தமிழ்நாட்டில் மத்திய, மாநில அரசு பணிகளுக்கு லட்சக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் அரசு வேலை அனைவரது வாழ்க்கை இலட்சியங்களில் ஒன்றாக இருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் அரசு வேலை தொடர்பான அறிவிப்புகள் வெளியாகாமல் இருந்தது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரயில்வே வேலைக்கு தயாராகி வருவோருக்கு விழிப்புணர்வு பதிவை தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. […]
