விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் ஆன ஆன்டன் பாலசிங்கத்தை குண்டுவெடிப்பு நிகழ்த்தி கொல்ல முயன்றதாக தொழில் அதிபர் வி.கே.டி.பாலன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. சென்னை பேஷன் நகரில் ஆண்டன் பாலசிங்கம் தங்கியிருந்த வீட்டில் 1985 ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு நிகழ்வு தொடர்பாக வி.கே.டி.பாலன் உள்பட 7 பேர் மீது அப்போது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் 2 பேர் தலைமறைவாகி விட்ட நிலையில் ராதாகிருஷ்ணன் அரசு […]
