ரயில்களை தனியார்மயமாக்கும் திட்டங்களை தெற்கு ரயில்வே கைவிட வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தாராளமயமாக்கல் என்பதே தற்போது தனியார்மயமாக்கல் என்பது போல் ஆகிவிட்டது. தொடர்வண்டி சேவைகளை தனியார் மயமாகும் நடவடிக்கைகள் கடந்த ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் 109 வழித்தடங்களில் 150 தொடர்வண்டிகளை தனியார் மயமாக்க மத்திய அரசு தீர்மானம் செய்து உள்ளது. அவற்றில் சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, மும்பை, […]
