நடிகர் மகேஷ்பாபு தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களிடம் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். ஆகஸ்ட் 9ஆம் தேதி தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ்பாபுவின் பிறந்த நாளாகும். அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தற்போதே கொண்டாடத் தொடங்கியுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் ஹைதராபாத்தில் அதிகரித்து வருகிறது. எனவே ஒரு சிறு அறிக்கையை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு மகேஷ்பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறுகையில் ” அன்பான என் ரசிகர்களுக்கு என் கனிவான வேண்டுகோள். நீங்கள் […]
