தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் மதுபானங்ளுக்கு ரசீது கட்டாயம் வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் சார்பாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,” டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில், உயர்ரக மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பில் புத்தகம், தினசரி சட்டா, சரக்கு இருப்பு மற்றும் விற்பனை உள்ளிட்ட 21 பதிவேடுகளை முறையாக நாள்தோறும் பராமரிக்கவேண்டும். ஆய்வின் போது இந்த ஆவணங்கள் பராமரிக்கப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். […]
