கொட்டப்பட்ட ரசாயன கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள சுண்ணாம்புக்கல் மேடு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளம் தோண்டி வெள்ளை நிற மண் தொடந்து கொட்டப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக அந்த வெள்ளை நிற மண்ணில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் விசாரணை செய்ததில் ரசாயன கழிவுகளுடன் மண் பள்ளத்தில் கொட்டப்பட்டு வந்ததாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் […]
