சர்வதேச அளவில் உலக சுகாதார நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஜூன் 14 ஆம் தேதி உலக இரத்தக் கொடையாளர்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இரத்த வகைகள் குறித்து அறியப்படாத காலத்தில் இரத்தம் தேவைப்பட்ட நோயாளிகளைக் காப்பாற்ற இயலாமல் போனது. ரத்த பரிமாற்றத்திலும் எதிர்விளைவுகள் ஏற்பட்டன. 1901 ஆம் ஆண்டில் லேன்ஸ்டைஜர் என்பவர் ரத்தத்திலுள்ள A, B, AB, O வகைகளை முதன் முதலில் கண்டறிந்தார். இதன் மூலம் மனித ரத்தத்தை மற்றொருவருக்கு செலுத்துவது சாத்தியமானது. ஒருவர் தன் வாழ்நாளில் […]
