ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி பணத்தை இழந்த இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை ரயில் நிலையம் அடுத்த கீரைத்தோட்டை எனும் பகுதியின் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் இளைஞர் ஒருவர் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து திருச்சியிலிருந்து சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே காவல்துறையினர் நிகழ்வு இடத்தில் பார்த்த போது இளைஞர் ஒருவர் உயிரிழந்து கிடந்தார். […]
