Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர்: பேச்சுவார்த்தையை மீறிய ரஷ்யா…. குமுறும் “உக்ரேன் அதிகாரிகள்”….!!

ரஷ்யா பேச்சையை மீறி உக்ரைனிலுள்ள கீவ், செர்னிகிவ் நகரங்களில் விமானங்களின் மூலம் குண்டு மழை பொழிந்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். உக்ரைன், ரஷ்யா நாடுகளுக்கிடையே ஒரு மாத காலத்திற்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் பலம்வாய்ந்த ரஸ்யா உக்ரேனின் பல பகுதிகளில் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதனையடுத்து இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின் ரஷ்யா கீவ், செர்னிகிவ் ஆகிய நகரங்களிலிருந்து தங்களது படைகளை பின் வாங்கிக் கொள்வதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அங்கிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா முடிவு?…. பதிலளித்த வெளியுறவுத்துறை மந்திரி…..!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யா போர் நீடித்து வரும் நிலையில், இப்போர் உலக நாடுகளின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போரை அடுத்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பல பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதே சமயம் மேற்கத்திய நாடுகள், ஆசிய நாடுகள், வளைகுடா நாடுகள் என்று பல நாடுகளும் இப்போரில் தங்களது நிலைப்பாட்டை கவனமாக கையாண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இப்போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகள் மிகவும் கூர்மையாக கண்காணித்து வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

“இந்த திட்டத்தை கைவிட முடியாது”…. ரஷ்யாவுடன் கைகோர்க்கும் ஜப்பான்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் ரஷ்யாவின் ஷக்லின் தீவில் உள்ள கடல் பகுதியில் அதிக அளவில் உள்ளது. ரஷ்ய எண்ணெய் நிறுவனம் இந்த இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. ஜப்பான் அரசும் ஷக்லின்-2 என்ற இந்தத் திட்டத்தில் ரஷ்யாவுடன் இணைந்து செயல்படுகிறது. ஜப்பானின் இரண்டு நிறுவனங்கள் இந்த திட்டத்தில் மொத்தம் 22.5 சதவீத பங்குகளை வைத்துள்ளது. ரஷ்யாவில் இருந்து ஜப்பானுக்கு இந்த திட்டத்தின் மூலம் அதிக அளவில் இயற்கை […]

Categories
உலக செய்திகள்

வர்த்தக நட்பை பலப்படுத்த…. இந்தியாவிற்கு வரும் ரஷ்ய அமைச்சர்…!!!

ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்து கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்திருப்பதால் இந்தியாவுடன் வர்த்தக நட்பை பலப்படுத்த விரும்புவதாக கூறப்படுகிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா, ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. இதன் காரணமாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அந்நாட்டின் மீது கடும் பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளன. இந்நிலையில், ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான செர்ஜி லாவ்ரோவ், ஆசியாவிற்கு சுற்றுபயணம் சென்றிருக்கிறார். அவர் இன்று டெல்லிக்கு வருகை தர உள்ளார். இதற்கிடையில் உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் ராணுவம் புடினை தவறாக வழிநடத்துகிறது… வெள்ளைமாளிகை கருத்து…!!!

அமெரிக்க அரசு, ரஷ்ய ராணுவம், அதிபர் விளாடிமிர் புடினை தவறாக வழிநடத்துகிறது என்று கூறியுள்ளது. வெள்ளை மாளிகையின் செய்தியாளர் செயலாளரான கேட் பெடிங் பீல்ட் கூறியிருப்பதாவது, “நான் என்ன சொல்வது, கண்டிப்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அந்நாட்டு  ராணுவத்தினரால் தவறாக வழிநடத்தப்பட்டிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்திருக்கிறது என்றார். மேலும், இந்த தகவலானது, அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அவரின் ராணுவத் தலைமைக்கும் இடையே தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று கூறியிருக்கிறார்  .

Categories
உலக செய்திகள்

“அமெரிக்கர்களே” உடனே நாடு திரும்புங்கள்…. இவர்கள் உங்களை துன்புறுத்த வாய்ப்பு…. வெளியான முக்கிய ஆலோசனை….!!

அமெரிக்க வெளியுறவுத் துறை முக்கிய பயண ஆலோசனை ஒன்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை முக்கிய பயண ஆலோசனை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ரஷ்யாவிலிருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக தங்கள் நாட்டிற்கு திரும்பும்படி அறிவுறுத்தியுள்ளது. ஏனெனில் உக்ரேனில் நிலவும் அதிபயங்கர போரின் காரணத்தால் ரஷ்யாவிலிருக்கும் அமெரிக்க குடிமக்களை அந்நாட்டு அதிகாரிகள் துன்புறுத்துவதற்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. மேலும் அமெரிக்க குடிமக்கள் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. உலக நாடுகளில் உணவுப்பஞ்சம்?…. உதவிக்கரம் நீட்டும் கனடா…!!!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உக்ரைன் போரால் உலகநாடுகள் எதிர்கொள்ள உள்ள உணவு, எரிசக்தி தட்டுப்பாட்டை தீர்க்க உதவி செய்வோம் என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்த போரால், இரண்டு நாடுகளின் அடிப்படை வசதி, பொருளாதாரம் உணவுத் தேவை மட்டும் பாதிக்கப்படவில்லை. உலக நாடுகளிலும் உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இனி வரும் நாட்களில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் படைகளுக்கு தெரியாமல் உதவிய ரஷ்யா…. அப்படி என்ன உதவி…? சுவாரஸ்ய தகவல்…!!!!

ரஷ்யப்படையினரின் ஆயுதங்களே அவர்களுக்கு எதிராக மாறியுள்ளது. உக்ரைன் நாட்டின் Kyiv என்ற நகரத்திற்கு 40 மைல்கள் தூரத்தில் இருக்கும் Rudnytske என்ற சிறிய கிராமத்தை ரஷ்ய படைகளிடமிருந்து உக்ரைன் மீட்டுவிட்டது. அங்கு ரஷ்ய படை, 3 tank-கள்,  ஆயுதமேந்திய ஒரு கனரக வாகனத்தை விட்டுச் சென்றிருக்கிறார்கள். இதேபோன்று ரஷ்ய படையினர் கைப்பற்றிய Irpin நகரத்தையும் உக்ரைன் மீட்டு விட்டது. அந்த பகுதியிலும்  BMD-4M என்ற ராணுவத்தில் புகழ்வாய்ந்த ஒரு போர் வாகனத்தை அவர்கள் விட்டுச் சென்றுவிட்டனர். தற்போது […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்… உலக குத்துசண்டை சாம்பியன் பலி…. நிச்சயம் பழி வாங்குவோம்…. பயிற்சியாளர் ஆவேசம்…!!!

உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்ட போரில் உக்ரைன் நாட்டை சேர்ந்த முதல் உலக குத்துச்சண்டை வீரர் உயிரிழந்திருக்கிறார். உக்ரைன் நாட்டில் ரஷ்யா ஒரு மாதத்தை தாண்டி தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் மரியுபோல் என்ற முக்கிய துறைமுக நகரை பாதுகாப்பதற்காக அசோவ் சிறப்பு படை பிரிவினருடன், உக்ரைனின் பிரபல குத்துச்சண்டை சாம்பியனான மாக்சிம் காகலும் கைகோர்த்திருந்தார். ⚡️ Ukrainian kickboxing champion killed in combat while defending Mariupol. Maksym Kagal, ISKA […]

Categories
உலக செய்திகள்

புடினை கடுமையாக விமர்சித்த ஜோ பைடன்… கண்டனம் தெரிவிக்கும் பிரான்ஸ்…!!!

ஒரு நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குறித்து பேசிய வார்த்தைகளுக்கு பிரான்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய அதிபர் குறித்து ‘For god’s sake this man cannot remain in power’ என்று கூறியிருக்கிறார். மேலும் உக்ரைன் நாட்டை தாண்டி வேறு எந்த நாட்டிற்கும் நுழைய நினைக்கக்கூடாது எனவும், குறிப்பாக நேட்டோ எல்லை பகுதிக்குள் ஒரு சிறு இடத்திலும் கால் வைக்க முயலக்கூடாது என்றும் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் கடத்தப்பட்ட மேயர்கள் கொலை…. அதிபர் ஜெலென்ஸ்கி கடும் குற்றச்சாட்டு…!!!

உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யப்படைகள் கடத்திச்சென்ற தங்கள் நாட்டின் மேயர்களில் சிலர் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தீவிரமாக போர்தொடுத்து வரும் நிலையில், அந்நாட்டின் கீவ், மரியுபோல் போன்ற முக்கிய நகரங்களை கைப்பற்ற ரஷ்யப் படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் அதிபர், ரஷ்ய படைகள் கடத்திச்சென்ற தங்கள் நாட்டின் மேரியர்களில் சிலர் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டியிருக்கிறார். ⚡️ Zelensky: Some mayors abducted by Russia turned up dead. “(Russians) […]

Categories
உலக செய்திகள்

இருநாட்டு அதிபர்களும் சந்தித்தால்… இது தான் நடக்கும்…. அதிரடியாக கூறிய ரஷ்ய அமைச்சர்…!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், உக்ரைன் ஜனாதிபதியும் சந்தித்தால் நிச்சயம் எதிர்மறையாகத் தான் இருக்கும் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ஒரு மாதத்தை தாண்டி கடுமையாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளை சேர்ந்த அதிகாரிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் நேற்று ரஷ்யாவின் வெளியுறவு துறை அமைச்சரான செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்ததாவது, ரஷ்யா மேற்கொண்டிருக்கும் ராணுவ நடவடிக்கை தொடர்பில், துருக்கி […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் அதிபரை கொலை செய்ய முயற்சி… சிக்கிய 25 பேர் கொண்ட குழு…!!!

உக்ரேன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கியை கொலை செய்வதற்கு ரஷ்ய சிறப்பு ஏஜென்சி மேற்கொண்ட திட்டம் தடுக்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. ரஷ்ய நாட்டின் சிறப்பு ஏஜென்சி தலைமையில் 25 நபர்கள் கொண்ட ராணுவ குழுவினரை  ஹங்கேரி-ஸ்லோவாக்கியா எல்லைப்பகுதியில் உக்ரைன் அதிகாரிகள் பிடித்துவிட்டனர். இந்த குழுவினர் உக்ரைன் அதிபரை கொல்வதையே நோக்கமாகக் கொண்டிருந்துள்ளனர். உக்ரைன் அதிபர், தங்கள் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியது முதல் ரஷ்யாவின்  முதல் இலக்கு தான் தான் என்று கூறிவந்தார். இந்நிலையில் உக்ரைன் ரஷ்ய […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா: “கூடுதல் கல்வி கட்டணம் வேண்டாம்”…. இந்திய மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு….!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் காரணமாக அந்நாடு உருக்குலைந்து வருகிறது. இதனால் உக்ரைன் மக்கள் அண்டைநாடுகளுக்கு அகதிகளாக வெளியேறி வருகின்றனர். இதேபோன்று  உக்ரைன் நாட்டின் உயர் கல்விநிறுவனங்களில் படித்து வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டுமாணவர்களும் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பிவிட்டனர். அந்த அடிப்படையில் உக்ரைனில் மருத்துவம், பொறியியல் ஆகிய உயர்படிப்பு பயின்று வந்த சுமார் 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர். இதில் ஏராளமானோர் மருத்துவ மாணவர்கள் ஆவர். உக்ரைனில் இதுவரை போர் […]

Categories
உலகசெய்திகள்

உக்ரேனோட போகாது…. “ஐரோப்பிய நாடுகளையும்” கதிர்வீச்சு தாக்கும்…. ஆபத்தில் செர்னோபில் அணுமின் நிலையம்…. எச்சரித்த துணை பிரதமர்…!!

ரஷ்யப் படைகள் செர்னோபில் அணுமின் நிலையத்தை சுற்றி பொறுப்பற்ற செயல்களில் ஈடுபட்டதாக கூறி உக்ரைன் நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டியுள்ள நிலையில் இதுகுறித்து அந்நாட்டின் துணை பிரதமர் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ரஷ்ய படைகள் செர்னோபில் அணுமின் நிலையத்தை சுற்றி பொறுப்பற்ற செயல்களில் ஈடுபட்டதாக உக்ரைன் நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து உக்ரைன் நாட்டின் துணை பிரதமரான இரினா தனது சமூக வலைதளப் பக்கத்தில் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால்…. தக்க பதிலடி கொடுப்போம்…. ரஷ்யாவை எச்சரிக்கும் நேட்டோ…!!!

நேட்டோ அமைப்பு, உக்ரைன் நாட்டின் மீது கண்மூடித்தனமான போரை மேற்கொண்டிருக்கும் ரஷ்யா ஒருபோதும் வெல்லாது என்று தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பதை தொடர்ந்து நேட்டோ அமைப்பினுடைய துணை பொதுச் செயலாளரான மிர்சியா ஜியோனா தெரிவித்திருப்பதாவது, உக்ரைன் நாட்டின் மீது கண்மூடித்தனமான தாக்குதல் கொண்டிருக்கும் ரஷ்யா ஒரு போதும் வெல்ல முடியாது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா, ரசாயனம் அல்லது அணுசக்தி தாக்குதலை மேற்கொண்டால் நேட்டோ உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். நேட்டோ அமைப்பு […]

Categories
உலக செய்திகள்

அணு ஆயுத அச்சுறுத்தல்…. உண்மையை உடைத்த ரஷ்யா….!!!!

கடந்த ஒரு மாத காலமாக ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைனும் பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இரு தரப்பிலும் ராணுவ வீரர்கள், குடிமக்கள் என ஆயிரக்கணக்கானோர் மரணித்துள்ளனர். மேலும் பலர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வடேவ் இந்த போர் அணு ஆயுத போராக மாற வாய்ப்புள்ளதா ?என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் பேசும்போது, […]

Categories
உலகசெய்திகள்

“உடனடியா போரை நிறுத்துங்க”…. இல்லைனா இதுதான் கதி…. ரஷ்யாவுக்கு செக் வைத்த இங்கிலாந்து….!!

ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டுமெனில் உக்ரைன் நாட்டுடனான போரை நிறுத்த வேண்டும் என்று இங்கிலாந்து தெரிவித்துள்ளது. ரஷ்யா உக்ரேன் மீது ஒரு மாதத்திற்கும் மேல் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனை கண்டித்து மற்ற நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்துள்ளது. அந்த வகையில் இங்கிலாந்தும் ரஷ்யா நாட்டிற்கு சொந்தமான 5,100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியதோடு அந்நாட்டின் தொழிலதிபர்கள்,  செல்வந்தர்கள் மீதும் பொருளாதார தடையை விதித்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து வெளியுறவு […]

Categories
உலக செய்திகள்

அமைதி ஒப்பந்தத்தை மீறும் அஜர்பைஜான்…. குற்றம்சாட்டும் ரஷ்யா…!!!

ரஷ்ய அரசு, போர்நிறுத்த ஒப்பந்தத்தை அசர்பைஜான் மீறுகிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறது. அஜர்பைஜான் நாட்டிற்கும் அதன் பக்கத்து நாடான அர்மீனியாவிற்கும் இடையே கடந்த 2020 ஆம் வருடம் செப்டம்பர் மாதத்தில் போர் நடந்தது. தொடர்ந்து ஆறு வாரங்கள் போர் நடந்த நிலையில், அர்மீனிய நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த நாக்ரோனா-கராபாக் என்னும் மாகாணம்,  அஜர்பைஜானால் கைப்பற்றப்பட்டது. இந்த போரில், ஆறாயிரத்திற்கும் அதிகமான மக்கள் பலியாகினர். எனவே, ரஷ்யா இதில் தலையிட்டு இரண்டு நாடுகளுக்கும் இடையேயான போரை நிறுத்தி வைத்தது. […]

Categories
உலக செய்திகள்

#லைவ் அப்டேட்: தங்கள் நகரங்களை மீட்க போராடும் உக்ரைன்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

உக்ரைனுக்கு ஆயுதங்கள் தர மறுத்த ஹிங்கேரி பிரதமர். ரஷ்யா உக்ரைன் மீது 31வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இது தொடர்பாக இன்று நடந்த முக்கிய நிகழ்வுகள். இன்று மார்ச் 26 ஆம் தேதி அதிகாலை 1.52 மணி அளவில்  உக்ரைனின் தலைநகர் ஹர்சன் நகரை கைப்பற்றிய ரஷ்யாவிடம் இருந்து மீண்டும் தங்கள் வசம்  கொண்டுவர உக்ரைன் போராடி வருகிறது. இதனைத் தொடர்ந்து அதிபர் புதின்  ரஷ்யாவுக்கு எதிரான வதந்திகளை பரப்பு பவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறை […]

Categories
உலக செய்திகள்

மே மாதம் முடிவடையும் போர்…. ரஷ்யாவின் திட்டத்தை தெரிவித்த உக்ரைன் ராணுவம்…!!!

உக்ரைன் நாட்டின் ராணுவம் ரஷ்யா வரும் மே மாதம் 9ம் தேதிக்குள் போரை நிறுத்திக் கொள்ள விரும்புவதாக தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டில், ரஷ்யப் படைகள் தொடர்ந்து ஒரு மாதமாகப் போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் நாட்டின் பல முக்கிய நகரங்கள் ரஷ்ய இராணுவத்தால் கைப்பற்றப்பட்டிருக்கிறது.  இதற்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பிலும் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், ரஷ்யா மே மாதம் 9ம் தேதிக்குள் போரை நிறுத்திக் கொள்ள விரும்புவதாக உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

அப்படி போடு….! மத்திய வங்கி தங்கம் பயன்படுத்த…. ரஷ்யாவுக்கு செக் வைத்த ஜி7 நாடுகள்..!!!

உக்ரைன் மிதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் அமெரிக்கா ரஷ்யா மீது புதிய  பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில்  ஜி7 நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில்  இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ரஷ்யாவின் மத்திய வங்கி பரிமாற்றங்களில் தங்கத்தை பயன்படுத்த கட்டுப்பாடு போடா உள்ளதாக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 120 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை ரஷ்ய […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் குறித்த தீர்மானம்…. இந்தியா ஏன் வாக்களிக்கவில்லை…? விளக்கமளித்த டி.எஸ் திருமூர்த்தி…!!!

உக்ரைன் பிரச்சனை தொடர்பான தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காமல் இருந்ததற்கு என்ன காரணம்? என்று ஐ.நாவிற்கான இந்திய தூதர் தெரிவித்திருக்கிறார். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் உக்ரைன் மீது நடக்கும் தாக்குதலின் மனிதாபிமான விளைவுகள்” என்னும் தலைப்பிலான தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால் இந்த தீர்மானத்திற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளவில்லை. உக்ரைன் பிரச்சினை குறித்த சிறப்பு அவசர அமர்வில் இந்த தீர்மானத்திற்கு 140 வாக்குகள் ஆதரவாக கிடைத்திருந்தது. மேலும் தீர்மானத்திற்கு எதிராக 5 வாக்குகள் […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் இருக்கிறோம்…. “பல கோடி ரூபாய் நிதியுதவி”…. பிரிட்டன் பிரதமர் அதிரடி அறிவிப்பு….!!!

ரஷ்யாவின் பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகரிக்குமாறு பிரிட்டன் பிரதமர்  கூறியுள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி முதல் போர் தொடுத்து வரும் நிலையில் ரஷ்யப் படைகள் உக்ரைனின் தலைநகரங்களை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில். “பிரிட்டன் உக்ரைனுக்கு முன்னதாகவே 4000 பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் ஜாவலின் ரக ஆயுதங்களை வழங்கியுள்ள நிலையில் தற்போது கூடுதலாக ஏவுகணைகளை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில் தலைமறைவான புடினின் காதலி… நாடு கடத்துமாறு கோரிக்கை வைத்த மக்கள்…!!!

சுவிட்சர்லாந்தில் தலைமறைவாக இருக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ரகசிய காதலியை வெளியேற்றுமாறு 63 ஆயிரம் மக்கள் கையெழுத்திட்டு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அலினா கபேவா என்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மனைவி என்று கூறப்படுகிறது. இவர்களுக்கு நான்கு குழந்தைகள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. எனினும், இது தொடர்பாக தற்போது வரை அதிகாரபூர்வமான தகவல் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க தொடங்குவதற்கு முன்பாக தன் காதலியை சுவிட்சர்லாந்திற்கு புடின் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனிலிருந்து வரும் 1 லட்சம் அகதிகளுக்கு தங்கும் இடம்… வெளியான அறிவிப்பு…!!!

அமெரிக்கா உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒரு லட்சம் அகதிகளுக்கு தங்குமிடம் வழங்குதாக தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா மேற்கொண்டு வரும் போரால் அந்நாட்டிலிருந்து 35 லட்சம் மக்கள் வெளியேறியுள்ளனர். இவ்வாறு அகதிகளாக வெளியேறிய மக்கள் பக்கத்து நாடுகளான ருமேனியா, ஸ்லோவாகியா மற்றும் போலந்து போன்ற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்கா உக்ரைனிலிருந்து வெளியேறிய ஒரு லட்சம் அகதிகளுக்கு தங்குமிடம் வழங்குவதாக தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவின் ஒரு உயர் அதிகாரி, அமெரிக்கா ஒரு லட்சம் உக்ரைன் அகதிகளை வரவேற்கிறது என்று […]

Categories
உலக செய்திகள்

கூகுள் செயலிக்கு தடை விதித்த ரஷ்யா…. காரணம் என்ன?…. வெளியான தகவல்…..!!!!!

உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் சுமார் ஒருமாத காலமாக நீடித்து வருகிறது. இவ்வாறு உக்ரைன் மீதான தாக்குதலை தொடக்கிய பின் ரஷ்யாவின் மீது பல நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. எனினும் ரஷ்யா போரிலிருந்து பின்வாங்கத் தயாராக இல்லை. இதற்கிடையே உக்ரைனில் ரஷ்ய ராணுவ நடவடிக்கை தொடர்பாக போலியான செய்திகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தூண்டும் வகையிலான செய்திகளை அகற்றுவதற்கான, ரஷ்ய அரசாங்கத்தின் கோரிக்கைகளை புறக்கணிப்பதாக சமூகஊடக  நிறுவனங்கள் மீதான வழக்கில், சில நாட்களுக்கு முன்பு அந்நாட்டு நீதிமன்றம் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மீதான போருக்கு எதிர்ப்பு…. ஜனாதிபதி புடினின் ஆலோசகர் ராஜினாமா…!!!

ரஷ்ய நாட்டின் ஜனாதிபதி புடினின் ஆலோசகர் அன்டோலி சுபைஸ் உக்ரைன் மீதான போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து தன் பதவியிலிருந்து விலகி, நாட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார். ரஷ்ய ஜனாதிபதியின் ஆலோசகர் கடந்த 1990 காலகட்டங்களில் ரஷ்ய நாட்டின் பொருளாதார சீர்திருத்தங்களை கட்டமைத்த நபர்களில் முக்கியமானவர். அதிபர் விளாடிமிர் புடினின் வளர்ச்சிக்கு ஆதரவாக இருந்தவர். மேலும், சமீபத்தில் மரணமடைந்த, பொருளாதார நிபுணர் யெகோர் கைடார் குறித்து தன்  முகநூல் பக்கத்தில் அவர், தெரிவித்திருந்ததாவது, என்னை விட ரஷ்யா சந்திக்கும்  ஆபத்துக்களை சரியாக […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய போர்க்கப்பல்கள் அழிப்பு…. உக்ரைனில் பயங்கரமாக எரியும் துறைமுகம்… வெளியான வீடியோ…!!!

உக்ரைன் நாட்டில் இருக்கும் Berdyansk என்ற துறைமுகம் தீ பற்றி எரியும் காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. ரஷ்யப் படை மேற்கொண்ட தாக்குதலில் உக்ரைன் நாட்டின் துறைமுகம் பயங்கரமாக எரிவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த துறைமுகத்தை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் படைகள் Berdyansk என்ற துறைமுகத்தில் நின்ற  ரஷ்யாவின் போர்க் கப்பலை தாக்கி அழித்திருக்கின்றன. We are told that #Russian ships have been hit in the port of #Berdyansk. We are […]

Categories
உலக செய்திகள்

அப்படி போடு….!! “அனைவரும் இறங்கி போராட வேண்டும்”…. ஜெலன்ஸ்கி எடுத்த அதிரடி அறிவிப்பு….!!!

ரஷ்யாவிற்கு எதிராக இன்று போராட்டம் நடத்துங்கள் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது 29வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் பல்வேறு நாடுகள் இந்த போரினை நிறுத்துவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். இதற்கிடையில் ஐரோப்பிய நாடுகளில் சில இடங்களில் ரஷ்யாவிற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவிற்கு எதிராக உலக அளவில் உள்ள மக்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் […]

Categories
உலக செய்திகள்

சக வீரர்களை இழந்த ஆத்திரம்…. கர்னல் மீது டாங்கை ஏற்றிய ரஷ்ய வீரர்…!!!

உக்ரைன் போரில், தங்கள் தரப்பில் அதிக இழப்பு ஏற்பட்ட கோபத்தில் ஒரு ரஷ்ய வீரர்தன் படைத் தலைவர் மீது ஒரு டாங்கை ஏற்றிருக்கிறார். ரஷ்யப் படைகள் உக்ரைன் நாட்டில் தீவிரமாக போர் தொடுத்து வருகின்றன. உக்ரைன் நாட்டிற்குள் 1500 படைவீரர்களுடைய ரஷ்ய டாங்க் படைப்பிரிவு ஊடுருவியது. இதில் ஏறக்குறைய பாதி வீரர்கள் உயிரிழந்து விட்டனர். இதனால் கடும் கோபத்தில் இருந்த ஒரு ரஷ்ய வீரர், தன் படைத் தலைவர் கர்னல் Yuri Medvedev மீது டாங்கை ஏற்றியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபர் புடினின் காதலி யார் தெரியுமா?… சொத்துமதிப்பு எவ்வளவு?… வெளியான தகவல்…!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் காதலி என்று கூறப்படும் அலினா கபேவா என்ற பெண்ணின் சொத்து மதிப்புகள் தொடர்பான தகவல்கள் தெரிய வந்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் காதலியான, ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா தற்போது சுவிட்சர்லாந்தில் தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவர் ஜிம்னாஸ்டிக்கில் ஓய்வு பெற்ற பின் அரசியல்வாதியாகவும் ஊடகத்துறையிலும் பதவி வகித்தார். கடந்த 2008-ஆம் வருடத்தில், அதிபர் விளாடிமிர் புடினின் ரகசிய […]

Categories
உலக செய்திகள்

இனிமேல் தான் அச்சுறுத்தல் இருக்கிறது…. எச்சரிக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்…!!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஐரோப்பிய நாடுகளுக்கு நான்கு நாட்கள் பயணம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைன் நாட்டின் மீது நடக்கும் போர் தொடர்பில் விரிவாக ஆலோசனை செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பத்திரிகையாளரிடம் ஜோ பைடன் தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ரசாயன தாக்குதல் மேற்கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது. இது பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். தற்போது ஏற்பட்டிருக்கும் தளவாட சிக்கல்களாலும்,  உக்ரைனின் கடும் எதிர்ப்பு காரணமாகவும், ரசாயன, அணு ஆயுதங்களை ரஷ்யா […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை எதிர்க்க மாட்டோம்…. அதிரடியாக தெரிவித்த செர்பியா…!!!

செர்பிய அரசு ரஷ்ய நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க முடியாது என்று மறுத்துவிட்டது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 27-ஆம் நாளாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. எனவே, உலக நாடுகள் போரை நிறுத்த வலியுறுத்தி வருகின்றன. எனினும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா நாட்டிற்கு எதிராக பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் செர்பியா, ரஷ்யா மீது பொருளாதார தடையை அறிவிக்க முடியாது என்று கூறியிருக்கிறது. இதுகுறித்து செர்பியாவின் உள்துறை அமைச்சரான அலெக்சாண்டர் வுலின் […]

Categories
உலக செய்திகள்

பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட வீரர்கள்…. பரிமாறிக்கொள்ள நாங்கள் தயார்…. ரஷ்ய மனித உரிமை ஆணையர் வெளியிட்ட தகவல்….!!

போரில் பிணைக்கைதிகளாக பிடிபட்டுள்ள ராணுவ வீரர்களை பரிமாறிக்கொள்ள ரஷ்யா தயாராக இருப்பதாக அந்நாட்டின் மனித உரிமைகள் ஆணையர் தெரிவித்துள்ளார். உக்ரேன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நான்காவது வாரமாக  நீடித்து வருகிறது.  இந்நிலையில் இருநாடுகளும் தங்களுடைய எதிரி நாட்டின் ராணுவப்படைகளை அழித்து, அவர்களின் ராணுவ வீரர்களை தொடர்ந்து மாறிமாறி கைது செய்து வருகின்றனர்.  இதற்கிடையில் உக்ரைன் ராணுவத்தினரால் பிடிபட்ட ரஷ்ய ராணுவ வீரர்களின் செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் வாக்குமூலம் வழங்குவது தொடர்பான வீடியோ ஆதாரங்களை உக்ரைன் அரசு […]

Categories
உலக செய்திகள்

இந்த விஷயத்துக்கு இந்திய விமானிகளை கூப்புடுங்க…. அதிபரிடம் எம்பிகள் வலியுறுத்தல்….!!!

உக்ரைனின் தலைநகரம் உள்ளிட்ட பல இடங்களில் உணவு, தண்ணீருக்கு வரும் நாட்களில் பஞ்சம் ஏற்படும் என்று எம்பிக்கள் எச்சரித்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா 28வது நாளாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் மனிதாபிமான நிவாரண உதவிகளை உக்ரைனுக்கு வழங்குவதற்கு இந்தியாவின் விமானிகளை பயன்படுத்த வேண்டும் என்று எம்பிக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து 20 எம்பிக்கள் அதிபர் ஜோ பைடனுக்கு எழுதிய கடிதத்தில் “உக்ரைனின் தலைநகரம் உட்பட பல இடங்களில் வரும் நாட்களில் உணவு, […]

Categories
உலக செய்திகள்

இன்று நடக்கிறது…. ஐ.நா அவையின் அவசரகால சிறப்பு அமர்வு… உக்ரைன் போர் குறித்து ஆலோசனை…!!!

உக்ரைன் போர் குறித்த ஐ.நா. அவையின் அவசரகால சிறப்பு அமர்வானது, இன்று நடக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யாவின் 3 வாரங்களுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. ரஷ்யப்படைகள், உக்ரைன் நாடு முழுக்க கைப்பற்ற தீவிரம் காட்டி வருகின்றன. இரு தரப்பிலும் நடந்த பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. போரை நிறுத்த, உலக நாடுகள்  வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், உக்ரைனில் நடக்கும் போர் குறித்த ஐ.நா. அவையின் அவசரகால சிறப்பு அமர்வுக் கூட்டமானது, இன்று நடக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனிலிருந்து வெளியேறிய 35 லட்சம் மக்கள்…. ஐ.நா வெளியிட்ட தகவல்…!!!

உக்ரைன் நாட்டிலிருந்து மொத்தமாக 35 லட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 27-வ து நாளாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் பல நகர்கள் ரஷ்யப் படைகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. எனினும், தலைநகரை கைப்பற்றுவதற்கு தீவிரம் காட்டி வருகின்றன. இந்தப் போரில் உக்ரைன் கடுமையாக சேதமடைந்திருக்கிறது. அந்நாட்டு மக்கள் லட்சகணக்கில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகிறார்கள். இந்நிலையில், உக்ரைன் நாட்டிலிருந்து தற்போது வரை 35 லட்சம் மக்கள் பக்கத்து நாடுகளில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா விவகாரம்…. இந்திய நடுங்குகிறது…. ஜோ பைடன் பகிரங்க எச்சரிக்கை….!!!

ரஷ்யாவுக்கு எதிரான உக்ரைன் விவகாரத்தில் தலையிடுவதற்கு இந்தியா நடுங்குவதாக தெரிவித்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா 27வது நாளாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இந்தப் போரினை நிறுத்துவதற்கு பல்வேறு நாடுகள் முயற்சித்த போதும் தோல்வியில் முடிந்துள்ளது. இதற்கிடையில் இந்தியா இதுவரை உக்ரைன் மீதான ரஷ்யவின் தாக்குதலுக்கு எதிரான நிலைப்பாட்டையும், ஐநா சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பிலும் பங்கேற்கவில்லை. மேலும் மென்மையான நிலைப்பாட்டையே ரஷ்யா மீது இந்தியா எடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று தொழில் நிறுவனங்களின் […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார தடையால்…. விலை அதிகரிப்பு…. சர்க்கரைக்கு போட்டி போடும் ரஷ்ய மக்கள்…!!!

ரஷ்யாவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பொருளாதார தடையால் அங்கு சர்க்கரை விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுப்பதற்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் பொருளாதார தடைகளை அறிவித்தன. மேலும், போர் காரணமாக கச்சா எண்ணையின் விலையானது, உலக சந்தையில் அதிகரித்தது. தற்போது, பொருளாதார தடை காரணமாக ரஷ்ய நாட்டில் சர்க்கரை விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. Сахарные бои в Мордоре продолжаются pic.twitter.com/hjdphblFNc — 10 квітня (@buch10_04) March […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. 10000 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு…. வெளியான தகவல்…!!!

உக்ரைன் போரில் ரஷ்யாவை சேர்ந்த 10000 வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 27-ஆம் நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் மரியுபோல் நகரத்தில் தான் கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அந்நகரத்தில் சுமார் மூன்று வாரங்களாக ரஷ்யப் படைகள் முற்றுகையிட்டிருக்கின்றன. ரஷ்யப்படையினர் அந்த நகரத்தை கைப்பற்ற தீவிரமாக முயன்று வருகிறார்கள். எனவே, உக்ரைன் நாட்டின் அதிகாரிகள், அந்த நகரத்தை சேர்ந்த மக்களை வெளியேற்றுவதற்கு  முயன்றனர். எனினும், தொடர் தாக்குதல்களால் மக்களை வெளியேற்ற […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் கடத்தப்பட்ட 2389 குழந்தைகள்…. ரஷ்யா மீது அதிரடி குற்றச்சாட்டு…!!!

உக்ரைன் அரசு, ரஷ்யா தங்கள் நாட்டை சேர்ந்த 2 ஆயிரம் குழந்தைகளை கடத்தி சென்றதாக  அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 27-ஆம் நாளாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இரு தரப்பிலும் பல முறை பேச்சுவார்த்தைகள் நடந்த போதும் எந்த முடிவும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொள்ளும் தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த போரில் உக்ரைன் நாட்டின் இரண்டாயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் ரஷ்யப் படைகளால் கடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

விளாடிமிர் புடினின் ஆட்சியை கவிழ்க்க முயற்சி…. உக்ரைன் உளவுத்துறை வெளியிட்ட தகவல்…!!!

ரஷ்ய நாட்டின் பணக்காரர்கள் அதிபர் விளாடிமிர் புடினின் ஆட்சியை கவிழ்க்க முயல்வதாக உக்ரைன் நாட்டின் உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது கடுமையாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. எனவே, ரஷ்யா மீது பொருளாதார தடைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும், ரஷ்யாவில் உள்ள அலிகார்க்ஸ் என்ற குழுவின் சொத்துக்கள் பல நாடுகளில் முடக்கப்பட்டிருக்கின்றன. இந்த குழு அந்நாட்டின் அரசை மறைமுகமாக கட்டுப்படுத்தும் அதிகாரமும், அரசாங்க முடிவுகளை தீர்மானிக்கக் கூடிய அதிகாரமும் பெற்றிருக்கிறது. இந்நிலையில், இந்த அலிகார்க்ஸ் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா செய்வது மிகப்பெரிய போர் குற்றம்…. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்…!!!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள், ரஷ்ய நாட்டின் மீது மேலும் பொருளாதார தடைகள் அறிவிப்பது தொடர்பில் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். உக்ரைன் நாட்டில் தொடர்ந்து ரஷ்யா தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. எனவே, ஐரோப்பிய நாடுகள் அந்நாட்டின் மீது அதிகமாக பொருளாதார தடைகளை அறிவிப்பது  தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். இதில் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை கொள்கைக்கான செயலாளரான ஜோசஃப் போரெல் பேசியதாவது, உக்ரைன் நாட்டில் மரியுபோல் நகரில் அனைத்தும் அழிக்கப்பட்டிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனின் இந்த பகுதிகள் கைப்பற்றப்பட்டது….பிரிட்டனின் உளவு பிரிவு வெளியிட்ட தகவல்….!!!

ரஷ்யா உக்ரைனின் பல இடங்களை கைப்பற்றியுள்ளதாக,  பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவு பிரிவு தெரியப்படுத்தியுள்ளது. ரஷ்யா உக்ரைன் இடையிலான போர்  தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.மேலும் உக்ரைனின் கிழக்கு பகுதியை ரஷ்ய ராணுவ படைகள் முழுவதும் கைப்பற்றியுள்ளதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவு பிரிவு தெரியப்படுத்தியுள்ளது. அதன்படி கைப்பற்றப்பட்ட நகரங்களின் மீது ரஷ்ய படைகள் கடந்த வாரம் குண்டு வீசி தாக்குதல்  நடத்தியுள்ளனர்.  இந்த  தாக்குதலில்  115 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் 140 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளதாகவும்  உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படைகள் மேற்கொண்ட தாக்குதல்…. கடும் சேதமடைந்த உருக்கு ஆலை அடைப்பு…!!!

ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் நாட்டில் இருக்கும் மரியுபோல் நகரத்தின், மிகப்பெரிய உருக்கு ஆலை அடைக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நான்கு வாரங்களுக்கும் அதிகமாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டின் பல நகரங்களை ஆக்கிரமித்துள்ள ரஷ்யா, தலைநகர் கீவ், கார்கிவ்  மற்றும் மரியுபோல் போன்ற நகர்களை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் உக்ரைன் நாட்டிலிருந்து தற்போது வரை ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் மறைந்திருப்பதாக அகதிகளுக்கான ஐ.நா […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படைகளின் ஏவுகணை தாக்குதல்…. கூலிப்படையை சேர்ந்த 100 பேர் உயிரிழப்பு…!!!!

உக்ரைன் நாட்டில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதில் கூலிப்படையை சேர்ந்த 100 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டிலுள்ள ஜைட்டோமைர் என்ற பிராந்தியத்தில் சிறப்பு நடவடிக்கை படைகளுக்குரிய பயிற்சி மையம் இயங்கி கொண்டிருக்கிறது. அதில் பிற நாட்டை சேர்ந்த கூலிப்படையினர் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில் ரஷ்ய படைகள் மேற்கொண்ட தாக்குதலில் அந்த பயிற்சி மையத்தின் மீது துல்லியமாக ஏவுகணைகள் வீசப்பட்டிருக்கிறது. இதில் அந்த கூலிப்படையை சேர்ந்த 100 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதுபற்றி ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது, உக்ரைன் நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படைகளின் ஆக்ரோஷம்…. உக்ரைனில் கடும் சேதமடைந்த குடியிருப்புகள்…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யப்படை நடத்திய தாக்குதல்களை தெரியப்படுத்தும் விதமாக தற்போது செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டில் ரஷ்யப்படைகளின் தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது. போரின் மையப்புள்ளியாக இருக்கும் மரியுபோல் நகரை சேர்ந்த மக்கள் தங்கியுள்ள குடியிருப்புகள், அடுக்குமாடி கட்டிடங்கள், கடைகள் போன்றவை பலத்த சேதமடைந்துள்ளதை செயற்கைகோள் புகைப்படங்கள் காட்டுகின்ற்ன. மாக்சர் டெக்னாலஜிஸ் என்னும் அமெரிக்க தனியார் நிறுவனத்தால் இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. கிவ் நகர் மற்றும் அதை சுற்றியிருக்கும் நகர்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் இதில் தெரிகிறது. மோசுன், […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனின் ஆயுதக்கிடங்கு அழிப்பு…. ரஷ்யப்படை வெளியிட்ட தகவல்…!!!

ரஷ்ய படை, உக்ரைனின் மேற்கு பகுதியில் இருக்கும் ஆயுதக்கிடங்கை அழித்ததாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் முக்கிய நகர்களில் ரஷ்ய படைகள், தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில் நேற்று உக்ரைனின் மேற்கு பகுதியில் இருக்கும் ஆயுதக்கிடங்கை அழித்ததாக ரஷ்யப்படைகள் தகவல் வெளியிட்டிருக்கிறது. உக்ரைன் அரசு, தங்கள் ஆயுதக் கிடங்கின் மீது ஹைபர்சோனிக் ஏவுகணையை ரஷ்யா ஏவியதாக குற்றம் சாட்டியுள்ளது.

Categories
உலக செய்திகள்

இது பேச்சுவார்தைக்கான நேரம்…. ரஷ்ய அதிபருக்கு அழைப்பு விடுக்கும் உக்ரைன் அதிபர்…!!!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார். உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகள் கடுமையாக போர் தொடுத்து வருகின்றன. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், அவர் நான் சொல்வதை தற்போது அனைவரும் கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன். குறிப்பாக ரஷ்ய அதிபர் நான் கூறுவதைக் கேட்க வேண்டும். இது சந்திப்பு மேற்கொள்வதற்கான சமயம். பேச்சுவார்த்தைக்கான நேரம். […]

Categories

Tech |