படுத்த அழைப்பு விடுக்க  உள்ளதாக லீ தெரிவித்துள்ளார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு மேக்ரானிடம் லீ பென் தேர்தலில் தோற்றபோது, கிரெம்ளினில் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை அதிர வைத்த உக்ரைன்… கருங்கடலில் நின்ற மாஸ்க்வா போர்க்கப்பல் மீது தாக்குதல்…!!!

ரஷ்ய நாட்டின் கடற்படைக்குரிய மாஸ்க்வா என்ற மிகவும் பயங்கர ஏவுகணை கப்பல் கருங்கடல் பகுதியில் நின்ற நிலையில் அதனை உக்ரைன் ராணுவம் தாக்கி அழித்துள்ளது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா சுமார் ஒன்றரை மாதங்களாக கடுமையாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரஷ்ய கருங்கடல் பகுதியில் மிகவும் பயங்கர போர்க்கப்பலான மாஸ்க்வாவை உக்ரைன் நாட்டின் தடுப்பு காவல் படையினர் தாக்கி அழித்திருக்கிறார்கள். Ukrposhta put into circulation postage stamps "Russian warship, go fuck yourself!". pic.twitter.com/YC3o4idGyH […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் தாக்குதல் நடத்தினால்…. உக்ரைனின் அதிகார மையம் அழிக்கப்படும்… ரஷ்யா எச்சரிக்கை…!!!

ரஷ்ய நாட்டின் நிலப்பரப்பின் மேல் தாக்குதல் மேற்கொண்டால் உக்ரைன் நாட்டின் அதிகார மையத்தை தாக்குவோம் என்று பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உக்ரைன் நாட்டில், ரஷ்யா 45 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டின் பல பகுதிகள் ரஷ்யப் படைகளால் அழிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷ்ய நாட்டின் பெல்கோரோட் என்ற பகுதியில் இருக்கும் ராணுவ முகாமில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதில், இரண்டு போர் ஹெலிகாப்டர்கள் தீப்பற்றி எரிந்துள்ளது. Video with official threats from the Ministry […]

Categories
உலக செய்திகள்

“பேச்சுவார்த்தை முட்டு சந்தில் நிற்கிறது”…. ரஷ்ய அதிபர் புதினின் வெளிப்படை பேச்சு….!!

உக்ரைன் ரஷ்யா இடையிலான போரின் பேச்சுவார்த்தை முட்டுச் சந்தில் நிற்கிறது என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இன்றுடன் 48வது நாளாக நீடிக்கிறது. இந்நிலையில் உக்ரைனுடன் நடத்தி வந்த சமாதான பேச்சுவார்த்தைகள் முட்டுச் சந்தில் நிற்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது “ரஷ்யாவை பாதுகாப்பதற்காக மட்டுமே உக்கிரன் மீது ராணுவ நடவடிக்கையை எடுத்தோம்.  இதனைத் தொடர்ந்து புச்சாவில் அப்பாவிகள் 20 பேர் கொல்லப்பட்டதாகவும், பெண்களை மானபங்கபடுத்தியதாகவும் […]

Categories
உலக செய்திகள்

என்னை சுட்டு கொன்றிருக்கலாம்…. கற்பழிக்கப்பட்ட மூதாட்டி கதறல்… உக்ரைனில் கொடூரத்தின் உச்சம்…!!!

ரஷ்ய படையினரால் வன்கொடுமை செய்யப்பட்ட 83 வயது மூதாட்டி இதற்கு தன்னை கொன்றிருக்கலாம் என்று கதறியிருக்கிறார். உக்ரைன் நாட்டில் ரஷ்ய படை போர் தொடுக்க தொடங்கியது முதல் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். மேலும் அதிகமாக வன்கொடுமை சம்பவங்களும் நடக்கின்றன. ரஷ்ய படை, தங்கள் கண்ணில் படக்கூடிய உக்ரைன் நாட்டை சேர்ந்த சிறுமிகள், பெண்கள் அனைவரையும் பாலியல் வன்கொடுமை செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறிதும் மனிதாபிமானமின்றி இரக்கமில்லாமல் 83 வயது மூதாட்டியை ரஷ்ய வீரர் பாலியல் வன்கொடுமை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படைகளிடம் சிக்கிய பிரிட்டன் வீரர்…. மனிதாபிமானத்தோடு நடத்துங்கள்… ரஷ்ய அதிபருக்கு கோரிக்கை…!!!

பிரிட்டன் நாட்டை சேர்ந்த வீரர் ரஷ்ய படைகளிடம் சரணடைந்த நிலையில் அவரை மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும் என்று அவரின் குடும்பத்தினர் ரஷ்ய அதிபருக்கு  கோரிக்கை வைத்திருக்கிறார்கள். உக்ரைன் நாட்டில் ரஷ்ய படைகளை எதிர்த்து போராடிய 28 வயதுடைய பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஐடன் அஸ்லின் என்ற வீரர் கடந்த 2018 ஆம் வருடத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்திருக்கிறார். அவருடன் சேர்ந்து வாழ்வதற்காக அந்நாட்டிற்கு சென்று தற்போது ரஷ்ய படைகளை எதிர்த்து மரியுபோல் நகரில் […]

Categories
உலக செய்திகள்

வீட்டுக்காவலிலிருந்து தப்பிய ரஷ்ய ஆதரவாளர்…. அதிரடியாக கைது செய்த உக்ரைன் உளவுத்துறை…!!!

உக்ரைன் நாட்டில் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த ரஷ்ய ஆதரவு அரசியல்வாதியான விக்டர் மெட்வெட்சுக், காவல்துறையிடமிருந்து தப்பி உக்ரைன் உளவுத் துறையிடம் சிக்கியிருக்கிறார். விக்டர் மெட்வெட்சுக், உக்ரைன் நாட்டில் இருந்து கொண்டே ரஷ்ய நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தி வந்திருக்கிறார். கடந்த மே மாதம் 21 ஆம் தேதி அன்று உக்ரைன் நாட்டின் வளங்களை கொள்ளையடித்து மற்றும் அந்நாட்டிற்கு எதிராக செயல்பட்டது, போன்ற குற்றங்களுக்காக அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். Ukrainian intelligence […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய படைகள் குண்டு வீச்சு…. பள்ளியில் பற்றி எரிந்த தீ…. பெரும் பரபரப்பு…..!!!!!

உக்ரேனின் கார்கிவ் நகரிலுள்ள விமான நிலையத்துக்கு அருகில் குடியிருப்பு பகுதியில் ரஷ்ய படைகளின் குண்டுவீச்சுத் தாக்குதலில், பள்ளி ஒன்றில் தீப்பற்றியதோடு அருகில் இருந்த கட்டிடங்களும் சேதமடைந்தது. கார்கிவ் விமான நிலையத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவிற்குள்ளாக இந்த தாக்குதலானது நேர்ந்துள்ளது. இதனால் அங்கிருந்த பள்ளி கட்டிடத்தில் தீப்பற்றிய நிலையில், அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகளுக்கும் தீ பரவி விட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் […]

Categories
உலக செய்திகள்

நியூயார்க்: ரயில் நிலையத்தில் துப்பாக்கிசூடு…. 5 பேர் பரிதாப பலி…. வெளியான தகவல்…..!!!!!!

அமெரிக்காவில் நியூயார்க்கின் புரூக்ளினிலுள்ள ஒரு சுரங்கப்பாதை நிலையத்தில் உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை காலை 8.30 மணியளவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்த திடீர் தாக்குதலில் 5 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டு கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக நியூயார்க் நகர தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையில் சம்பவ இடத்தில் அங்கு பல வெடிக்கப்படாத சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று நியூயார்க் நகர அதிகாரிகள் தெரிவித்தனர். அவ்வாறு அதிகாரிகளின் கூற்றுப்படி தாக்குதல் நடத்திய […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா: “எங்களை யாராலும் தனிமைப்படுத்த முடியாது”…. உறுதிபட சொன்ன புதின்…..!!!!!

ரஷ்யாவை எந்தஒரு சக்தி வாய்ந்த நாட்டாலும் தனிமைப்படுத்த இயலாது என அந்நாட்டு அதிபரான புதின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் கிழக்குப் பகுதியிலுள்ள வேஸ்டாக்னி விண்வெளி ஏவுதள மையத்துக்கு சென்ற புதின், பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது “ரஷியாவை உலகின் எந்த சக்தியாலும் தனிமைப்படுத்தவே முடியாது. தற்போதைய சூழலில் யாரையும் எந்த ஒரு நாடும் தனிமைப்படுத்துவது என்பது நிச்சயமாக சாத்தியம் இல்லாத ஒன்று ஆகும். அதிலும் குறிப்பாக ரஷ்யா ஆகிய மிகப் பெரியநாட்டை யாராலும் தனிமைப்படுத்த […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்… அதிபர் ஜெலென்ஸ்கி மனைவியிடம் கூறிய 2 வார்த்தை…!!!!

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்த அன்று அதிபர் ஜெலன்ஸ்கி தன் மனைவியிடம்  கூறிய வார்த்தையை தற்போது அவர் கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து ரஷ்யா 40 நாட்களை கடந்து தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி அன்று அதிகாலை நேரத்தில் ரஷ்யப் படைகள் உக்ரைன் நாட்டின் மீது தாக்குதலை மேற்கொண்டது. அப்போது ஆயிரக்கணக்கான வீரர்களும் உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்தனர். அந்த நாள் திடீரென்று வெடிகுண்டு சத்தம் கேட்டவுடன் […]

Categories
உலக செய்திகள்

கிழக்கு பகுதி முற்றிலுமாக அழியும்…. ரஷ்யாவின் புதிய நகர்வு… பதற்றத்தில் உக்ரைன்…!!!

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதிகளில் தங்கள் படைகளை குவித்து கட்டாயம் தாக்குதலை மேற்கொள்ளும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. ரஷ்யப்படைகளின் இந்த திடீர் நகர்வு, தங்கள் நாட்டின் கிழக்கு பகுதியை முற்றிலுமாக அழிக்கும். அது மிகவும் விரைவில் நடக்கும் என்று உக்ரைன் தெரிவித்திருக்கிறது. இதற்கு உக்ரைன் தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தாலும் தற்போது வரை சந்திக்காத கடும் விளைவுகளை எதிர்கொள்வார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. ரஷ்யா இதற்கு தயாராகி வருவதாகவும் எந்த நேரத்திலும் தாக்குதல் மேற்கொள்ளலாம் எனவும் உக்ரைன் நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

“அமைதி பேச்சுவார்த்தை”… இனிமேல் போரை நிறுத்த மாட்டோம்…. ரஷ்யா அறிவிப்பு……!!!!!

அமைதி பேச்சுவார்த்தைக்காக இனிமேல் உக்ரைனில் ராணுவ நடவடிக்கையை ரஷ்யா நிறுத்தாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் Sergei Lavrov தெரிவித்து உள்ளார். உக்ரைன் மீது தொடர்ந்து 47-வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் சூழ்நிலையில், வெளிநாட்டு தலைவர்கள் கீவ் நகருக்கு சென்று ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்து உதவி தொகுப்புகளை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் அரசு ஊடகத்துக்கு ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் Sergei Lavrov பேட்டியளித்தபோது “உக்ரைனுடன் பேச்சுவார்த்தையை தொடராததற்கு எந்த காரணமும் இல்லை. […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவுக்கு கிரீன் சிக்னல் காட்டும் வடகொரியா…. வெளியான அதிரடி அறிக்கை……!!!!!!

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்பட்டதை வடகொரியா கண்டித்து இருக்கிறது. உக்ரைனில் ரஷ்யப்படைகள் பொதுமக்களைக் கொன்றது தொடர்பாக பெருகி வரும் ஆதாரங்களைத் தொடர்ந்து சென்ற வாரம் மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை நீக்க வேண்டும் என்று அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன்பீல்ட் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து  வாக்கெடுப்பு நடந்தது. இத்தீர்மானத்துக்கு 93 நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில், 24 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல் 58 நாடுகள் வாக்களிக்கவில்லை. […]

Categories
உலக செய்திகள்

கொன்று புதைக்கப்பட்ட 1200க்கும் மேற்பட்ட உடல்கள்…. ரஷ்யாவின் வெறிச்செயல்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தொடர்ந்து 48-வது நாளாக ரஷ்யா, உக்ரைன் மீது போர் புரிந்து வருகிறது. மேலும் ரஷ்ய படைகள் உக்ரைனின் தலைநகரான கீவ், கார்சன், கார்கீவ், மரியபோல் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் ராணுவமும் ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் உக்ரைன் படைகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளன. இதற்கிடையே உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உக்ரைனின் தலைநகரான கீவ் அருகே புச்சா […]

Categories
உலக செய்திகள்

18 ரஷ்ய தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்…. குரேஷியா அரசு நடவடிக்கை…..!!!!!

உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது பல்வேறு உலகநாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இவ்விவகாரத்தில் ரஷ்யாவுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் சில நாடுகள் தங்களது  நாட்டிலுள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்றி வருகின்றன. அந்த அடிப்படையில் மத்திய ஐரோப்பிய நாடான குரேஷியா தங்களது நாட்டிலுள்ள ரஷ்யதூதரகத்தில் பணிபுரிந்து வரும் 18 அதிகாரிகள், நிர்வாக மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் 6 பேரை நாட்டைவிட்டு வெளியேற்றியுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்யா, […]

Categories
உலக செய்திகள்

விமான விபத்தில் பறிபோன 95 உயிர்…. இவங்கதான் காரணம்…. மீண்டும் குற்றசாட்டு வைத்த போலந்து…..!!!!!

போலந்துஅதிபா் லெக் கச்சின்ஸ்கி மற்றும் பாதுகாப்புப்படையினா் உட்பட 95 போ் இறந்த விமான விபத்திற்கு ரஷ்யாதான் காரணம் என்று அந்நாடு மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது. போலந்து நாட்டின் பெண் அதிபா் லெக் கச்சின்ஸ்கி உட்பட 95 போ் சென்ற சோவியத் தயாரிப்பு விமானம் கடந்த 2010, ஏப்ரல் 10ம் தேதி ரஷ்யாவில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிபா் உட்பட அனைவரும் உயிரிழந்தனா். இச்சம்பவத்துக்கு ரஷ்யாவின் சதிச்செயல்தான் காரணம் என்று போலந்து முன்பே குற்றம்சாட்டி வந்தது. இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனின் தெற்குப் பகுதிகளில் தீவிர வடையும் ரஷ்யாவின் தாக்குதல்….!!! வெளியான புகைப்படங்களால் பரபரப்பு…!!!

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் போர் தொடுத்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நிறைவு பெற உள்ள நிலையில், உக்ரேனின் பல்வேறு இடங்களில் ரஷ்ய படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது அந்த வகையில் உக்ரைனின் தெற்கு பகுதி நகரமான மைகோலைவ் நகரத்தின் மீது குண்டு வெடிப்பு சம்பவங்களை ரஷ்ய ராணுவம் அரங்கேற்றியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி உலக நாடுகளை கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளது.

Categories
உலக செய்திகள்

“நீங்கலாம் எங்க நாட்டுக்குள்ள நுழையக்கூடாது…!!” அதிரடி தடை விதித்த பிரிட்டிஷ் அரசு…!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில் அங்கு பல்வேறு உயிரிழப்புகள் அரங்கேறியுள்ளன. அந்த வகையில் அதிகமான உயிர் இழப்புகளை சந்தித்து புச்சா நகரம் மோசமான சூழ்நிலையில் உள்ளது. அங்கு உள்ள சாலைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பிணக் குவியல்கள் உலகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மேற்கத்திய நாடுகளை கொந்தளிப்பில் ஆழ்த்தியது. அதோடு அந்த நாடுகள் பலவும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தன . அந்த வரிசையில் […]

Categories
உலக செய்திகள்

7,000 ரஷ்ய வீரர்களின் சடலங்கள்…!!”உங்கள் மகன்களின் சடலங்களை எடுத்துக் கொண்டு செல்லுங்கள்….!!” ரஷ்ய தாய்மார்களுக்கு உக்ரைன் அழைப்பு…!!

மேலை நாட்டை சேர்ந்த கல்லூரி மாணவி மெக்கால் பிராக். இவர் தான் படிக்கும் காலத்தில் உணவுக்காக சிரமப்பட்டு கொண்டிருந்தபோது இவர் செய்த காரியத்தை டிக் டாக் செயலி ஒன்றில் பதிவேற்றியுள்ளார். அது தற்போது பலரது விமர்சனங்களை பெற்று வருகிறது. அப்படி அவர் என்னதான் செய்தார் தொடர்ந்து பார்ப்போம். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது கையிலிருந்த பணமெல்லாம் தீர்ந்துவிட்டது. உணவுக்காக என்ன செய்வது என்று தெரியாத சூழலுக்கு தள்ளப்பட்ட அப்போது எனக்கு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மக்கள் தைரியசாலிகள்…. புகழ்ந்து தள்ளும் அதிபர் ஜெலன்ஸ்கி…!!!

உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி, தங்கள் நாட்டு மக்கள் தைரியமானவர்கள் என்று பாராட்டியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 40 நாட்களை தாண்டி கடுமையாக போர் தொடுத்து வருகிறது. எனினும் எதிர்பார்த்த அளவிற்கு ரஷ்யா வெற்றி பெறவில்லை. ரஷ்யப் படைகள் உக்ரைன் நாட்டின் ராணுவ கட்டமைப்புகளை மீறி தாக்குதல் மேற்கொண்டு, அப்பாவி பொது மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி, தங்கள் நாட்டு மக்கள் குறித்து பாராட்டி பேசியிருக்கிறார். தீமை […]

Categories
உலக செய்திகள்

இவர்களின் போர் குற்றங்களுக்கு ஆதாரம் இருக்கு…. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேட்டி…..!!!!!

உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரை ரஷ்யா தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தப் போர் காரணமாக ரஷ்யா-உக்ரைன் என இருதரப்பிலும் பல்வேறு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போர் காரணமாக உக்ரைன் பொதுமக்கள் பாதுகாப்பு இடங்களைத் தேடி தஞ்சமடைந்து வருகின்றனர். இதற்கிடையில் போரை நிறுத்துமாறு ரஷ்யாவை பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றனர். எனினும் இருநாடுகளுக்கிடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய துருப்புகள், உக்ரைனில் நடத்தியுள்ள போர்க் குற்றங்களுக்கான ஆதாரங்களை வழங்கும் தகவல் தொடர்புகளை தனது நாட்டின் பாதுகாப்பு சேவை […]

Categories
உலக செய்திகள்

கொடூர சிறையில் அடைக்கப்பட்ட தளபதி…. ரஷ்ய அதிபர் புடின் அதிரடி…!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், மேற்கத்திய நாடுகளுக்கு ராணுவ தகவல்களை தெரிய படுத்தியதாக கூறி சிறப்பு புலனாய்வுத் துறையின் ஜெனரலை கொடூர சிறையில் அடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய நாட்டின் சிறப்பு புலனாய்வுப் படையினுடைய ஐந்தாம் பிரிவின் தலைவர், ஜெனரல் செர்ஜி பெசேடா. இவர் மீது, மேற்கத்திய நாடுகளுக்கு இராணுவம் குறித்த முக்கிய தகவல்களை தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, அவரை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தடுப்புக்காவலில் என்ற லெஃபோர்டோவோ சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இவரை கைது […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் ரஷ்யவீரர்களின் கொடூரச் செயல்…. கொந்தளிக்க வைத்த சம்பவம்…!!!

உக்ரைன் நாட்டில் ஒரு சிறு குழந்தையிடம் ரஷ்ய வீரர் மோசமாக நடந்துகொண்ட வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்ய படைகள் சுமார் 40 நாட்களுக்கும் மேலாக உக்ரைன் நாட்டில் தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில், ஒரு ரஷ்ய வீரர் வெளியிட்ட வீடியோ கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் இருந்த வீரர் தற்போது கைதாகியிருக்கிறார். ஐக்கிய நாடுகள் மன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, தங்கள் நாட்டின் மரியுபோல், இர்பின், டைமர்கா, புச்சா போன்ற பகுதிகளில் ரஷ்ய […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா எதிரொலி…. டிவி சேனல் முடக்கம்… யூடியூப் நிறுவனம் அதிரடி நடவடிக்கை…!!!!!

ரஷ்யாவின் டுமா என்னும் டிவி சேனலை யூடியூப் நிறுவனம் முடக்கியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் பிரச்சினையில் உலகின் முன்னணி சமூக வலைத்தள நிறுவனங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூட்யூப் போன்றவை  ரஷ்யாவிற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் யூடியூப் நிறுவனம் ரஷியாவின் அரசு டி.வி சேனல்கள் அனைத்தையும் ஏற்கனவே முடக்கி இருக்கிறது. இந்த நிலையில் ரஷ்ய நாடாளுமன்ற மேலவையில் நிகழ்வுகளை ஒளிபரப்பும்  டுமா என்கிற டி.வி சேனலை  யூடியூப் […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்ய அதிபர் புதினின் மகள்கள் மீது பொருளாதார தடை….!! “அதிரடி காட்டிய பிரிட்டன்…!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐரோப்பிய நாடுகள் பல ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. அந்த வரிசையில் ரஷ்யாவின் அதிபர் விளாமிடிர் புதினின் மகள்களான கதேரினா டிகோனோவா மற்றும் மரியா வொரோன்ட்சொவா பயணம் செய்ய தடை, அவர்களின் சொத்துகளை முடக்குதல் உள்ளிட்டவை அடங்கிய பொருளாதார தடையை பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. அதேபோல், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லவ்ரோவ் மகளுக்கு எதிராகவும் இதே பொருளாதார தடையை பிரிட்டன் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள்

வடக்கு உக்ரைனிலிருந்து வெளியேறிய ரஷ்ய வீரர்கள்… பிரிட்டன் ராணுவ உளவுத்துறை தகவல்…!!!

உக்ரைன் நாட்டின் வடக்கு பகுதியிலிருந்து ரஷ்யப் படைகள் மொத்தமாக வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து நாற்பது நாட்களை தாண்டி கடுமையாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளை ரஷ்யப் படைகள்  குறிவைத்து தாக்குதல் மேற்கொண்டு வந்தன. உக்ரைன் படைகளும் அதற்கு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யப் படையினர் பல இடங்களில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், உக்ரைன் நாட்டின் வடக்கு பகுதியிலிருந்து மொத்தமாக வெளியேறிவிட்டதாக பிரிட்டன் […]

Categories

Tech |