வீட்டு வேலைக்காரர் ஒருவர் கணவன்,மனைவி இருவரையும் சுத்தியலால் அடித்துக் கொன்று பணத்தை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் நகரின் புறநகர் பகுதியில் உள்ள பிடாடி அருகே உள்ள வில்லாவில் இரட்டைக்கொலை நடந்துள்ளது. இந்த பகுதியில் ரகுராஜன்(70) மற்றும் அவரது மனைவி ஆஷா(63) என்ற தம்பதியர் வாழ்ந்து வந்தனர். இவரது வீட்டில் வேலை செய்பவர் ஜோகிந்தர் குமார் யாதவ் (23). இவர் ஓய்வுபெற்ற விமானப்படை விமானிஆவார். இவரது வேலை தோட்டத்தையும், வீட்டு நாய்களையும் பராமரித்து வருவதாகும். […]
