தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ரயில் சேவை முடக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் குறிப்பிட்ட அளவிலான ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன. முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் நீக்கப்பட்டு, ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டது. அதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், முன் பதிவு செய்யாமல் உடனடி டிக்கெட் மூலம் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ரயில்வே துறைக்கு கோரிக்கை எழுந்தது. […]
