வங்காளதேசத்தில் பஸ் மீது ரெயில் மோதி ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். வங்காளதேசத்தில் சிட்டகாங் மாவட்டத்தில் மிர்ஷாராய் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஆளில்லா ரெயில்வே கிராசிங்கை பஸ் கடக்க முயலும் போது எதிர்பாராத விதமாக எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து பஸ் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீடகப்பட்டு சிட்டகாங் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]
