தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் வைத்து பதவி ஏற்பு விழா நடைபெற்றது. அதன் பிறகு அமைச்சர் உதயநிதிக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு நலத்துறை ஒதுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் உதயநிதி அமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோரும் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்த டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளனர். […]
