சீர்காழி அருகே ரயிலில் அடிபட்டு பெண் உயிரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி அருகே கன்னியாக்குடி வடக்கு தெருவை சேர்ந்த விஜய் என்பவரின் மனைவி விஜயா. இவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை அதிகாலை நேரத்தில் அவரது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள ரயில் தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு விஜயா உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை ரயில்வே […]
