நடிகர் ரஜினிகாந்த கட்சி தொடங்குவது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் நான் என்னுடைய அரசியல் குறித்த முடிவை கூறுவேன் […]
