உத்தரபிரதேசத்தின் பிரோசாபாத் நகர ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் போகும் தண்டவாளத்தின் மீது பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று எதிர்திசையிலிருந்து வந்து கொண்டிருந்தது. இதை கவனித்த அப்பெண் தண்டவாளத்தில் இருந்து நடைமேடைக்கு ஏற முயற்சி செய்துள்ளார். எனினும் அவரால் உடனே மேலே வர முடியவில்லை. ரயில் கடந்து செல்ல ஒரு சில வினாடிகளே இருந்த நிலையில், அப்பெண் நிலைமையை உணர்ந்து உதவிகேட்டு கத்தியுள்ளார். இந்நிலையில் ரயில்வே அதிகாரி […]
