திருவள்ளூர் அருகே மாதவரம் ரவுண்டானா பகுதியில் ரசாயனக் கிடங்கில் நேற்று மாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டள்ளனர். 15 தீயணைப்பு வாகனங்கள், 20 மெட்ரோ தண்ணீர் லாரிகள் உதவியுடன் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. மருந்து தயாரிப்பதற்கான ரசாயன பொருட்கள் வெடித்து சிதறியதால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் ஸ்கைலிப்ட் இயந்திரத்தைக் கொண்டு தீ அணைக்கும் பணி நடைபெற்றது. எனினும் தீயை […]
