பெரியாரை விமர்சித்து பேசியர்வள் எல்லோரும் காணாமல்போயுள்ளனர். ஆனால், பெரியார் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் எனச் செய்தியாளர்கள் சந்திப்பில் கி. வீரமணி கூறியுள்ளார். மதுரை ஹர்வேய்பட்டியைச் சேர்ந்த மறைந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ராமசாமி என்பவரின் உடலை, மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஆராய்ச்சிக்காக தானம் வழங்கும் நிகழ்வில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி கலந்துகொண்டார். அப்போது செய்தியாளரிடம் பேசிய அவர், “நீட் தேர்வால் எட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. நீட் ரத்து செய்யப்பட வேண்டும். மத்திய கல்விக் […]
