Categories
உலக செய்திகள்

ஜெர்மனில் கடுமையாக உயர்ந்த பண வீக்கம்… 50 வருடங்களில் இல்லாத வகையில் அதிகரிப்பு…!!!

ஜெர்மன் நாட்டில் கடந்த 50 வருடங்களில் இல்லாத வகையில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா, போர் தொடுக்க தொடங்கியவுடன், சர்வதேச நாடுகள் ரஷ்ய நாட்டின் மீது கடும் பொருளாதார தடைகளை அறிவித்தன. எனவே, ரஷ்யா கச்சா எண்ணெயின் விலையை அதிகரித்தது. இதனால், அந்நாட்டிலிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் எண்ணெய், சமையல் எரிவாயு, எரிபொருள் போன்றவற்றின் விலை வெகுவாக அதிகரித்தது. மேலும், […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்போர் எதிரொலி…. கடனாளியான நாடுகள்… கடும் நிதிநெருக்கடி…!!!

இலங்கையை தொடர்ந்து பல நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி பல சிக்கல்களை சந்தித்து கொண்டிருக்கிறது. இலங்கையில் பொருளாதாரம் மீண்டு வர இன்னும் நான்கு வருடங்கள் ஆகும் என்று சர்வதேச நிதியம் கூறி இருக்கிறது. இலங்கையை போலவே இன்னும் சில நாடுகளும் கடும் கடன் நெருக்கடியில் மாட்டிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக நிதி நெருக்கடியில் சிக்கி கடன்கள் பெற்ற நாடுகளில் அர்ஜென்டினா முதலிடத்தில் இருக்கிறது. அடுத்ததாக உக்ரைன் நாடு, ரஷ்ய படையெடுப்பால் மிக மோசமான நிலையில் இருக்கிறது. திருப்பி […]

Categories
உலக செய்திகள்

பரிதாப நிலையில் மரியுபோல் நகர்…. விதிகளில் கிடக்கும் சடலங்கள்…. கழிவுநீரை குடிக்கும் மக்கள்…!!!

உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகர், கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவிற்கு புகழ் வாய்ந்ததாக இருந்த நிலையில் தற்போது அங்கு மீதமிருக்கும் மக்களின் நிலை பரிதாபமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் தலைநகரை ஆக்கிரமிக்க ரஷ்ய படையினர் கடுமையாக முயன்றனர். ஆனால் அது நடக்காததால் மரியுபோல என்னும் துறைமுக நகரத்தை அழிக்க தொடங்கினர். ரஷ்யாவின் கொடூரத் தாக்குதல் காரணமாக, அந்தநகரில் இருக்கும் வீடுகள் மண் மேடாகியது.  ரஷ்ய படையினர் அந்நகரத்தை விட்டு வெளியேறி விட்டனர். எனினும், அங்கிருந்து சடலங்கள் மீட்கப்படவில்லை. […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி…. எரிசக்தி விலை உயர்வு…. ஸ்பெயினில் நிதி நெருக்கடி….!!!

ஸ்பெயின் நாட்டில் எரிசக்தி விலை உயர்வால் மக்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள். உக்ரைன்-ரஷ்ய போரால் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் இழப்பை சந்திருக்கின்றன. இதில் ரஷ்ய நாட்டிடமிருந்து இறக்குமதியாகும் எரிசக்தியை நம்பி இருந்த நாடுகள் பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. அதன்படி, ஸ்பெயினில் பொருளாதார தட்டுப்பாடு, பணவீக்கம் போன்றவற்றால் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அந்நாட்டில் இப்போது கோடைகாலம் என்பதால் மின் நுகர்வு உச்சத்தில் இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே, மின் கட்டணங்கள் உயர்ந்து மக்கள் அதிக அளவில் பாதிப்படைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி […]

Categories

Tech |