பூடான், மியான்மார் நாடுகளுக்கு இந்திய ரயில்வே மேற்கொள்ள இருக்கும் புது திட்டங்கள் குறித்து வட கிழக்கு எல்லை ரயில்வேயின் பொதுமேலாளர் அன்ஷுல் குப்தா கூறினார். அவற்றில் இந்தியா-மியான்மார்-பூடான் ரயில் இணைப்பு குறித்து பல்வேறு விபரங்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அன்ஷுல் குப்தா கூறியிருப்பதாவது “மணிப்பூரில் மியான்மர் எல்லை வரையுள்ள மோரேயில் ரயில் பாதை அமைப்பதற்கான கணக்கெடுப்பு முடிந்து, மோரே வரையிலான ரயில்பாதை 2 முதல் 2.5 வருடங்களில் முடிக்கப்படும். வட கிழக்கு பிராந்தியத்தில் இந்திய ரயில்வேயின் விரிவாக்கத்தின் ஒருபகுதியாக […]
