ரசாயன தொழிற்சாலையில் கரும்புகை வெளியேறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள கோவிலூர் ரசாயன தொழிற்சாலையில் பலத்த சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அந்த தொழிற்சாலையில் கரும்புகை வெளியேறியதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அங்கு கூடினர். இதுகுறித்து தகவலறிந்த காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு, தாசில்தார், ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களை அமைதிப்படுத்தினர். அதன்பின் ரசாயன தொழிற்சாலைக்குள் அதிகாரிகள் சென்று அங்குள்ளவர்களிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அதில் ஆலை தரப்பினர் […]
