கிரிமியா குண்டுவெடிப்புகளால் ரஷ்யா கவலை அடைந்துள்ளதாக இங்கிலாந்து உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டில் ஒரு பகுதியாக விளங்கிய கிரிமியாவை ரஷ்ய ஆக்கிரமித்துள்ளது. அங்குள்ள ரஷ்யாவின் ஆயுதக்கிடங்கு, நேற்று முன்தினம் குண்டுவெடிப்புகளால் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியை சேர்ந்த 3 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீதான போர் 6-வது மாதங்களாக தொடர்ந்து நீடிக்கும் நிலையில் கிரிமியாவில் உள்ள ரஷ்யாவின் ஆயுதக்கிடங்கில் நடந்த குண்டுவெடிப்புகள் அதிர வைத்துள்ளன. இந்த குண்டுவெடிப்புகளில் சதி […]
