உருவ கேலியால் மனமுடைந்த சிறுவன் குவாடனுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியை தொடங்கி வைக்க வைத்து கவுரவப்படுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை சேர்ந்த 9 வயது சிறுவன் குவாடன் பெய்ல்ஸ். பிறப்பிலேயே மிகவும் அரிதான நோயினால் பாதிக்கப்பட்ட குவாடனின் கை கால்கள் போதிய வளர்ச்சி இன்றி குட்டையாகவும், தலை மட்டும் பெரிதாகவும் உள்ளது. இதனால் பள்ளியில் உடன் படிக்கும் மாணவர்களின் கேலிக்கு ஆளானான். ஒரு கட்டத்தில் கேலி கிண்டல்களை பொறுக்க முடியாமல், தன்னை கத்தியால் குத்தி […]
