ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது மியூசிக் ஆல்பம் தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கும் தனுஷுக்கும் கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. யாத்ரா, லிங்கா என்ற 2 மகன்கள் இவர்களுக்கு உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் அண்மையில் தங்களின் 18 ஆண்டுகால திருமண வாழ்வு முடிவுக்கு வந்ததாகவும், இருவரும் பிரிய உள்ளதாகவும் அறிவித்தனர். இச்சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது. […]
