ரயில்வே அதிகாரியை கார் ஏற்றி கொலை செய்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கொம்பன்குளம் பகுதியில் செந்தாமரைக்கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சூப்பிரண்டாக பணியாற்றி வந்துள்ளார். இவர் பணி காரணமாக நெல்லை கே.டி.சி. நகரில் குடும்பத்துடன் தங்கி இருந்துள்ளார். கடந்த 16-ஆம் தேதி செந்தாமரைக்கண்ணன் பணி முடித்துவிட்டு புளியங்குளத்தின் அருகில் வரும் பொழுது ஒரு கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த செந்தாமரைக்கண்ணன் […]
