Categories
உலக செய்திகள்

உக்ரைன் அதிபரை கொல்ல 3 முறை முயற்சி…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கியை 3 முறை கொலை செய்ய முயற்சித்ததாக அமெரிக்காவின் பிரபல நாளிதழில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 12-ஆம் நாளாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டின் பல நகர்களில் ரஷ்ய படைகள் கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல நாளிதழில் உக்ரைனின் அதிபரை கொலை செய்வதற்கு சில குழுக்கள் மூன்று முறை முயற்சித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொலை செய்வதற்காக இரு வெவ்வேறு […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைனில் ஏவுகணை தாக்குதல்!”…. முற்றுலுமாக தகர்க்கப்பட்ட வின்னிட்சியா விமானம் நிலையம்….!!!

ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதில் உக்ரைன் நாட்டின் வின்னிட்சியா விமான நிலையம் முற்றிலுமாக தகர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா பயங்கரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் பல நகர்களில் ரஷ்யப்படைகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திவதால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் மேற்கு மத்திய பகுதியில் இருக்கும்  வின்னிட்சியா நகரத்தில் ரஷ்ய படைகள் சுமார் 8 தடவை ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் அந்த நகரில் உள்ள வின்னிட்சியா விமான நிலையம் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் தீவிரமடையும் போர்… அமெரிக்க அதிபருடன் பேசிய உக்ரைன் அதிபர்…!!!

உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி, தங்கள் நாட்டிற்கு தேவையான பாதுகாப்பு, நிதியுதவி போன்றவை தொடர்பில் அமெரிக்க அதிபருடன் பேசியதாக தெரிவித்திருக்கிறார். உக்ரைன் நாட்டில் ரஷ்யா தொடர்ந்து 11-வது நாளாக கடுமையாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் அதிபர், ரஷ்யாவின் வான்வெளி தாக்குதலை தடுப்பதற்காக தங்கள் வான்வெளியை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்குமாறு கோரியிருந்தார். ஆனால், அதனை நேட்டோ நிராகரித்து விட்டது. எனவே, உக்ரைன் அதிபர் தங்கள் மக்கள் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்து போராடுவார்கள் என்று […]

Categories
உலக செய்திகள்

“போரை நிறுத்துங்கள்!”… ரஷ்யாவிற்கு எதிராக ஜப்பானில் பேரணி….!!!

ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில், ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் மேற்கொள்வதற்கு எதிராக பேரணியாக மக்கள் சென்றிருக்கிறார்கள். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 11 வது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. எனவே, ரஷ்யா மீது பல நாடுகள் பொருளாதார தடையை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் நூற்றுக்கணக்கான மக்கள் நேற்று […]

Categories
உலக செய்திகள்

விசாவை தொடர்ந்து… மாஸ்டர்கார்டு செயல்பாடுகளும் ரஷ்யாவில் நிறுத்தம்…. வெளியான அறிவிப்பு…!!!

அமெரிக்காவின் மாஸ்டர்கார்டு, விசா ஆகிய நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள்  செயல்பாடுகளை நிறுத்திக்கொள்வதாக தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 11-ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷ்ய படைகள், உக்ரைனின் முக்கிய நகர்களில், ஏவுகணை தாக்குதல், பீரங்கி தாக்குதல் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களை மேற்கொண்டு அந்நாட்டை நிலைகுலையச் செய்து வருகின்றன. உக்ரைன் அரசு, தங்களை தாக்க தீவிரமாக போராடி வருகிறது. இந்நிலையில், விசா நிறுவனம், ரஷ்யாவில் விசா கார்டு பரிவர்த்தனைகள் நிறுத்தப்படும் என்று நேற்று அறிவித்தது. […]

Categories
உலக செய்திகள்

“இந்தியா மற்றும் சீனா நினைத்தால் போர் முடிவடையும்!”…. நம்பிக்கை தெரிவித்த உக்ரைன்…!!!

உக்ரைன் அரசு, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் நினைத்தால் போரை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 11-ஆம் நாளாக கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் அரசும் அதற்கு தகுந்த பதிலடி கொடுப்பதால் இரு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. ரஷ்ய படைகள் தொடர்ச்சியாக பீரங்கி தாக்குதல், துப்பாக்கிச் சூடு தாக்குதல், ஏவுகணை தாக்குதல், வெடிகுண்டு தாக்குதல் என்று உக்ரைனை நிலைகுலைய செய்து வருகின்றன. இதனைத்தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

பெய்ஜிங்கில் நடந்த குளிர்கால பாரா ஒலிம்பிக் தொடங்க விழா…. உக்ரைன் வீரர்களுக்கு சிறப்பு வரவேற்பு…!!!

பெய்ஜிங் குளிர்கால பாரா ஒலிம்பிக் தொடக்க விழாவில் கலந்துகொண்ட உக்ரைன் நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது. சீனத் தலைநகரான பீஜிங்கில், இந்த வருடத்திற்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டி கடந்த மாதம்  4-ந் தேதி அன்று தொடங்கி 20-ந் தேதி வரை நடந்தது. அதனையடுத்து, குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டி நேற்று முன்தினம் தொடங்கி வரும் 13ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. தற்போது ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வரும் நிலையில், ரஷ்யா […]

Categories
உலக செய்திகள்

“நோட்டாவின்” பதில் அவர் காதில் விழவில்லை…. ஜெலன்ஸ்கியின் திட்டம் இதுதான்…. போட்டுடைத்த ரஷ்ய மந்திரி….!!

நோட்டாவை போரில் ஈடுபடுத்தி அதற்கும் தங்கள் நாட்டிற்குமிடையே மோதலை ஏற்படுத்த ஜெலன்ஸ்கி விரும்புகிறார் என்று ரஷ்ய வெளியுறவு துறை மந்திரி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தங்கள் நாட்டிற்கும் நோட்டாவிற்குமிடையே மோதலை ஏற்படுத்த விரும்புகிறார் என்று தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது, ஜெலன்ஸ்கி நோட்டா தங்களுக்கு ஆதரவாக நிற்காதது குறித்து வருத்தப்பட்டார் எனில் அவர் இந்த பிரச்சனையில் நோட்டா ஈடுபடுவதன் மூலமே இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவை” விட்டு எல்லாரும் வெளியேறுங்க…. பிரபல நாட்டின் அதிரடி உத்தரவு….!!

ரஷ்யாவின் மீது பிரான்ஸ் பொருளாதார தடையை விதித்ததோடு மட்டுமின்றி அந்நாட்டிலிருக்கும் தங்கள் நாட்டு மக்களை வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 10 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா உக்ரேனின் பல பகுதிகளில் ஏவுகணை விச்சு, வான் மற்றும் தரைவழித் தாக்குதல் போன்றவற்றை நடத்தி வருகிறது. இதனையடுத்து ரஷ்ய படைகள் உக்ரேனின் தலைநகர் கீவ், கார்கிவ் போன்ற நகரங்களை கைப்பற்றுவதற்காக தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: ரஷ்யாவிற்கு வசமாக ஆப்பு வைத்த “மைக்ரோசாஃப்ட்”…. என்னனு நீங்களே பாருங்க…!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் நியாயமற்ற சட்டவிரோத தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதிரடி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 10 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா உக்ரேனின் பல பகுதிகளில் ஏவுகணை விச்சு, வான் மற்றும் தரைவழித் தாக்குதல் போன்றவற்றை நடத்தி வருகிறது. இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ரஷ்யாவின் உக்ரைன் மீதான சட்ட விரோத […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை”…. உக்ரேன் அதிகாரி படுகொலை…. பின்னணியில் யார்…? கட்டவிழ்க்கப்படுமா மர்மம்….!!

ரஷ்யாவுடன் போர் விவகாரம் தொடர்பாக சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட உக்ரைன் அதிகாரி ஒருவர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 10 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா உக்ரேனின் பல பகுதிகளில் ஏவுகணை விச்சு, வான் மற்றும் தரைவழித் தாக்குதல் போன்றவற்றை நடத்தி வருகிறது. இவ்வாறு இருக்க இரு நாடுகளுக்கிடையேயான சமரச பேச்சுவார்த்தையும் […]

Categories
உலக செய்திகள்

போர் விவகாரம்: “3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை” எப்போன்னு தெரியுமா…? வெளியான தகவல்….!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கிடையேயான 3 ஆவது கட்ட பேச்சுவார்த்தை வருகின்ற மார்ச் மாதம் 7 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரேன் மீது ரஷ்யா தொடர்ந்து 10 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இவ்வாறு இருக்க போரை கைவிட்டு ரஷ்யா மற்றும் உக்ரைன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஐநா பொது சபை உறுப்பு நாடுகள் வலியுறுத்தியுள்ளது. அதன்படி 2 நாடுகளும் இரண்டு கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது. இவ்வாறு இருக்க ரஷ்ய […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் தான் சாக்குபோக்கு சொல்லுது… “3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை” எப்போ…? தகவல் சொன்ன ரஷ்ய மந்திரி….!!

உக்ரைன் போர் விவகாரம் தொடர்புடைய பேச்சு வார்த்தையை தாமதப்படுத்துவதற்கான சாக்கு போக்குகளை தொடர்ந்து முன்வைக்கிறது என்று ரஷ்யாவின் வெளியுறவு மந்திரி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். உக்ரேன் மீது ரஷ்யா தொடர்ந்து 10 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இவ்வாறு இருக்க போரை கைவிட்டு ரஷ்யா மற்றும் உக்ரைன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஐநா பொது சபை உறுப்பு நாடுகள் வலியுறுத்தியுள்ளது. அதன்படி 2 நாடுகளும் இரண்டு கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது. இதில் போர் […]

Categories
உலக செய்திகள்

அப்படிப்போடு: ரஷ்யாவில் இனி “ATM கார்டுகள்” வேலை செய்யாது…. அதிரடி கொடுத்த பிரபல நிறுவனங்கள்….!!

உக்ரேன் மீது அதிபயங்கர தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யாவில் விசா மற்றும் மாஸ்டர் கார்டு தங்களது செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதாக அதிரடியாக தெரிவித்துள்ளது. ரஷ்யா உக்ரேன் மீது தொடர்ந்து 10 ஆவது நாளாக அதிபயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி உக்ரைனிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்திலும் வான், பீரங்கி தாக்குதல் மற்றும் ஏவுகணை வீச்சு ஆகியவற்றை ரஷ்யா நடத்தி வருகிறது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் விசா மற்றும் மாஸ்டர் கார்ட் […]

Categories
உலக செய்திகள்

முகநூலை தொடர்ந்து ட்விட்டர் செயலுக்கும் தடை… ரஷ்ய அரசு அறிவிப்பு…!!!

ரஷ்யாவில் முகநூல் தளத்தை தொடர்ந்து ட்விட்டர் செயலிக்கும் தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து பத்தாவது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதற்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுப்பதால் இரண்டு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. எனவே, உலக நாடுகள், ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கின்றன. இந்நிலையில், ரஷ்ய செய்தி நிறுவனங்கள், உக்ரைன் நாட்டின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலை நியாயப்படுத்தும் விதமாக தகவல்கள் வெளியிடுகின்றன. எனவே, முகநூல் தளம், ஐரோப்பாவில் ரஷ்ய […]

Categories
உலக செய்திகள்

விமானிகள் பறக்க தடை விதிக்குமாறு உக்ரைன் கோரிக்கை… நேட்டோ நிராகரிப்பு…!!!

உக்ரைன், தங்கள் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்ய வேண்டும் என்று விடுத்த கோரிக்கை, நேட்டோவால் நிராகரிக்கப்பட்டிருக்கிற  து. உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 10-வது நாளாக ரஷ்யா தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதற்கு உக்ரைன் ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், இரண்டு தரப்பிலும் அதிக உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தரைவழி, வான்வழி, கடல் வழி என்று அனைத்து வழிகளிலும் தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. எனவே, உக்ரைன் அதிபர் […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: தாக்குதல் நடத்த பச்சைக்கொடி…. ரஷ்யாவின் கையில் “நோட்டா” வா…? கடும் கோபத்தில் “ஜெலன்ஸ்கி”….!!

உக்ரைனின் வான் பரப்பில் விமானங்கள் பறக்கக் தடை விதிக்கும்படி அதிபர் ஜெலன்ஸ்கி விடுத்த கோரிக்கையை நோட்டா அமைப்பு நிராகரித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 10 ஆவது நாளாக அதிபயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு தரப்பிலும் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இவ்வாறு இருக்க நோட்டா அமைப்பிடம் தங்களது வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கும்படி உக்ரேன் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கோரிக்கையை […]

Categories
உலக செய்திகள்

புடினை கொன்றால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும்… அமெரிக்க எம்பி அதிரடி…!!!

அமெரிக்காவின் எம்பி, புரூட்டஸ், ஜூலியஸ் சீசரை கொன்றதை குறிப்பிட்டு ரஷ்யாவில் புரூட்டஸ் இருக்கிறாரா? என்று கேட்டிருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வருவதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க செனட்சபையின் மூத்த உறுப்பினரான லிண்ட்சே கிரஹாம், உக்ரைனில் போர் நிறுத்தப்பட வேண்டுமெனில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கொல்லப்படவேண்டும் என்று கூறியிருக்கிறார். Is there a Brutus in Russia? Is there a more successful Colonel […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: இங்கிருந்து பொதுமக்கள் வெளியேறலாம்…. ரஷ்யா அறிவிப்பு…..!!!!!

கடந்த வாரம் உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 10-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது. இந்தப் போர் காரணமாக ரஷ்யா-உக்ரைன் ஆகிய இருநாடுகளிலும் உயிரிழப்புகள் அதிகம் நேர்ந்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை முற்பகல் 10.00 (உள்ளூர் நேரம்) முதல் நிறுத்தி வைப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைனில் 10 நாட்களாக போர் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், உக்ரைன் மக்களும், அங்கு சிக்கியுள்ள வெளிநாட்டினரும் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் போர் நடக்கும் […]

Categories
உலக செய்திகள்

“ராக்கெட் என்ஜின்கள் இனி உங்களுக்கு வழங்க மாட்டோம்”…. ரஷ்யாவின் அதிரடி முடிவு….!!

அமெரிக்காவுக்கும் ராக்கெட் என்ஜின் ஏற்றுமதியை நிறுத்த ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான முடிவெடுத்துள்ளது.  உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ளதால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் ரஷ்யாவிடம் இந்த போரினை நிறுத்துமாறு வலியுறுத்தியது. இதனை ஏற்க மறுத்ததால் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ரஷ்யா மற்றும் அந்நாடு அதிபர் புதின் மீதும் அடுத்தடுத்து பொருளாதார தடைகளை விதித்து வரும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சர்வதேச […]

Categories
உலக செய்திகள்

“அவங்க பயங்கரமான ரவுடிகள்!”…. உக்ரைன் மக்களை பற்றி பேசிய புடின்…!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் மக்கள் பயங்கர ரவுடிகள் என்று தெரிவித்திருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 9-வது நாளாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அதற்கு, உக்ரைனும் தகுந்த பதிலடி கொடுத்து வருவதால் இரண்டு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. இதனிடையே, உலக நாடுகளும் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனினும், ரஷ்ய படைகள் தாக்குதலை நிறுத்தவில்லை. தொடர்ந்து பல நகரங்களை கைப்பற்றி கொண்டிருக்கின்றன. இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தங்கள் […]

Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ பயங்கரம்!”…. உக்ரைன் மக்களை தூக்கிலிட ரஷ்யா திட்டம்… அதிர்ச்சி தகவல்…!!!

உக்ரைனில் தாங்கள் ஆக்கிரமித்த நகர்களின் மக்களை வெளிப்பகுதிகளில் தூக்கிலிடுவதற்கு அல்லது சுட்டுக்கொலை செய்வதற்கு ரஷ்யா திட்டமிட்டிருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 9-வது நாளாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதனை உலகநாடுகள், கடுமையாக எதிர்க்கின்றன. மேலும், தங்கள் நாட்டில், ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளில் உக்ரைன் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், ரஷ்யா தாங்கள் கைப்பற்றிய நகரங்களைச் சேர்ந்த மக்களை வெளிப்பகுதியில் தூக்கிலிடுவதற்கு அல்லது சுட்டு கொலை செய்வதற்கு திட்டமிட்டிருப்பதாக அதிர்ச்சிகரமான  […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யர்களின் சொத்துக்களை பறிமுதல்” செய்யிங்க…. அதிரடி கொடுத்த உக்ரேன்…. 9 ஆவது நாளாக நீடிக்கும் போர்….!!

ரஷ்யா உக்ரேனின் மீது 9 ஆவது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றம் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. ரஷ்யா உக்ரேன் மீது தொடர்ந்து 9 ஆவது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. மேலும் ரஷ்யா உக்ரேன் மீது ஏவுகணை மழை பொழிந்து வருகிறது. இவ்வாறு இருக்க தற்போது வரை 8.74 லட்சம் உக்ரேனிய மக்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அண்டை நாடுகளுக்குள் தஞ்சம் புகுந்துள்ளார்கள். இந்நிலையில் ரஷ்யாவின் இந்த அதிபயங்கர […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனின் நிலை மேலும் மோசமடையும்…. அதிர்ச்சி தகவல் வெளியிட்ட பிரான்ஸ் அதிபர்…!!!

உக்ரைன் நாட்டின் நிலை மேலும் மோசமடைய வாய்ப்பிருப்பதாக விளாடிமிர் புடினுடன் பேசிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் தகவல் வெளியிட்டிருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 9-ஆம் நாளாக கடும் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. உக்ரைனும், அதற்கு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், இரு தரப்பிலும் உயிர் பலிகள் அதிகம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போரை நிறுத்துவதற்கு ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் மேற்கொண்ட இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி… ரஷ்யா, பெலாரஸ் நாடுகளின் திட்டங்கள் நிறுத்தம்… உலக வங்கி அதிரடி…!!!

உலக வங்கி, ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாட்டின் அனைத்து திட்டங்களையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து, கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை அறிவித்திருக்கின்றன. இந்நிலையில், உலக வங்கி, ரஷ்யா மற்றும் அதற்கு ஆதரவளிக்கும் பெலாரஸ் நாட்டின் திட்டங்கள் அனைத்தையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இது குறித்து உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, உக்ரைன் நாட்டின் மீது […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் மாட்டிக்கொண்ட இந்தியர்களுக்கு பேருந்துகள் தயார்… ரஷ்ய அரசு அறிவிப்பு…!!!

ரஷ்ய அரசு, உக்ரைன் நாட்டில் மாட்டிக்கொண்ட இந்திய மாணவர்கள் மற்றும் பிற நாட்டு மக்களை வெளியேற்றுவதற்கு 130 பேருந்துகள் தயாராக உள்ளதாக அறிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 9வது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, இந்திய அரசு, தங்கள் மக்களை அந்நாட்டிலிருந்து மீட்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறது. இந்திய மக்களை உக்ரைன் நாட்டிலிருந்து மீட்கும் பணிகளுக்கு ருமேனியா, போலந்து மற்றும் ஹங்கேரி போன்ற நாடுகள் உதவி வருகின்றன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: உக்ரைனில் தவிக்கும் இந்திய மாணவர்கள்…. 130 பேருந்துகள் ஏற்பாடு…. ரஷ்யா அதிரடி….!!!!!

கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வாரம் உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 9-வது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய […]

Categories
உலக செய்திகள்

சொந்த காசுல சூனியம்னா இதானோ…. “இந்தியாவின் மீது பொருளாதார தடையா”…? தீவிர ஆலோசனையில் “ஜோ பைடன்”….!!

ரஷ்யாவிடமிருந்து எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்கும் இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து அதிபர் ஜோ பைடன் ஆலோசித்து வருவதாக தெற்காசியாவுக்கான அமெரிக்க வெளியுறவு அதிகாரி தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடமிருந்து 2016 ஆம் ஆண்டிலிருந்தே இந்தியா ஆயுதங்களை அதிகமாக இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில் இந்தியா ரஷ்யாவிடமிருந்து எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்குகிறது. இதனால் இந்தியாவின் மீது பொருளாதார தடை விதிக்கவா வேண்டாமா என்று அதிபர் ஜோ பைடன் ஆலோசித்து வருவதாக […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மக்களுடன் நிற்போம்… உதவ முன்வந்த அமேசான் நிறுவனம்…!!!

உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக அமேசான் இருக்கும் எனவும் தொடர்ந்து உதவிகள் வழங்கப்படும் எனவும் அந்நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தீவிரமாக போர் தொடுத்து வருவதால், உயிரைக் காப்பதற்காக அந்நாட்டு மக்கள் பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள். தற்போது உக்ரைன் நாட்டில் இருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்தை நெருங்கியுள்ளது. மேலும் உக்ரைன், ரஷ்யாவின் தாக்குதலால் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. எனவே, மேற்கத்திய நாடுகள் உக்ரைனிற்கு உதவி அளித்து வருகின்றன. […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: இந்தியாவின் ஆதரவு ரஷ்யாவிற்கா…? வீடியோவில் கசிந்த ரகசியம்…!!

நாளை ஏவப்படவுள்ள ஒன் வெப் ராக்கெட்டில் இந்தியா கொடியை தவிர அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கொடிகளை மறைப்பது தொடர்புடைய வீடியோவை ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ்ஸின் தலைவர் வெளியிட்டுள்ளார். ரஷ்யா உக்ரேன் மீது தொடர்ந்து 8 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. மேலும் ரஷ்யா உக்ரேன் மீது ஏவுகணை மழையை பொழிந்து வருகிறது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இவ்வாறு இருக்க ரஷ்யாவின் மீது அமெரிக்கா மற்றும் […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைனில் நடக்கும் போரை எதிர்த்து”…. ரஷ்யாவில் போராட்டம்… 7615 பேர் கைது…!!!

ரஷ்ய நாட்டின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யப்படைகள் தொடர்ந்து எட்டாம் நாளாக கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் பெரும்பாலான ராணுவ இலக்குகள் ரஷ்ய படைகளால்  அழிக்கப்பட்டிருக்கின்றன. உக்ரைனும் இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதால் இரு தரப்பிலும் உயிர் பலிகள் அதிகம் ஏற்பட்டிருக்கின்றன. இந்நிலையில், உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கு எதிராக, ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

#JUSTIN: வெளிநாட்டினர் தப்பிச் செல்ல மறுப்பு…. ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 8-வது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிற்கு உதவும் பெலாரஸ்… தொடர்ந்து பொருளாதார தடை விதிக்கும் நாடுகள்…!!!

ரஷ்ய நாட்டிற்கு உதவும் பெலாரஸ் நாட்டின் மீது உலக நாடுகள் தொடர்ந்து பொருளாதார தடைகளை அறிவித்து வருகின்றன. ரஷ்ய படைகளை தங்கள் நாட்டில் குவிப்பதற்கு பெலாரஸ் உதவியது. மேலும், உக்ரைன் நாட்டிற்குள் பெலாரஸ் படைகள் நேரடியாக களமிறங்கியுள்ளன. இதனை உலக நாடுகள் கடுமையாக எதிர்த்தன. எனவே, ரஷ்யாவுடன் இணைத்து பெலாரஸ் நாட்டின் மீதும் உலக நாடுகள் பொருளாதார தடைகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் ராணுவத்திற்குரிய தொழில்நுட்பத்திற்கான ஏற்றுமதியை பாதிக்கும் வகையில், அமெரிக்கா, […]

Categories
உலக செய்திகள்

பாரீஸ் அருங்காட்சியகத்தில் இருந்த புடின் சிலை நீக்கம்… உக்ரைன் அதிபர் சிலையை வைக்க பரிசீலனை…!!!

உக்ரைனில் தாக்குதல் மேற்கொள்வதை எதிர்க்கும் விதமாக, பாரிஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த அதிபர் விளாடிமிர் புடினின் மெழுகு சிலை நீக்கப்பட்டிருக்கிறது. பிரான்சின், பாரிஸ் நகரத்தில் இருக்கும் கிரெவின் அருங்காட்சியகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் மெழுகு சிலை நீக்கப்பட்டது. கடந்த 2000-ஆம் வருடத்தில் இந்த சிலை உருவாக்கப்பட்டது. இந்நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை அந்த சிலையை ஒரு கிடங்கில் வைத்திருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: 9 ஆயிரம் ரஷ்ய ராணுவ துருப்புகள் பலி…. உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம்….!!!!!

கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 8-வது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன்-ரஷ்யா இடையேயான […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைன் போர்!”…. படுகாயமடைந்த சீன மாணவர்… சீன அரசு வெளியிட்ட தகவல்…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் சீனாவை சேர்ந்த ஒரு மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா தொடர்ந்து தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அங்கு நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் சீனாவை சேர்ந்த ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக சீன வெளியுறவு துறை அமைச்சரான வாங் வென்பின் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது, உக்ரைன் நாட்டில் இருக்கும் சீன தூதரகம் காயமடைந்த அந்த நபருடன் தொடர்பில் இருக்கிறது. அவர் […]

Categories
உலக செய்திகள்

கெர்சன் நகரை கைப்பற்றியது ரஷ்யா…. உக்ரைன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

கெர்சன் நகரை ரஷ்யா கைப்பற்றிவிட்டதாக உக்ரைன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் கெர்சன் நகரை கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா அறிவித்திருந்தது. இந்நிலையில் உக்ரைன் அரசு அதனை உறுதி செய்துள்ளது. மேலும் ரஷ்யா, உக்ரைன் நாட்டின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ் மீது தாக்குதலை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

FlashNews: சற்றுமுன் தொலைபேசியில் பேசிய மோடி – அப்படியே கேட்டு ரஷ்யா எடுத்த சூப்பர் முடிவு…!

இந்திய மாணவர்களை மீட்க உதவுமாறு ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்க ரஷ்யா உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க ரஷ்யா முழு ஒத்துழைப்பு வழங்கும் என பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் புதின் உறுதியளித்தார்.

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படைகள் பயங்கர தாக்குதல்…. கடும் சேதமடைந்த காவல்நிலைய தலைமையகம்…!!!

உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரத்தில் இருக்கும் காவல்நிலையத்தின் தலைமையகத்தில் ரஷ்ய படைகள் பயங்கரமாக தாக்குதல் நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது, ரஷ்யா தொடர்ந்து 7-ஆம் நாளாக கடுமையாக தாக்குதல் நடத்திவருகிறது. எனவே, உக்ரைன் அரசு, தங்களைக் காத்துக் கொள்வதற்காக பொதுமக்களுக்கு துப்பாக்கிகளை வழங்கி எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், ரஷ்ய படைகள் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகராக விளங்கும் கார்க்கிவிற்குள் புகுந்திருக்கிறது. அதன்பிறகு, அங்கிருக்கும் மருத்துவமனையில் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் உக்ரைனிற்கு போர் விமானங்கள் அனுப்பமாட்டோம்…. போலந்து அறிவிப்பு…!!!

போலந்து அரசு, உக்ரைன் நாட்டிற்கு போர் விமானங்கள் அனுப்பப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. எனவே, கடந்த மாதம் 27 ஆம் தேதி அன்று உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 50 கோடி டாலர் மதிப்பு கொண்ட போர் விமானங்கள், ஆயுதங்களை அந்நாட்டிற்கு அனுப்ப ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு மந்திரிகள் தீர்மானித்தனர். இந்நிலையில் நேட்டோ அமைப்பில் இருக்கும் போலந்து, உக்ரைன் நாட்டிற்கு போர் […]

Categories
உலக செய்திகள்

வாழ்வா சாவா போராட்டம்…. 3ஆம் உலகப்போரில் அணு ஆயுதங்கள்…. ரஷ்யா எச்சரிக்கை…..!!!!!

கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 7-வது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் உக்ரைனின் இரண்டாவது […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய விமான நிறுவனங்களின் சேவைகள் நிறுத்தம்… அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு…!!!

அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனம், ரஷ்ய விமான நிறுவனங்களுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 7வது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் ராணுவத் தளங்கள் பெரும்பாலானவை ரஷ்யப் படைகளால் அழிக்கப்பட்டிருக்கின்றன. எனவே, உக்ரேன் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. பொதுமக்களும் வீதிகளில் இறங்கி ஆயுதங்களுடன் ரஷ்ய படைகளை எதிர்த்து வருகிறார்கள். இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய பீரங்கியை திருடிச்செல்லும் உக்ரைன் விவசாயி…. வைரலாக பரவும் வீடியோ…!!!

ரஷ்ய படைகள் வைத்திருந்த பீரங்கியை உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒரு விவசாயி திருடிச் செல்லும் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்றோடு ஏழாவது நாள் ஆகிறது. அங்கு ராணுவ தளங்களை நோக்கி ரஷ்யா கடுமையாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. எனவே, தங்கள் நாட்டை காப்பதற்காக உக்ரைன் நாட்டு மக்களும் போர் களத்தில் குதித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவர்கள், தெருக்களில் ரஷ்ய படைகளை எதிர்த்து மோதி வருகிறார்கள். […]

Categories
உலக செய்திகள்

கார்கிவ் நகரில் புகுந்த ரஷ்ய வான்வழிப்படைகள்…. மருத்துவமனை மீது தாக்குதல்…!!!

உக்ரைன் ராணுவம், கார்கிவ் பகுதியில் ரஷ்ய வான்வழிப்படைகள் புகுந்து மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படைகள் தொடர்ந்து 7-வது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் ராணுவ இலக்குகள், பெரும்பாலானவை ரஷ்யப் படைகளால் அழிக்கப்பட்டிருக்கின்றன. எனவே, உக்ரைன் அரசு தங்களை காப்பதற்காக பதில் தாக்குதல் நடத்துவதால் இரு தரப்பிலும் அதிக உயிர்பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்நிலையில், ரஷ்ய வான்வெளி படைகள் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகராக விளங்கும் கார்கிவ் பகுதிக்குள் […]

Categories
உலக செய்திகள்

இதற்கு அதிக விலை தர நேரிடும்… ரஷ்யாவை எச்சரிக்கும் ஜோ பைடன்…!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் மீது தாக்குதல் மேற்கொள்வதற்கு மிகப்பெரிய விலையை கொடுக்க நேரும் என்று ரஷ்யாவை எச்சரித்திருக்கிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யாவின் தண்டனை புலிகளின் குற்றங்களை கண்காணிப்பதற்கு என்று சிறப்பாக பணிக்குழு ஒன்றை அமெரிக்க நீதித்துறை கூட்டி வருவதாக கூறியிருக்கிறார். இது பற்றி அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருப்பதாவது, உக்ரைன் மக்களுக்கு துணையாக இருக்கிறோம். உக்ரைன் மக்கள் முழு துணிச்சலுடன் போராடுகிறார்கள். விளாடிமிர் புடின், இந்த போரில் ஆதாயங்களை பெற்றாலும் நெடுங்காலத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

ஆயுதமேந்திய மக்கள்…. உத்வேகத்துடன் போர்க்களத்தில் புதுமணத் தம்பதிகள்….!!!

உக்ரைனில் நாட்டை காக்க களமிறங்கிய இளம் தம்பதிகள் போர்க்களத்தில் தேனிலவை கழித்துள்ளனர். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது கடந்த 24ஆம் தேதியன்று படையெடுக்கத்தொடங்கி, அங்கு கடும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. எனவே, உக்ரைன் அரசு, மக்களுக்கு துப்பாக்கிகளை வழங்கி, பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், உக்ரைன் போர்க்களமாக மாறி, கடும் வன்முறை நிலவுகிறது. இந்நிலையில், கடந்த வாரத்தில் திருமண செய்த யாரினா அரிவா மற்றும் ஸ்வியாடோஸ்லாவ் பர்சின் என்ற இளம் தம்பதி, தங்கள் நாட்டை காக்க […]

Categories
உலக செய்திகள்

அத்துமீறும் ரஷ்யா…. டிவி கோபுரம் மீது ஏவுகணை தாக்குதல்…. வெளியான முக்கிய தகவல்…!!

உக்ரேன் தலைநகரிலுள்ள உலகின் 2 ஆவது உயரமான டிவி கோபுரத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. ரஷ்யப் படைகள் உக்ரேன் மீது தொடர்ந்து 6-வது நாளாக படையெடுத்து வருகிறது. மேலும் ரஷ்யா உக்ரேன் மீது ஏவுகணை மழையை பொழிந்து வருகிறது. அதிலும் முக்கியமாக உக்ரைனிலுள்ள அரசு கட்டிடங்கள், ராணுவ நிலையங்கள், உளவுத் துறை அலுவலகங்களின் மீது ரஷ்யா ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் சிக்கி தலைநகர் கீவ் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

“நாங்களும் கண்டிக்கிறோம்”…. பொருளாதார தடை…. பிரபல நாட்டின் அறிவிப்பு….!!

ரஷ்யா மீது போடப்பட்டுள்ள பொருளாதார தடைகளுக்கு சீனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்து உள்ளது. இதனால் கனடா, அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளனர். மேலும் ரஷ்ய வங்கிகள் சில பெரும்பாலான சர்வதேச நிதி பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தும் கட்டணம் முறையான ‘ஸ்விப்ட்’  அமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ரஷ்யா பொருளாதார தடைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது பொருளாதார தடை நடவடிக்கைகளுக்கு சீனாவும் […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைனில் போர் தீவிரம்:”… அகதிகளாக வெளியேறிய 5 லட்சம் மக்கள்… ஐநா அகதிகள் ஆணையம் வெளியிட்ட தகவல்…!!!

உக்ரைன் நாட்டில் போர் காரணமாக 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அகதிகளாக வெளியேறியதாக ஐநா அகதிகள் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து ஆறாவது நாள் ஆகிறது. இராணுவத்தளங்கள்  மட்டுமல்லாமல், குடியிருப்பு பகுதிகளிலும் ரஷ்ய படைகள் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. போர் பதற்றத்தால், உக்ரைன் நாட்டை சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உட்பட ஐந்து லட்சம் மக்கள் அங்கிருந்து அகதிகளாக வெளியேறிவிட்டதாக ஐநா அகதிகள் ஆணையம் கூறியுள்ளது. ரஷ்யா தாக்குதல் மேற்கொள்ள தொடங்கிய […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் இராணுவத்தளத்தை நோக்கி தாக்குதல்… 70 இராணுவ வீரர்கள் பலி…!!!

உக்ரைன் நாட்டின் தலைநகர் மற்றும் கார்க்கிவ் நகரங்களுக்கு இடையில் அமைந்திருக்கும் ராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் வீரர்கள் 70 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 6-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. பல நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி, ரஷ்யா தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் நாட்டின் ராணுவ தளங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்துகிறது. ஆரம்பத்தில், ரஷ்யாவை எதிர்த்து, உக்ரைன் தீவிரமாக எதிர்த்தாக்குதல் நடத்தியது. ஆனால் தற்போது […]

Categories

Tech |