சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான தூதராக இந்தியாவை சேர்ந்த ரஷாத் ஹூசைன் நியமிக்கப்பட்டுள்ளார் . அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் பல்வேறு தலைமைப் பொறுப்புகளை பெற்று வருகின்றனர். அதன்படி அமெரிக்க வழக்கறிஞரான இந்தியாவை சேர்ந்த ரஷாத் ஹூசைன் என்பவரை சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான தூதராக நியமிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகை தரப்பில் கூறும்போது ,’மிகவும் முக்கியமான இந்தப் பதவிக்கு இஸ்லாமியர் ஒருவர் நியமிக்கப்படுவது […]
