தாம்பரம் அருகே இரும்புலியூர் பகுதியில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதனால் வெளியூரில் இருந்து சென்னை வரும் ரயில்கள் அனைத்தும் தாமதம் ஆனது. இன்று அதிகாலை 4.45மணி அளவில் தண்டவாளத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டது. அதனை ரயில்வே அதிகாரிகள் உரிய நேரத்தில் கண்டறிந்தனர். இதையடுத்து வெளியூரில் இருந்து சென்னை வரும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அதன்பிறகு தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை ரயில்வே அதிகாரிகள் சிறிது நேரத்தில் சரி செய்தனர். இதனையடுத்து வெளியூரில் இருந்து சென்னை வரும் ரயில்கள் மீண்டும் […]
