Categories
தேசிய செய்திகள்

2025-க்குள் புதிய விண்வெளி நிலையம்… ரஷ்யா அறிவிப்பு..!!

வரும் 2025-ம் ஆண்டுக்குள் சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைக்க முடிவு செய்திருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கடந்த 1998-ல் போடப்பட்ட ரஷ்யா, அமெரிக்கா கூட்டு விண்வெளி ஆராய்ச்சி மையம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் தனது செயல் திறனை இழந்து 2030-2050 இடைப்பட்ட காலத்தில் ஏதோ ஒரு பகுதியில் விழ இருக்கிறது. மேலும் அமெரிக்காவுடன் பனிப் போர் நடப்பதால் தனியாக விண்வெளி நிலையத்தை அமைக்க உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

விண்வெளியில் கழிந்த 6 மாதங்கள்… வெற்றிகரமாக முடிந்த ஆராய்ச்சி… பூமிக்கு வந்த விண்வெளி வீரர்கள்…

6 மாதங்களாக விண்வெளி நிலையத்தில் ஆராய்ச்சி மேற்கொண்ட 3 விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நேற்று பூமிக்கு வந்தனர். ரஷ்யாவை சேர்ந்த செர்கே ரைசிகோவ், செர்கே குத்-ஸ்வெர்ச்கோவ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த கேட் ரூபின்ஸ் ஆகிய 3 விண்வெளி வீரர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக சென்றுள்ளனர். இவர்கள் 6 மாதங்கள் கிட்டத்தட்ட 187 நாட்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வுகள் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் பொருளாதார தடை.. ரஷ்யாவின் தக்க பதிலடி..!!

அமெரிக்கா பொருளாதாரத்திற்கு தடை விதித்ததால் ரஷ்யா அதற்கு பதிலடி கொடுத்துள்ளது.  அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததால் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்யா அமெரிக்க தூதரக அதிகாரிகள் 10 பேரை வெளியேற்றியதோடு, உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகள் 8 பேரை தடுப்பு பட்டியலில் வைத்திருக்கிறது. மேலும் ரஷ்யாவால் தற்போது தடை விதிக்கப்பட்டிருக்கும் நபர்களில் எப்.பி.ஐ இயக்குனர் மற்றும் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் உள்ளனர். அதாவது கடந்த 2020ஆம் வருடம் அமெரிக்க தேர்தலில் தலையிட்டது, உக்ரைனை சீண்டியது, சைபர் தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா எடுத்த முடிவு ..!!ரஷ்யாவின் நிலை என்ன ?வெளியான முக்கிய தகவல் ..!!

அமெரிக்கா ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது . அமெரிக்காவின்  2020 ஜனாதிபதி தேர்தலில் தலையிட்டது உட்பட சைபர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா மீது  பொருளாதார தடை விதிக்கப் போவதாக அமெரிக்கா செய்திகள் வெளியிட்டுள்ளது .அதில் 30 ரஷ்ய நிறுவனங்கள் மீதான பொருளாதாரத் தடையை விதிக்கப் போவதாகவும்  தூதரக அதிகாரிகளுக்கும் தடை  விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வியாழக்கிழமை அன்று வெளியாகும் என்று  தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் நடந்த போர்… எச்சரிக்கை விடுத்த ரஷ்யா…. வைரலாகும் வீடியோ காட்சி…!!

ரஷ்ய எல்லைக்குள் உளவு நடவடிக்கைகளுக்காக வந்த அமெரிக்க விமானத்தை ரஷ்ய போர் விமானம் விரட்டியடித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. பசுபிக் பெருங்கடலின் மேல்பகுதியில் ரஷ்ய போர் விமானம் அமெரிக்க உளவு விமானத்தை விரட்டியடித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இதுகுறித்து ரஷ்ய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்காவின் உளவு விமானம் ரஷ்ய எல்லை நோக்கி வந்தவுடன் கிழக்கு இராணுவ மாவட்டத்தின் விமான பாதுகாப்பு படைகளில் இருந்து ரஷ்யMiG-31 விமானம் புறப்பட்டது என்றும் […]

Categories
உலக செய்திகள்

இவங்க தான் “REAL HERO”…. பற்றி எரிந்த மருத்துவமனை…. மருத்துவர்களின் பாராட்டுக்குரிய செயல்…!!

ரஷ்யாவின் Blagoveschensk எனும் இடத்தில் அமையப்பெற்றுள்ள இதய அறுவை சிகிச்சை மருத்துவமனையில் 8 மருத்துவர்களும் செவிலியர்களும் இணைந்து நோயாளி ஒருவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய தொடங்கியுள்ளனர். அச்சமயம் திடீரென மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் மற்றும் மருத்துவர்களை பத்திரமாக மீட்டனர். ஆனால் அறுவை சிகிச்சையில் ஈடுபட்டிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மட்டும் வெளியில் வர மறுப்பு தெரிவித்து தொடர்ந்து தங்களது […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய ரகசிய செயற்கைகோள் உடைந்துவிட்டதா..? அமெரிக்கா வெளியிட்ட உண்மை.. நீடித்து வரும் மர்மம்..!!

ரஷ்ய இராணுவத்திற்குரிய ரகசிய செயற்கைகோள் நடுவானில் உடைந்துவிட்டதாக அமெரிக்க விமானபடை தரவில் தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.  ரஷ்ய ராணுவத்தின் ரகசிய செயற்கைக்கோள் Kosmos 2525 கடந்த 2018 ஆம் வருடம் மார்ச் மாதம் Plesetsk  cosmosdrome லிருந்து Soyuz 2.1-b ஏவுவாகனம் மூலமாக ஏவப்பட்டு, பூமியின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்நிலையில் space-track-org ல் வெளியிட்ட அமெரிக்க விமானப்படை தரவில், Kosmos 2525 என்ற செயற்கைக்கோள் பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் உடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 🛰️🇷🇺 – Le […]

Categories
உலக செய்திகள்

இதய அறுவை சிகிச்சை நடந்த போது.. தீ பிடித்து எறிந்த மருத்துவமனை.. உயிரை பணயம் வைத்து வென்ற மருத்துவர்கள்..!!

ரஷ்யாவில் ஒரு மருத்துவமனையில் நோயாளிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்த போது மருத்துவமனை தீ பற்றி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ரஷ்யாவில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் ஆபத்து நிறைந்த பைபாஸ் அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது நோயாளியினுடைய மார்பு மருத்துவர்களால் வெட்டி திறக்கப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று அந்த மருத்துவமனையில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் உடனடியாக மருத்துவமனையிலிருந்த நோயாளிகள் மருத்துவர்கள் உட்பட அனைவரும் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த தலைமை மருத்துவர் Valentin […]

Categories
உலக செய்திகள்

விலங்குகளுக்கும் தடுப்பூசி ரெடி…. கண்டுபிடித்து அசத்திய நாடு…. குவியும் ஏற்றுமதி வேண்டுகோள்…!!!

உலகில் விலங்குகளுக்கான முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்து அசத்தியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று மனிதர்களை மட்டுமல்லாமல் நாய், பூனை போன்ற விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் விலங்குகளுக்கான முதல் தடுப்பூசியானா கார்னிவாக் […]

Categories
உலக செய்திகள்

விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி …ரஷ்யா புதிய சாதனை…!!!

ரஷ்யா நாட்டில் விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி உலகில் முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு ஊசிகள் கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வைரஸின் தாக்கம் […]

Categories
உலக செய்திகள்

அழகி போட்டியில் வென்ற பெண் கொலை …தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு ..!!கணவனின் வெறிச்செயல் ..!!

அழகி போட்டியில் வென்ற பெண்ணை அவரின் கணவர் தலையை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள நோவாட்வின்ஸ்க்  என்ற இடத்தில் 33 வயதான ஓல்கா ஷில்லியாமீனா என்ற பெண்ணின் தலையற்ற உடல் பனி நிறைந்த வனப்பகுதியில் கிடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓல்காவை ஏற்கனவே  5 நாட்களாக காணவில்லை என்று அவரின்  பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில் அவரின் தலையற்ற உடல் கிடைத்தது குடும்பத்தினருக்கு  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியால் பிரச்சனை..? ரஷ்ய தடுப்பூசிக்காக கெஞ்சும் நாடுகள்..!!

பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் அதிபர்கள் தடுப்பூசிக்காக ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரியவந்துள்ளது.  கொரோனாவிற்கு எதிரான ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ரத்தம் உறைதல் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் ஐரோப்பிய நாடுகள் பல இத்தடுப்பூசியை தற்காலிகமாக நிறுத்தி வருகிறது. ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் 60 வயதிற்கு குறைந்த நபர்களுக்கு தடுப்பூசியை செலுத்துவதை நிறுத்தம் செய்துள்ளார். எனினும் அதே தடுப்பூசியை தான் செலுத்திக்கொள்ள போவதாக தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில் மெர்க்கல் மற்றும் பிரான்ஸின் அதிபர் இம்மானுவேல் மிக்ரோன் போன்ற இருவரும் தடுப்பூசிகளுக்காக ரஷ்யாவின் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ரஷ்ய அதிபர் ..ரகசியமான முறையில் பெற்றுக்கொண்டார் ..!!

கொரோனா தொற்றுக்கான முதல் தடுப்பூசி டோஸை ரஷ்ய அதிபர் விளாடிமிர்புதின்  செலுத்திக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செவ்வாய்க்கிழமை அன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை  செலுத்திக்கொண்டார் .இந்த தகவலை அவரின் செய்தி தொடர்பாளர்  டிமிட்ரி பெஸ்கொவ்  வெளியிட்டுள்ளார். மேலும் புதின் தடுப்பூசியை எல்லோரும் பார்க்கும்படி நேரலையாக பெற்றுக்கொள்ளவில்லை தனியான முறையில் செலுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது . மேலும்  அவர் ரஷ்யாவில் தயாரித்த ஸ்புட்னிக் […]

Categories
உலக செய்திகள்

போர் விமானம் புறப்படுவதற்கு முன் ஆய்வு செய்ததில் ஏற்பட்ட விபத்து..3 விமானிகள் பரிதாபமாக உயிரிழப்பு ..!!நடந்தது என்ன ?

ரஷ்யாவில் போர் விமானத்தை புறப்படுவதற்கு முன் ஆய்வு செய்ததில் ஏற்பட்ட விபத்தால்  3 விமானிகள் இறந்துள்ளனர். மேற்கு ரஷ்யாவிலுள்ள கழுகாவிலே போர் விமானம் ஒன்று புறப்படுவதற்கு முன் ஆய்வு செய்ததில் விபத்து ஏற்பட்டு 3 விமானிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியான உடனே ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. Tu -22M3 போர் விமானம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் போது விமானத்திலிருந்து வெளியேறும் அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதால் விமானத்திலிருந்த விமானிகள் தங்களின் இருக்கை உடனே […]

Categories
உலக செய்திகள்

கொலை செய்யபடப்போகும் நபர்களின் பட்டியல்.. ரகசியமாக வெளியிட்ட ஜனாதிபதி.. அதிர்ச்சியூட்டும் தகவல்..!!

ரஷ்ய ஜனாதிபதி புடின் தன் நடவடிக்கைகளுக்கு எதிரானவர்களை கொலை செய்ய திட்டமிட்ட பட்டியல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ரஷ்யாவின் ஜனாதிபதியான புடின் தன் நிர்வாகத்தின் நடவடிக்கைகளை, எதிர்ப்பவர்களை கொலை செய்யும் முடிவில் அதற்கான ஒரு பட்டியலை வெளியிட்டிருக்கிறார் என்று அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் அவரின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஆறு நபர்கள் பிரிட்டனில் தற்போது வசித்து வருகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. உளவு அதிகாரி ஒருவரின் மூலம் மற்றொரு ரகசியமும் வெளியாகியுள்ளது. அதாவது பிரிட்டனில் இருக்கும் Salisbury […]

Categories
உலக செய்திகள்

ஜோ பைடன் கூறிய சர்ச்சைக்குரிய கருத்து… ரஷ்யாவிடம் மன்னிப்பு கேட்ட அமெரிக்க குடிமக்கள்… தகவலை வெளியிட்ட ரஷ்யா தூதர்..!!

ரஷ்ய அதிபரை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து கூறிய ஜோ பைடனுக்காக அமெரிக்க குடிமக்கள் மன்னிப்பு கடிதம் அனுப்பியதாக ரஷ்ய தூதர் தகவல் வெளியிட்டுள்ளார். கடந்த வாரம் ஏபிசி நியூஸ் நேர்காணலில் அமெரிக்க அதிபரான ஜோ பைடனிடம்’ ரஷ்ய ஜனாதிபதி புடின் கொலையாளி என்பதை நம்புகிறீர்களா’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ‘ஆம் அதை நான் ஏற்கிறேன் ‘என்று கூறியுள்ளார்.மேலும்  2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையிட்டதற்காக நிச்சயம் பதிலடி பெரும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு எதிரான ஸ்புட்னிக் வி தடுப்பூசி… இந்தியா, ரஷ்யா இடையே ஒப்பந்தம்…!!!

கொரோனாவுக்கு எதிரான புதிய தடுப்பு மருந்தை தயாரிக்க இந்தியா மற்றும் ரஷ்யா இடையே புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. சீனாவில்  தோன்றிய  கொரோனா வைரஸ் கடந்த  ஆண்டு மார்ச்  மாதம்  தொடங்கி உலகமெங்கிலும் உள்ள நாடுகளில் பரவ தொடங்கியது.அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது .  அதற்க்கு   எதிரான தடுப்பூசி  கண்டறியும் முயற்சியில்  இந்தியா உள்ளிட்ட பல நாடுகள்  தீவிரம் காட்டி வந்தநிலையில்  தற்போது    கொராேனா  தடுப்பூசிகள்  உலகமுழுவதிலும்   போடப்பட்டு வருகின்றது. இந்நிலையில்  ரஷ்யா […]

Categories
உலக செய்திகள்

11 வயதில் காதல்…. அவர் வேறு ஒருவரை விரும்புகிறாள்…. 23 வது மாடியில் இருந்து குதித்த சிறுவன்….!!

ரஷ்யாவை சேர்ந்த 11 வயது சிறுவன் தான் விரும்பிய பெண் வேறொருவரை காதலித்ததால் 23 வது மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளான். ரஷ்யாவை சேர்ந்த 11 வயதான மசார் என்ற  சிறுவன் தான் விரும்பிய பெண் வேறு ஒரு சிறுவனை காதலிப்பதை தெரிந்து தன் பெற்றோருக்கு கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளான். அதனால் 23 வது மாடியிலிருந்து கீழே குதிக்க முயற்சிக்கும் போது கீழே டிரக் ஒன்று இருந்ததால் அந்த […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய ஜானதிபதியை கொலைகாரன் என்று கூறிய அமெரிக்க ஜனாதிபதி ..அதற்கு பதிலளித்த ரஷ்ய ஜனாதிபதி புடின் ..!!!காரணம் என்ன ?

அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன்  ரஷ்ய ஜனாதிபதி புடினை  கொலைகாரன் என்று கூறியதற்கு புடின் பதிலளித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஏபிசி நியூஸ் நேர்காணலில் அவரிடம்’ ரஷ்ய ஜனாதிபதி ஒரு கொலைகாரன் ‘என்பதை நம்புகிறீர்களா என்று கேட்கப்பட்டதற்கு ‘அதை நான் ஏற்கிறேன் ‘என்று பதிலளித்துள்ளார். மேலும் அவர் 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையிட்டதற்கு பதிலடி கொடுப்பதாக கூறியுள்ளார். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரஷ்யா அதனை மறுத்து வருகின்றது. இதனை குறித்து […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவில் தாயே மகனை பெட்ரோல் ஊற்றி தீவைத்த கொடூரச்செயல் ..!!காரணம் என்ன ?போலீசாரால் கைது .!!

ரஷ்யாவை சேர்ந்த பெண்  ஒருவரை  பார்ப்பதற்கு அவரது காதலன் வந்ததை அப்பெண்ணின் மகன் தகப்பனிடம் சொன்னதால் தாய் மகனையே கொடூரமாக தீவைத்து எரித்துள்ளார். ரஷ்ய வங்கி ஒன்றில்  காசாளராக பணிபுரிந்து வருகிற 31 வயதான அனஸ்தசியா பவுலினா அவரின் மகனான ஆண்ட்ரே தாயைப் பார்க்க அவரது காதலர் வந்ததே 35 வயதான பவெல் பவுலின்னான என்ற தனது  அப்பாவிடம் கூறியுள்ளான். இதனால் பவெல்லுக்கும் அனஸ்தசியாவிற்கும்  பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆத்திரமடைந்த அனஸ்தசியா இறக்கமேயில்லாமல் தனது மகனான ஆண்ட்ரேவின் […]

Categories
உலக செய்திகள்

” அவர் ஒரு கொலைகாரர் “… புதினை விமர்சித்த பைடன்… மன்னிப்பு கேட்க வற்புறுத்தும் மூத்த எம்.பி…!!

2020ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது என்ற பைடனின் கருத்திற்கு ரஷ்ய அதிபர் புதின் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம்  ABC நியூஸ் நேர்காணலின் போது ரஷ்ய அதிபர் புதின் ஒரு கொலையாளி என்பதை நீங்கள் நம்புகிறீர்களா ? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு  அவர் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறினார். மேலும் அந்த நேர்காணலில் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீட்டிற்கு […]

Categories
உலக செய்திகள்

காதலன் வந்ததை கணவனிடம் கூறிய மகன்.. ஆத்திரத்தில் தாய் செய்த செயல்.. சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..!!

ரஷ்யாவில் கணவரிடம் தன் காதலனை பற்றி கூறியதால் பெற்ற மகனை பெற்றோல் ஊற்றி எரித்த கொடூர தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.  ரஷ்யாவில் வசிக்கும் Anastasiya (31) என்ற பெண் ஒரு வங்கியில் காசாளராக பணியாற்றுகிறார்.  இவரது கணவர் Pavel Baulin (35). இவர்களது மகன் Andrey தன் தந்தையிடம் அம்மாவைப் பார்ப்பதற்காக அவரின் காதலர் ஒருவர் வந்தார் என்று கூறியிருக்கிறார். இதன் காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த Anastasiya, […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசிக்காக ரஷ்யாவிடம் கெஞ்சும் நிலைமை ..எங்களை காப்பாற்றுங்கள் என்று கதறும் ஐரோப்பிய ஒன்றியம் .!!

ஐரோப்பிய ஒன்றிய தடுப்பூசி நிர்வாக தலைவர்கள் கொரோனா தடுப்பூசிகளை  ரஷ்யாவிடம் கேட்கும் நிலைமைக்கு வந்துள்ளனர். ஆஸ்ட்ரோஜெனகா தடுப்பூசிகளுக்கு ஜெர்மனி,அயர்லாந்து ,ஹாலண்ட் உள்ளிட்ட பல நாடுகள் தடை விதித்ததால் ஐரோப்பிய ஒன்றிய தடுப்பபூசி  நிர்வாகத் தலைவர்கள் ரஷ்யாவிடம் தடுப்பூசி கேட்கும் நிலைமைக்கு வந்துள்ளனர். இதனால் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் எல்லாம் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை ஐரோப்பிய  நாடுகளில் தயாரித்து செலுத்தி தற்போதைய சூழலில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று  கோரிக்கைகள் முன் வைத்துள்ளனர். முதன்முதலில் கொரோனாவிற்கு தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

“தலைக்கேறிய போதை”… விமானத்தில் உடையை கழற்றி ரகளை செய்த பெண்… பயணிகளின் உதவியுடன் ஊழியர்கள் செய்த செயல்…!!

விமானத்தில் ஆடைகளை கழற்றி ரகளை செய்த பெண்ணை விமானத்துறை அதிகாரிகள்  கைது செய்துள்ளனர். Vladivostok என்ற பகுதிக்கு ரஷ்ய பயணிகள் விமானம் ஒன்று கிளம்பியுள்ளது. அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் போதையில் அங்குமிங்கும் நடந்துள்ளார். பிறகு தனது ஆடைகளை கழற்றி கழற்றி அணிந்துள்ளார். விமானக் குழுவினர் எச்சரித்தும் கேட்காமல்  அவர் தனது ஆடை முழுவதையும் கழட்ட முயன்றுள்ளார். இதனை பார்த்து  விமான பணிப்பெண்களும்  பயணிகளும் அந்தப் பெண்ணை […]

Categories
உலக செய்திகள்

விமானத்தில் கட்டிய நிலையில் பயணம்…. பெண் செய்த தவறு என்ன….? போதையில் இப்படியும் செய்வார்களா…!!

விமானத்தில் பயணம் செய்த பெண்மணி ஒருவர் தன்னுடன் பயணித்த சக பயணிகள் முன்பு ஆடைகளை கழற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய விமானத்தில் பயணம் செய்த 30 வயது பெண்மணி ஒருவர் விமானத்தில் ஏறுவதற்கு முன் சின்தெடிக் போதை மருந்துகளை பயன்படுத்தியுள்ளார். இதனால் அவர் போதையில் சுயநினைவை இழந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விமானம் புறப்பட்ட 15 நிமிடங்கள் கழித்து அந்தப் பெண்மணி விமானத்திற்குள் எழுந்து நின்று தனது ஆடைகளை அடிக்கடி கழற்றி மாற்றியுள்ளார். இதனால் […]

Categories
உலக செய்திகள்

கூகுள், ஃபேஸ்புக், பெட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்கள் மீது வழக்கு… ரஷ்யா அதிரடி புகார்…!!!

நாட்டில் சட்ட விரோத போராட்டத்தை தூண்டும் வகையிலான பதிவுகளை நீக்காத காரணத்தால் கூகுள், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை விமர்சனம் செய்துவரும் அலெக்ஸ் நவல்னியை என்ற முக்கிய விமர்சகரை கடந்த மாதம்  சிறையில் அடைத்தனர் .இதனால் ரஷ்ய நாடு முழுவதும் அவருக்காக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அவற்றில் குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக சட்டவிரோதமான ஆர்ப்பாட்டங்களுக்கு பங்கேற்குமாறு அளிக்கப்பட்ட பதிவுகளை நீக்க தவறிய 5 சமூக ஊடக நிறுவனங்களின் மீது […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா வேண்டாத வேலை பாக்குது…! ஒழுங்கா இருங்க இல்லனா… பொருளாதார தடை தான்… பைடன் எச்சரிக்கை …!!

அமெரிக்காவின் முக்கிய துறைகளில் கம்ப்யுட்டர் ஹேக்கர்கள் ஊடுருவிய சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் அரசின் முக்கிய துறைகளான பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, நிதி மற்றும் வணிகம் போன்ற ஒன்பது அரசுத்துறைகள் மற்றும் மைக்ரோசாப்ட் உள்பட 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மீது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கம்ப்யூட்டர் ஹேக்கர்கள் ஊடுருவி உளவு பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த சோலார் விண்ட்ஸ் என்கிற ஐடி நிறுவனத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தளபதி 65” படத்திற்கு லொகேஷன் பார்க்க சென்ற நெல்சன்… இணையத்தில் பரவும் புகைப்படம்…!!

தளபதி 65 திரைப்படத்திற்கான லொகேஷனை பார்க்க இயக்குனர் நெல்சன் ரஷ்யா சென்றுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோவாக திகழும் விஜய் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான “மாஸ்டர்” படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் விஜயின் “தளபதி 65” திரைப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு பிரபல இசை அமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக […]

Categories
உலக செய்திகள்

அம்மா, தங்கை என பாராமல்…. மிருகமாக மாறிய 17வயது ரஷ்ய சிறுவன்…. வெறிச்செயலால் போலீஸ் அதிர்ச்சி …!!

 ரஷ்யாவில் பள்ளிக்கு போகச்சொல்லி வற்புறுத்தியதால் தன் குடும்பத்தையே கோடாரியால் கொன்ற சிறுவனை போலீசார் கைது செய்துள்ளார்கள். ரஷ்யாவில் 17 வயது சிறுவனான வாதிம் கோர்பூனோவ் அழகான சிறிய குடும்பத்தில் வாழ்ந்து வந்துள்ளார். இவரின் பெற்றோர்கள் வாதிம்மை பள்ளிக்கு செல்லுமாறு வற்புறுத்தியுள்ளார்கள். ஆனால் இசையின் மேல் அதீத நாட்டம் கொண்ட வாதிம் பள்ளி செல்ல மறுத்து பெற்றோர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடுங்கோபத்தில் இருந்த வாதிம் தந்தை வேலைக்கு சென்றதை பயன்படுத்தி,முதலில் தாயாரையும் 12வயது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி 65… ரஷ்யாவிற்கு பறக்கும் படக்குழு… வெளியான தகவல்..!!

தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இயக்குனர் நெல்சன் கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த படத்தில் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய விவரம் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே விஜய்யின் நண்பன் படத்துக்கு இவரே ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருந்தார். தளபதி 65 படப்பிடிப்பு ரஷ்யாவில் […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவுக்காக ஜெர்மனை வேவு பார்த்துருக்காரு”… பணியாளர் மீது வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர்…!!

ரஷ்யாவுக்காக தன் சொந்த நாடாகிய ஜெர்மனை உளவு பார்த்த பணியாளர் மீது  நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.  Jens F என்ற  நபர் ஜெர்மனின் தலைநகர் பெர்லினில் உள்ள பாராளுமன்றத்தில் மின்னணு சாதனங்களின் சேவைகளை வழங்கும் ஒப்பந்ததாரராக பல ஆண்டுகளாக பணி செய்து வந்தார். அதனால் Jens -க்கு பாராளுமன்ற கட்டிடத்தின் தள திட்டங்கள் கொண்ட file களை பார்ப்பதற்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே ஜெர்மனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் உள்ள உறவில் சில […]

Categories
உலக செய்திகள்

“அதிசயம்”… “பாடும் புலி”… காண குவியும் பொதுமக்கள்… வியப்பில் ஆழ்ந்த பார்வையாளர்கள்…!

விலங்கியல் பூங்காவில் உள்ள புலி ஒன்று பாடுவதைப் போல குரலெழுப்பி வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள பர்னால் ஊரிலிருக்கும் விலங்கியல் பூங்காவில் ஷெர்ஹான் என்ற 8மாத புலி  உள்ளது. இந்த புலி வழக்கமாக பார்வையாளர்களை கண்டால் உறுமும். ஆனால் தற்போது வித்தியாசமாக பாடுவதுபோல குரல் எழுப்பி வருகிறது. அதனால் இந்த பாடும் புலியை காண்பதற்கு ஏராளமான பார்வையாளர்கள் இப்பூங்காவில் குவிந்து வருகின்றன. இந்தப் புலி பிறந்ததிலிருந்தே இதுபோன்று பாடும் வகையில் குரல் எழுப்பி வருவதாக பூங்காவின் […]

Categories
உலக செய்திகள்

நீல கலர் , பச்சை கலர்….. உருமாறிய தெரு நாய்கள்…. ரஷ்யாவில் பரபரப்பு சம்பவம்…!!

ரஷ்ய நாட்டில் அதிசயமாக நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் தெரு நாய்கள் சுற்றி வருகின்றன. ரஷ்யாவில் நீளம் மற்றும் பச்சை நிற தெரு நாய்கள் வீதியில் சுற்றி திரிகின்றன. இதுதொடர்பாக புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. முதலில் சில தெருநாய்கள் நீல நிறத்துடன் இருந்ததாகவும், அத்துடன் சேர்ந்து இப்போது பச்சை நிறத்துடனும் சுற்றி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, தொழிற்சாலைகள் இருக்கும் பகுதியில் சுற்றி திரியும்  நாய்கள் மட்டுமே இந்த […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் விமானத்தை விரட்டியடித்த ரஷ்ய விமானங்கள்… எல்லை மீறுவதை அனுமதிக்க மாட்டோம்…பாதுகாப்பு அமைச்சகம் ஆவேசம்…!

ரஷ்யாவின் எல்லைக்கு வந்த பிரிட்டன் விமானங்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. கடுங்கடல்வழியாக சென்ற மூன்று பிரான்ஸ் ராணுவ விமானங்களை ரஷ்யாவின் su-27 போர் விமானங்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரான்சின் இரண்டு மிராஜ்-2000 போர் விமானங்களும், கேசி-135 எரிபொருள் நிரப்பும் விமானமும் ரஷ்ய எல்லையை நெருங்கி வருவது கண்டறியப்பட்டது. அதனை கண்டறிந்ததும் ரஷ்யாவின் su-27 போர் விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க?… 50,000 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த விலங்குகள்… தோண்டி எடுத்து வைரஸை சேகரிக்க முயற்சி…!!!

ரஷ்யாவைச் சேர்ந்த அறிவியலாளர்கள் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த விலங்குகளின் உடல்கள் மூலம் புதிதாக வைரஸ்களை சேகரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா என்ற ஒரு கொடூர வைரஸ்  சீனாவில் இருந்து பரப்பப்பட்டதாக  ஒரு செய்தி உலகமெங்கும் சென்றது. இந்நிலையில் ரஷ்யாவின் இந்த ஆராய்ச்சியால் மேலும் உலக நாடுகளுக்கு  மேலும் தீங்கு ஏதாவது  ஏற்பட்டு விடுமோ என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. மற்றொருபுறம் பழங்காலத்தில் உயிரிழந்த விலங்குகளின் மூலம் குளோனிங் செய்யும் ஒரு ஆய்வும் நடைபெற்று வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

நீங்கள் எங்கள் நாட்டிற்குள் நுழைய கூடாது… தடையை நீட்டித்துள்ள பிரபல நாடு… வெளியான முக்கிய அறிவிப்பு…!

பிரிட்டன்-ரஷ்யாவிற்கு இடையேயான விமானப் போக்குவரத்து தடையை ரஷ்யா மேலும் நீட்டித்துள்ளது. பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவியதால் ஐரோப்பிய நாடுகள் உள்பட பல நாடுகள் பிரிட்டன் போக்குவரத்திற்கு தடை விதித்தது. தற்போது பல நாடுகள் பிரிட்டனின் விமான சேவைக்கான தடையை நீக்கியுள்ளது. ஆனால், பிரிட்டன்-ரஷ்யாவிற்கு இடையேயான விமானப் போக்குவரத்துக்கு கடந்தாண்டு டிசம்பர் 22-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தடை வரும் மார்ச் 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.  

Categories
உலக செய்திகள்

கையில் 11 குழந்தைகள்… மேலும் 105 பெற வேண்டும்… கோடிஸ்வர கணவரின், மனைவி ஆசை…!

11 குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண் 105 குழந்தைகளை பெற ஆசைப்படும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்தவர் கிறிஸ்டினா ஒஸ்ட்ருக் என்பவர். இவரது கோடிஸ்வர கணவரின் பெயர் கலிப். தற்போது இவர்களுக்கு 11 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் ஒரு குழந்தை மட்டுமே கிறிஸ்டினா இயற்கையாக பெற்றெடுத்துள்ளார்.மீதமுள்ள 10 குழந்தைகளையும் வாடகை தாய் மூலம் பெற்றெடுத்துள்ளார். அவர் 105 குழந்தைகளை பெற வேண்டும் என்று விரும்புகிறார். இதுகுறித்து கிறிஸ்டினா கூறியதாவது, என்னிடம் தற்போது 11 குழந்தைகள் உள்ளது. அவற்றில் […]

Categories
உலக செய்திகள்

நான் ஒன்னும் குரங்கு இல்ல.. தடுப்பூசி போட்டுக் காட்டுறதுக்கு… ரஷ்ய ஜனாதிபதி தெரிவிப்பு…!

ரஷ்ய ஜனாதிபதி புடின் நான் வேடிக்கை காட்டும் குரங்கு அல்ல என்று தெரிவித்துள்ளார். உலகில் முதல் அதிக செயல்திறன் மிக்க கொரோனா தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னரே, அமெரிக்காவின் பைசர் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பல நாடுகளில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அவசர பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளனர். சில நாடுகளில் மட்டுமே ரஷ்ய தடுப்பூசியை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் 68 வயதான ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் கொரோனா தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

எங்களை சீண்டாதீங்க…..! அப்படி சீண்டினால்…. போருக்கு தயாராகுங்க… பரபரப்பாக அறிவித்த பிரபல நாடு …!!

ரஷ்யா ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை முறிக்க தயாராக உள்ளதாக அந்நாட்டு அமைச்சர் செர்ஜி அறிக்கை வெளியிட்டுள்ளார் . இந்த மாத ஆரம்பத்தில் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு கொள்கைத்தலைவர் ஜோசப் போர்ரெல்  ரஷ்யாவிற்கு வருகைப் புரிந்து அறிக்கை  ஒன்றை வெளியிட்டார் .இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் ரஷ்யாவிற்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து பிரஸ்ஸல்ஸ் பரிசீலிக்கும் பற்றி விவாதிக்கப்படும் என்று கூறியுள்ளார் .மேலும் ரஷ்யா ஐரோப்பாவிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

உங்கள் உறவுகளை முறித்துக் கொள்ள தயார்… அமைதி வேண்டுமென்றால் போருக்கு தயாராகுங்கள்… பிரபல நாடுகள் மோதல்…!

ரஷ்யா ஐரோப்பிய ஒன்றிய தொடர்பான உறவுகளை முறித்துக் கொள்ளப்போவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை தலைவர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெஸ்சி நவால்னி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால், ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு ஆபத்துக்களை ஏற்படுத்தும் தடைகளை மீண்டும் விதித்த ரஷ்யா ஐரோப்பிய ஒன்றிய தொடர்பான உறவுகளை முறித்துக் கொள்ளப்போவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை தலைவர் ஜோசப் போர்ரெல் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு சென்ற ஜோசப் போர்ரெல், ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளாதார தடைகளை விதிப்பது குறித்து […]

Categories
உலக செய்திகள்

“ஐய்யோ!” பயங்கர வெடி விபத்து… கட்டிடம் தரை மட்டம்.. பலர் காயமடைந்த சோகம்…!!

ரஷ்யாவில் சூப்பர்மார்கெட்டில் வெடி விபத்து ஏற்பட்டு கட்டிடம் தரைமட்டமானதுடன் பலர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ரஷ்யாவில் உள்ள North Ossatiya பகுதியில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பயங்கரமான வெடி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் சிக்கிய பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது Gagkayeva என்ற தெருவில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டின் உள்ளே வெடி விபத்து ஏற்பட்டதாக அவசர செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். В результате взрыва здание торгового центра на […]

Categories
உலக செய்திகள்

நட்பு நாடுகளுக்கு பாதுகாப்பு… ரஷ்யாவின் கடும் போக்கான நடவடிக்கைக்கு எச்சரிக்கை விடுக்கும் ஜோபைடன்…!

ரஷ்ய ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சக்தி வாய்ந்த போர் விமானங்களை அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளனர். அமெரிக்கா தனது நட்பு நாடுகளை பாதுகாக்கும் என்று ரஷ்ய ஜனாதிபதிக்கு உணர்த்த ஜோ பைடன் சக்தி வாய்ந்த போர் விமானங்களை நோர்வேக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளார். இதற்காக ஆர்லேண்ட் விமான தளத்திற்கு போர் விமானங்களும், 200 அமெரிக்க ராணுவத்தினரும் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆர்க்டிக் வட்டம் மற்றும் ரஷ்யாவின் வட மேற்கு கடற்கரையின் […]

Categories
உலக செய்திகள்

அவர்கள் செய்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது… நிச்சயம் வெளியேற்றுவோம்… பழிக்குப்பழி வாங்கிய ஐரோப்பிய நாடுகள்…!

ரஷ்யா அரசாங்கம் நியாயமற்ற செயலுக்கு துணை போன தூதர்களை வெளியேற்ற வேண்டும் என்று அதிரடியாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் சில இடங்களில் ஆர்பாட்டங்கள் நடந்தது. இதனை கண்காணித்த ஜெர்மனி, போலந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளில் உள்ள ரஷ்ய தூதர்களை நாட்டை விட்டு வெளியேறுவதாக கடந்த வாரம் முடிவெடுத்தது. ஏனென்றால் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து உறுப்பினர்களும் சட்ட விரோத போராட்டங்களை மறுத்தபோது இந்த மூன்று நாடுகளின் தூதர்கள் பங்கேற்றுள்ளனர் […]

Categories
உலக செய்திகள்

கடும் விளைவுகளை சந்திப்பீர்கள்… தூதரக அதிகாரிகள் நாடுகடத்தல்… கடும் கோபமடைந்த ஜெர்மன்…!!

ரஷ்ய நிர்வாகம் மறுத்த போராட்டத்தில் பங்கேற்றதாக ஜெர்மன் உட்பட மூன்று நாடுகளின் தூதரக அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ரஷ்ய அரசு, நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான அலெக்ஸி நவால்னிக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதாக ஜெர்மன் உட்பட மூன்று நாடுகளின் தூதரக அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ள தகவலை ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் இதுதொடர்பான தகவலை தலைநகர் மாஸ்கோவில் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்ய அரசினால் ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் போலந்து ஆகிய நாடுகளின் […]

Categories
உலக செய்திகள்

“திருமண வரவேற்பு” மணமகனுக்கு நடந்த அநீதி “நீங்க இல்லாத இந்த உலகத்தில்” மணமகளின் உருக்கமான பதிவு…!!

திருமணம் முடிந்து வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள வலாசோவோ என்ற கிராமத்தில் Radu Cordinianu என்பவருக்கும் Christina  என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது .இதைத்தொடர்ந்து புதுமண தம்பதிகள் வரவேற்பு நிகழ்ச்சியில்   நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது மணமகன் வீட்டாருக்கும் மணமகள்  வீட்டாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதில் கோபமடைந்த மணப்பெண் உறவினர் Alexey D  மற்றும் Vladmir D   இருவரும் சேர்ந்து மணமகன் Radu  மற்றும் […]

Categories
உலக செய்திகள்

அவரை உடனடியாக விடுதலை செய்யுங்கள்… ஜோ பைடனின் அழுத்தமான கோரிக்கை…!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய எதிர்கட்சி தலைவரை விடுதலை செய்ய வேண்டும் என்று  கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நேற்று முக்கிய கூட்டம் ஒன்று நடந்தது. அதில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த கொள்கைக்கு எதிரான முடிவுகள் பரிசீலிக்கப்பட்டது. அமெரிக்கா இனி டிரம்ப் போன்று ரஷ்யா ஜனாதிபதியிடம் நடந்து கொள்ளாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கூட்டத்தின் போது அதிபர் ஜோ பைடன் தெரிவித்ததாவது, அமெரிக்காவின் மீது சீனா முன்வைத்துள்ள சவால்களை நேரடியாக […]

Categories
உலக செய்திகள்

அணு ஆயுதக் கட்டுப்பாடு ஒப்பந்தம்…5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு… ரஷ்யா-அமெரிக்கா முடிவு …!

உலகின் மிகப்பெரிய அணு ஆயுத சக்திகளான அமெரிக்கா மற்றும் ரஷ்யா தங்களது ஒப்பந்தங்களை மேலும் 5 வருடம் நீட்டித்துள்ளது. உலகின் மிகப்பெரிய அணு ஆயுத சக்திகளாக அமெரிக்கா மற்றும் ரஷ்யா இருக்கிறது. இந்த இரு நாடுகள் கடந்த 10 ஆண்டுகளாக நியூ ஸ்டார் எனும் அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் இருந்தது. இந்த ஒப்பந்தம் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதியோடு முடிவடைகிறது. இதனை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்காக அமெரிக்காவின் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்கவுள்ள இந்தியா… ஆகஸ்ட் மாதத்திற்குள் 300 மில்லியன் பேருக்கு தடுப்பூசி திட்டம்…!

இந்தியாவின் அவசரகால பயன்பாட்டிற்கு ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க உள்ளது. இந்தியா தனது அவசரகால பயன்பாட்டிற்காக ஏற்கனவே இரண்டு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் ஜனவரி மாத நடுப்பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 4 மில்லியன் பேர் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் 300 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் இந்தியா இந்த மாத இறுதிக்குள் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை அவசரகால தடுப்பூசியாக அங்கீகாரம் அளிக்க உள்ளது. இதுகுறித்து ரஷ்ய முதலீட்டு நிதி தலைவர் கிரில் டிமிட்ரிவ் […]

Categories
உலக செய்திகள்

இருநாட்டு தடுப்பூசிகள்… ஒன்று சேர்த்தால் புதிய கொரோனாவை எதிர்கொள்ளலாம்… ரஷ்ய ஆய்வாளர் கண்டுபிடிப்பு….!

பிரிட்டன் தடுப்பூசியையும்,ரஷ்யா தடுப்பூசியையும் ஒன்று சேர்த்து ஒருவருக்கு செலுத்தும் போது புதிய வகை கொரோனா வைரஸை எதிர்கொள்ளலாம் என்று ரஷ்ய ஆய்வாளர் தெரிவித்துள்ளார் பிரிட்டன் தயாரித்துள்ள ஆக்ஸ்போர்டு தடுப்பூசியையும், ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் தடுப்பூசியும் ஒன்று சேர்த்து ஒருவருக்கு செலுத்தும் போது புதிய வகை திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸை எதிர்கொள்ளலாம் என்று ரஷ்ய ஆய்வாளர் தெரிவித்துள்ளார். நேற்று வெளியிடப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசியின் ஆய்வில், 2 டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசி 92% பாதுகாக்கும் திறன் வாய்ந்ததாக […]

Categories
உலக செய்திகள்

ஜோ பைடன் – புதின் பேச்சு…! ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை… உலகளவில் பரபரப்பு தகவல் …!!

அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் இரு நாட்டு தொடர்பு குறித்து தொலைபேசி மூலமாக பேசிக் கொண்டனர். அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன்க்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதன்பின் இரு நாட்டு அதிபர்களும் தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டு தொலைபேசி மூலமாக பேசிக் கொண்டனர். இது தொடர்பாக அமெரிக்க அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், எங்களுக்கும், எங்களது நட்பு நாடுகளுக்கும் தீங்கு […]

Categories

Tech |