கேரளாவில் மாவலி எக்ஸ்பிரஸ் ரயிலானது தலைநகர் திருவனந்தபுரத்திற்கும் கர்நாடக மாநில மங்களூவுருக்கும் இடையே சேவையளிக்கக் கூடிய இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயிலாகும். இந்த ரயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மங்களூரில் இருந்து திருவனந்தபுரதிற்கு வந்து கொண்டிருந்தபோது கன்னூரில் இருந்து பயணம் செய்த ஒரு பயணி டிக்கெட் இல்லாமல் பயணம் செய்துள்ளார். இதையடுத்து ரயிவே போலீசாரின் உதவியுடன் அந்த பயணியின் கைகளை கட்டி கழிவறை அருகில் கீழே உட்கார வைத்த நிலையில் போலீசார் தொடர்ந்து கால்களால் எட்டி உதைத்துள்ளார். […]
