பெண்ணை கொலை செய்து சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி வீசி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரங்கம்பாளையம் கே.கே.நகர் லட்சுமி கார்டன் பகுதியில் ஒரு காலியான இடத்தில் சாக்குமூட்டை ஒன்று கிடந்தது. அந்த சாக்கு மூட்டைக்குள் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தனர். அப்போது சாக்குமூட்டைக்குள் 45 வயதுடைய […]
