ரஜினி ட்விட்டர் வீடியோ நீக்கம் செய்யப்பட்டதற்கு ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க , கட்டுப்படுத்த பிரதமர் மோடி நாளை ஊரடங்கு உத்தரவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஆதரித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் வீடியோ பதிவிட்டு இருந்தார். அதில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது ஸ்டேஜில் உள்ளது. அது மூன்றாவது ஸ்டேஜிக்கு போய்விடக்கூடாது. வெளியில் மக்கள் நடமாடும் இடத்தில் இருக்கும் கொரோனா வைரஸ் 12 லிருந்து 14 மணிநேரம் […]
