திண்டிவனத்தில் நடந்த ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு முன்னறிவிப்பு இல்லாமல் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பங்கேற்றது புதுமண தம்பதிக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. விழுப்புரம் மாவட்ட விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின் இளைஞரணி தலைவராக இருக்கும் புகழேந்தி என்பவருக்கும் மகாலட்சுமி என்ற பெண்ணுக்கும் திண்டிவனத்தில் இருக்கும் ஒரு மண்டபத்தில் திருமணம் நடந்தது. நேற்று இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. அப்போது, ரசிகர்களால் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி, முன்னறிவிப்பின்றி திடீரென்று வாகனத்தில் வந்து […]
