பட்டாசுகளை ரயிலில் எடுத்து சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவது வழக்கம். அதேபோல் வெளியூர்களில் வேலை செய்யும் பெரும்பாலான மக்கள் பட்டாசுகளை வாங்கிக்கொண்டு ரயில்களில் தங்களது சொந்த ஊருக்கு வருகின்றனர். ஆனால் ரயிலில் பட்டாசு, டீசல், பெட்ரோல், போன்ற தீப்பற்றும் பொருட்களை எடுத்துச் செல்ல அரசு தடை விதித்துள்ளது. மேலும் இதனை கண்காணிக்கும் வகையில் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது. இது […]
