தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகர் விஜய் சென்னை பனையூரில் உள்ள ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த சந்திப்பு நிகழ்வின்போது அகில இந்திய விஜய் மக்கள் இயக்க கழகத்தின் தலைவரான புஸ்ஸி ஆனந்த் நடிகர் விஜய்யின் காலில் விழுந்தார். […]
