ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணியானது ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றியடைந்தது. துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலாவதாக விளையாடிய இந்தியஅணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்து குவித்தது. முன்னாள் கேப்டன் விராட்கோலி 1000 நாட்களுக்கு பின் சர்வதேச போட்டியில் சதமடித்து முத்திரை பதித்தார். அவர் 61 பந்தில் 122 ரன்னும் (12 பவுண்டரி, 6 சிக்சர்), கேப்டன் லோகேஷ் ராகுல் 41 பந்தில் 62 ரன்னும் (6 பவுண்டரி, 2 […]
