ரயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணம் சிதைந்த நிலையில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தென்காசி ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இறந்து கிடந்த அந்த நபருக்கு 45 வயது இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர் நீல நிறத்தில் கட்டம் போட்ட சட்டையும், […]
